என் மலர்
நீங்கள் தேடியது "mugunth"
- அதே சமயம் மற்றொரு இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தகுதி சுற்றில் இருந்தே விளையாட உள்ளார்.
- 5-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி வருகிற 31-ந்தேதி முதல் ஜனவரி 7-ந்தேதி வரை புனேயில் நடக்கிறது.
புனே:
5-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி வருகிற 31-ந்தேதி முதல் ஜனவரி 7-ந்தேதி வரை புனேயில் நடக்கிறது. தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான இதில் குரோஷியாவின் மரின் சிலிச், எமில் ருசுவோரி (பின்லாந்து), ஜான்ட்சுல்ப் (நெதர்லாந்து), கிரஜினோவிச் (செர்பியா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த நிலையில் தரவரிசையில் 340-வது இடத்தில் உள்ள சென்னையைச் சேர்ந்த எஸ்.முகுந்துக்கு இந்த போட்டியில் நேரடியாக பிரதான சுற்றில் களம் இறங்க வகை செய்யும் 'வைல்டு கார்டு' சலுகை வழங்குவதாக போட்டி அமைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர். அதே சமயம் மற்றொரு இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தகுதி சுற்றில் இருந்தே விளையாட உள்ளார்.






