என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mother of the Sea"

    • கடல் அன்னைக்கு அபிஷேக பெருவிழா புதுவை நல்லவாடு கடற்கரையில் நடைபெற்றது.
    • செயலாளர்கள் சுகுமார், ஜெகதீசன், மாவட்ட தலைவர் செல்வகுமார், நிர்வாகி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் 60 நாட்கள் தடைகாலம் முடிந்து நேற்று முன் தினம் முதல் மீனவர் கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழ் நாடு மீனவர் பேரவையும் புதுவை மாநிலம் சார்பில் சமூத ஒற்றுமை ஓங்கிடவும் கடல்வளம் மற்றும் மீனவர் நலம் பெருகிடவும் மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்திட வேண்டி கடல் அன்னைக்கு அபிஷேக பெருவிழா புதுவை நல்லவாடு கடற்கரையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நல்லவாடு மீனவ பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக மீன் வளத்துறை இயக்குனர் பாலாஜி மற்றும் கிராம அலுவலர் சிவபிரகாசம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மீனவர் பேரவையின் புதுவை மாநில தலைவர் புகழேந்தி அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் ராஜேஷ், மற்றும் பொதுச்செயலாளர்கள் சிட்டி பாபு, குணசீலன், ஆலோசகர் புத்துப்பட்டார், செயலாளர்கள் சுகுமார், ஜெகதீசன், மாவட்ட தலைவர் செல்வகுமார், நிர்வாகி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×