என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mirza Fakhrul Islam Alamgir"

    • ஷேக் ஹசீனாவின் குற்றங்களை மக்கள் சிறியதாக கருதவில்லை.
    • அவரது ஆட்சி வங்காளதேசத்தின் சுதந்திரத்தை பலவீனப்படுத்தியது.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் அரசு வேலைகளில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் 600-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதற்கிடையே ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு, போராட்டத்தை முறியடிக்க சதி தீட்டம் உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று வங்காளதேச முக்கிய எதிர்க்கட்சியான பி.என்.பி கட்சி இந்தியாவிடம் வலியுறுத்தி உள்ளது.

    இதுகுறித்து பி.என்.பி கட்சியின் பொதுச்செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் கூறியதாவது:-

    ஷேக் ஹசீனாவை வங்காளதேச அரசாங்கத்திடம் சட்டப்பூர்வமாக ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு கோரிக்கை விடுக்கிறோம். அவர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். இதனால் விசாரணையை அவர் எதிர்கொள்ளட்டும்.

    ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைய அனுமதிக்கப்படுவது ஜனநாயகக் கொள்கைகளை நிலை நிறுத்துவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை.

    ஷேக் ஹசீனாவின் குற்றங்களை மக்கள் சிறியதாக கருதவில்லை. அவரது ஆட்சி வங்காளதேசத்தின் சுதந்திரத்தை பலவீனப் படுத்தியது. கடந்த 15 ஆண்டுகளாக நாட்டின் முன்னேற்றத்தைத் தடுத்தது. அவரது தவறான ஆட்சியால் தேசத்துக்கு கடன் சுமை ஏற்பட்டது. நாட்டின் அனைத்து நிறுவனங்களும் அழிக்கப்பட்டன.

    ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் அளிப்பதன் மூலம் ஜனநாயகத்தின் மீதான உறுதிப்பாட்டை இந்தியா கடைப்பிடிக்க வில்லை. இந்தியாவில் தங்கியிருந்து, வங்காள தேசத்தில் நடந்த புரட்சியை முறியடிக்க பல்வேறு சதிகளை அவா் தொடங்கியுள்ளாா்.

    வங்காளதேச மக்களின் எதிரிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதன் மூலம் இந்தியா, மக்களிடம் அதிக அன்பைப் பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×