search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagalapuram Vedhanaarayana Perumal"

    • நாகலாபுரம் வேதநாராயணசுவாமி ஆலயம் சில யுகங்களுக்கு முற்பட்டதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.
    • அந்த 14 சிலைகளும் மிகவும் கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.

    நாகலாபுரம் வேதநாராயணசுவாமி ஆலயம் சில யுகங்களுக்கு முற்பட்டதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.

    அந்த வகையில் திருப்பதி கோவிலுக்கும் முன்பே இந்த ஆலயம் அமைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதியில் மிகப்பெரிய கோட்டை கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் ஆலயத்துக்குள் பல தடவை பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளன.

    கடந்த 2003ம் ஆண்டு மின்சார வயர்களை புதைப்பதற்காக ஆலயத்தின் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டினார்கள்.

    அப்போது அங்கு பஞ்சலோக சிலை ஒன்று புதைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த இடத்தில் மேலும் தோண்டிய போது அடுத்தடுத்து சிலைகள் வந்து கொண்டே இருந்தன.

    மொத்தம் 14 சிலைகள் அந்த பகுதியில் புதைந்து கிடைத்திருந்தன.

    அந்த 14 சிலைகளும் மிகவும் கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.

    பஞ்சலோகத்தால் தயாரிக்கப்பட்ட அந்த 14 சிலைகளும் எந்தெந்த கடவுள்கள் என்பது முதலில் அந்த ஊர் மக்களுக்கு தெரியாமல் இருந்தது.

    இதையடுத்து தொல்லியல் துறை அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தனர்.

    அந்த 14 பஞ்சலோக சிலைகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.

    ஆனால் நாகலாபுரம் கிராம மக்கள் அதை ஏற்கவில்லை.

    14 பஞ்சலோக சிலைகளையும் ஆலயத்துக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இதையடுத்து அந்த 14 சிலைகளும் தற்போது நாகலாபுரம் ஆலயத்தின் கருவறை அருகே மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் அந்த 14 சிலைகளில் ஒன்று அர்ஜூனனின் உருவ சிலை என்று தெரிய வந்துள்ளது.

    எனவே மற்ற சிலைகள் அனைத்தும் பஞ்ச பாண்டவர்களாக இருக்கலாம். அல்லது மகாபாரத கதையுடன் தொடர் புடையவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதுவரை அந்த பஞ்ச லோக சிலைகளின் ரகசியங்களை யாரும் கண்டுபிடிக்க இயலவில்லை.

    அந்த சிலைகளை புகைப்படம் எடுக்ககூட அர்ச்சகர் அனுமதி வழங்கவில்லை.

    சுமார் 2 அடி உயரம் உள்ள அந்த சிலைகள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை.

    என்றாலும் இப்போதும் புத்தம் புதிது போல காட்சி அளிக்கின்றன.

    இதேபோன்று அந்த ஆலயத்தில் மேலும் சில இடங்களிலும் சிலைகள் புதைந்து கிடக்கலாம் என்று தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    உரிய முறையில் ஆய்வு செய்தால் பல சரித்திர உண்மைகளை இந்த ஆலயத்தின் மூலம் கண்டு பிடிக்க முடியும் என்பது நாகலாபுர மக்களின் நம்பிக்கையாகும்.

    ×