என் மலர்
நீங்கள் தேடியது "INDUC"
- ஐ.என்.டி.யூ.சி. பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
- ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள் முத்துராமன், ஜான்சன், ராயர் ஆன்டனிராஜ், விஜயராகவன், முத்தால், பி.டி.டி.சி. ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாளையொட்டி நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பகுதியில் பி.டி.டி.சி. நீர் விளையாட்டு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஐ.என்.டி.யூ.சி. பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கி சங்க கொடியேற்றி, பெயர் பலகையை திறந்து வைத்தார்.
காங்கிரஸ் மாநில துணை தலைவரும் முன்னாள் அரசு கொறடாவுமான அனந்தராமன், ஐ.என்.டி.யூ.சி. துணை தலைவர் சொக்கலிங்கம், பொதுச்செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள் முத்துராமன், ஜான்சன், ராயர் ஆன்டனிராஜ், விஜயராகவன், முத்தால், பி.டி.டி.சி. ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






