என் மலர்
நீங்கள் தேடியது "International fide Rating Chess"
- முதல் இடத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
- மொத்தம் ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
மவுண்ட் செஸ் அகாடமி சார்பில் எம்.எஸ்.வெங்கடராமன் நினைவு 8-வது சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டி சென்னையில் உள்ள நியூபிரின்ஸ் பவானி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது.
இதில் தபால்துறையை சேர்ந்த பிரதீப்குமார் 7.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். அஜேஷ், செல்வமுருகன், ராம்குமார், நாராயணன், உமாசங்கர், ஹரிதேவ் ஆகியோர் தலா 7 புள்ளிகள் பெற்று 2 முதல் 7-வது இடங்களை பிடித்தனர்.
கல்லூரியின் துணை தலைவர் நவீன் பிரசாத் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முதல் இடத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. செயலாளர் மகாலட்சுமி, செங்கல்பட்டு மாவட்ட செஸ் சங்க செயலாளர் புவனா, போட்டி அமைப்புக்குழு செயலாளர் யமுனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.






