என் மலர்
நீங்கள் தேடியது "Malaria Eradication"
- மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மலேரியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் சண்முகம், ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் தலைமை தாங்கினர்
புதுச்சேரி:
மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மலேரியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் ஆனந்தவேலு, கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் சண்முகம், ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் தலைமை தாங்கினர்.
விழிப்புணர்வு பேரணியை பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். இதில் கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கையில் பதாகைகளை ஏந்தி மலேரியா எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக்கொண்டு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






