என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISSF World Championship 2023"

    • ஏர் ரைஃபிள் பிரிவில் மெகுலி ஜோஷ் மூன்றாவது இடம் பிடித்தது அசத்தல்.
    • முதல் நான்கு இடங்களை பிடிக்கும் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியும்.

    பாரிசில் நடைபெறும் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியாவை சேர்ந்த மெகுலி ஜோஷ் தகுதி பெற்று இருக்கிறார். அசர்பைஜானில் நடைபெற்ற 2023 ஐ.எஸ்.எஸ்.எஃப். உலக சாம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் மூன்றாவது இடம் பிடித்ததை அடுத்து ஜோஷ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்று இருக்கிறார்.

    மெகுலி ஜோஷ் ஒட்டுமொத்தமாக 229.8 புள்ளிகளை பெற்று வெண்கல பதக்கம் வென்றார். இவரை தொடர்ந்து இந்தியாவின் திலோத்தமா 208.4 புள்ளிகளுடன் நான்காவது இடம் பிடித்துள்ளார். சீனாவை சேர்ந்த ஜியாவு ஹான் மற்றும் ஜிஹ்லின் ஹாங் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கு ஐ.எஸ்.எஸ்.எஃப். உலக சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் நடைபெறுகின்றன.

     

    இந்த போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற முடியும். மெகுலி ஜோஷ் தகுதி பெற்று இருக்கும் போதிலும், தேசிய ஒலிம்பிக் கமிட்டி தான் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்போருக்கு அனுமதி அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஐ.எஸ்.எஸ்.எஃப். உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இரண்டு தங்கம், இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று இருக்கிறது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப். போட்டிகளில் தற்போதைய உலக சாம்பியனான ருத்ரான்ஷ் பாலாசாஹெப் பாடில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவிலும், ஸ்வப்நில் குசேல் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றனர். 

    ×