search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madurai youth murder"

    போதையில் மோட்டார்சைக்கிள் பந்தயத்தின் போது ஏற்பட்ட தகராறில் மதுரை வாலிபரை குத்திக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கொடைரோடு:

    மதுரை செல்லூரைச் சேர்ந்த பால்ராஜ் மகன் மோகன்ராஜ் (வயது 21). கருமாத்தூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவர் தனது நண்பர்களான எல்லீஸ் நகரைச் சேர்ந்த பூபதி (21), ஆலங்குளத்தைச் சேர்ந்த நாகசூர்யா (21), செல்லூர் கேசவமூர்த்தி (22) ஆகியோருடன் கடந்த மாதம் 3-ந் தேதி கோவையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

    மீண்டும் 2 மோட்டார் சைக்கிள்களில் அவர்கள் 4 பேரும் மதுரைக்கு திரும்பிக் கொண்டு இருந்த போது கொடைரோடு அருகே 4 வழிச் சாலையில் பொட்டிசெட்டி பிரிவில் மோகன்ராஜ் 4 பேர் கொண்ட கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து அம்மைய நாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். மோகன் ராஜூடன் வந்த நண்பர்களிடம் விசாரணை நடத்தியதில் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. கடந்த 1 மாதத்துக்கும் மேலாக இக்கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர். சம்பவத்தன்று சோழ வந்தான் பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் மோகன் ராஜ் கொலையில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், வாகன தணிக்கையில் பிடிபட்ட மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பாண்டி மகன் புலிக்குட்டி (22), கார்த்தி மகன் ஆப்பிள் கார்த்தி (22) ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம். அப்போது கடந்த மாதம் 3-ந் தேதி அன்று மோகன்ராஜ் அவரது நண்பர்களுடன் 2 மோட்டார் சைக்கிள்களில் மதுரைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது புலிக்குட்டி மற்றும் கார்த்தி ஆகியோரும் 2 மோட்டார் சைக்கிள்களில் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு வந்துள்ளனர்.

    அனைவரும் மது அருந்தி இருந்ததால் மோட்டார் சைக்கிளை அதிக வேகத்துடனும், மோட்டார் பந்தயத்தில் செல்வது போல சாகசம் செய்தவாறும் சென்றுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில்தான் மோகன்ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். பிடிபட்ட புலிக்குட்டி மற்றும் கார்த்தி இருவரையும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இக்கொலை வழக்கில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த சூர்யா என்பவர் ஏற்கனவே வழிப்பறி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளார். மற்றொரு நபரை தேடி வருகிறோம் என்றனர். #tamilnews
    ×