என் மலர்
நீங்கள் தேடியது "Maharashtra High Court"
- இந்த நைலான் நூலால் அறுபட்டு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
- சீன மாஞ்சாவால் ஏற்படும் உயிரிழப்புகளை "கொலைக்கு இணையான குற்றம்" எனப் பதிவு செய்ய உத்தரவு
மகர சங்கராந்தி கொண்டாட்டங்களின் போது இந்தியா முழுவதும் சீன மாஞ்சா (Chinese Manja) எனப்படும் தடைசெய்யப்பட்ட நைலான் நூலால் கடந்த இரண்டு நாட்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில், நைலான் சரத்தால் தொண்டை அறுப்பட்டு, ரகுபீர் தகத் என்ற 45 வயது நபர் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்தார். உத்தரப்பிரதேசதம் ஜான்பூரில் சமீர் ஹாஷ்மி என்ற 28 வயது மருத்துவர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் உயிரிழந்தார். ஜான்பூர் நகரில் இதே போன்ற மற்றொரு விபத்தில் ஒரு இளைஞர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதேபோல தெலங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அவதேஷ் குமார் (38) என்ற புலம் பெயர் தொழிலாளி, இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி உயிரிழந்தார். கர்நாடகாவின் பீதர் மாவட்டத்தில், சஞ்சுகுமார் ஹோசமானி (48) என்பவர் தனது மகளை விடுதியிலிருந்து அழைத்து வரச் சென்றபோது, மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்தியாவில் சீன மாஞ்சா விற்பனை மற்றும் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், சந்தைகளில் அதன் சட்டவிரோத விற்பனை தொடர்கிறது. இதனால் இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட இந்த நைலான் நூலால் அறுபட்டு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், சீன மாஞ்சாவால் ஏற்படும் உயிரிழப்புகளை "கொலைக்கு இணையான குற்றம்" எனப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விஷயத்தை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, குழந்தைகளால் பறக்கவிடப்படும் பட்டங்கள் பெற்றோரால் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தது.. நீதிபதிகள் விஜய் குமார் சுக்லா மற்றும் அலோக் அவஸ்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சீன மாஞ்சாவை முழுமையாக தடை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
தடைசெய்யப்பட்ட நூலைப் பயன்படுத்தி பட்டம் விடுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.






