என் மலர்
நீங்கள் தேடியது "Minister Rangaswamy"
- 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
- பிறந்தநாளையொட்டி ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், வக்கீலுமான ராம் முனுசாமி தனது பிறந்த நாளை காந்தி வீதியில் உள்ள அவரது வீட்டில் கொண்டாடினார்.
ராம் முனுசாமிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரியங்கா, செந்தில் குமார், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், எஸ்.பி.சிவக்குமார், அரசு செயலர் நெடுஞ்செழியன், முதல்-அமைச்சரின் தனிச்செயலர் அமுதன், டாக்டர் ராஜேஷ் குமார், வக்கீல் சிவகணபதி மற்றும் தொழிலதிபர்கள் ஜெகதீசன், அம்பல வாணன், கணேஷ், கனகராஜ், சக்தி கணபதி, ரத்தினவேலு செட்டியார், கே.ஜி.சங்கர், கருணாகரன், மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாளையொட்டி ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. மேலும் 500 பெண்களுக்கு புடவைகள், 500 பேருக்கு தலா ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்பட்டது. புதுச்சேரியில் உள்ள முதியோர் இல்லங்களில் வசித்து வருவோ ருக்கும் உணவு அளிக்கப் பட்டது.






