என் மலர்
நீங்கள் தேடியது "Muthuratnam Arena school"
- இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார்
- 7-வது நாளாக பாண்டி மெரினா கடற்கரை ஓரத்தில் தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
முகாமில் 7-வது நாளாக பாண்டி மெரினா கடற்கரை ஓரத்தில் தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடா ஜலபதி கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். புதுவை மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்துகொண்டு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
இதில் 2 டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப்பட்டது. இதனை நகராட்சி அதிகாரி துளசிரா மனிடம் ஒப்படைத்தனர்.
இந்தத் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளிடமும், பார்வையாளர்களிடமும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியின் ஏற்பாடு களை பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் செய்திருந்தனர்.






