என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LDC - Storekeeper"

    • புதுவையில் 107 மையங்களில்
    • ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள மையத்தில் காலை 10 மணிக்குள் வந்துவிட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு துறை களில் காலியாக உள்ள ௧௬௫ எல்.டி.சி, 55 ஸ்டோர் கீப்பர் பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு  10 முதல் 12 மணி வரை நடக்கிறது.

    இத்தேர்வை 49 ஆயிரத்து 904 பேர் எழுது கின்றனர். தேர்வு பணியில் 3 ஆயிரம் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டில் பாஸ்போர்ட் போட்டோ ஒட்டி சுய கையொப்பம் இட்டு எடுத்து வர வேண்டும்.

    ஆதார், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் இதில் ஒரு அசலை கட்டாயம் கொண்டுவர வேண்டும். ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள மையத்தில் காலை 10 மணிக்குள் வந்துவிட வேண்டும்.

    அதற்கு மேல் தேர்வர்கள் அனும திக்கப்பட மாட்டார்கள். கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா, ஹால்டிக்கெட், அசல் அடையாள அட்டை மட்டுமே எடுத்து வர வேண்டும். செல்போன், கால்குலேட்டர் உட் பட மின் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதை மீறி மின் சாதனம் வைத்திருப்போர் தேர்விலிருந்து வெளி யேற்றப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    இத்தேர்வை புதுவை யில் 37 ஆயிரத்து 329, காரைக்காலில் 5 ஆயிரத்து 534, மாகிவில் ஆயிரத்து 216, ஏனாமில் 2 ஆயிரத்து 825 பேர் எழுதுகின்றனர். இவர்க ளுக்காக புதுவை யில் 107, காரைக்காலில் 14, மாகேவில் 6, ஏனாமில் 10 என மொத்தம் 137 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது.

    ஒரு பதவிக்கு 213 பேர் வீதம் 220 பணியிடங்களுக்கு 46 ஆயிரத்து 904 பேர் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வையொட்டி தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    ×