என் மலர்
நீங்கள் தேடியது "malaysian open badminton"
மலேசிய ஓபன் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் கரோலின் மரினை நேர்செட் கணக்கில் வீழ்த்தினார் இந்தியாவின் பி.வி.சிந்து. #MalaysianOpenBadminton #Pvsindhu #CarolinaMarin
மலேசிய ஓபன் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி கோலாலம்பூரில் இன்று நடைபெற்றது. இதில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் கரோலின் மரின் மற்றும் இந்தியாவின் பி.வி.சிந்து ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியில் பி.வி.சிந்து முதலில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாடினார். இதனால் அவர் 22 - 20 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
தொடர்ந்து, இரண்டாவது செட்டிலும் பிவி சிந்து அபாரமாக விளையாடினார். இதையடுத்து, 21- 19 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார்.
இறுதியில், இந்திய வீராங்கனை சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை 22 - 20, 21-19 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். #MalaysianOpenBadminton #Pvsindhu #CarolinaMarin






