search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Houses Shops Demolished"

    மாதவரம்-சிறுசேரி மெட்ரோ ரெயில் வழித்தடத்துக்காக 800 வீடு, கடைகளை இடித்து அகற்ற மெட்ரோ ரெயில் நிர்வாகம் நோட்டீசு வழங்கி உள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும், மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள், பொதுமக்களிடையே வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

    2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி இடையே ரூ.85 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் பாதை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 3 வழித்தடங்களில் 105 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் மெட்ரோ நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    மெட்ரோ வழித்தடப்பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைப்பதற்காக 800 வீடு, கடைகள், இடித்து அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 800 பேருக்கு மெட்ரோ ரெயில் நிர்வாகம் நோட்டீசு வழங்கி உள்ளது.

    நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட உள்ளது. இது குறித்து 30 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் இதற்காக நியமிக்கப்பட்ட ஆர்.டி.ஓ.விடம் ஆலோசனை, தீர்வுகளை பெறலாம், என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    இது குறித்து புரசைவாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ். நாகபூசணம் கூறியதாவது:-

    புரசைவாக்கம், பட்டாளத்தில் மெட்ரோ ரெயில் வழித்தடப்பாதை அமைக்கப்படுவதால் 200 கடைகள் பாதிக்கப்படும். மெட்ரோ வழித்தடப்பாதையை ஓட்டேரி பிரிக்ளின் சாலைவழியாக மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் திட்டம் தயாரிக்க வேண்டும்.

    இதனால் புரசைவாக்கத்தில் வியாபாரம் பெருமளவு குறைந்துவிடும். வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மெட்ரோ ரெயில் பணியால் புரசைவாக்கத்தில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.

    இந்த வழித்தட பாதைக்கு புரசைவாக்கம், பட்டாளம் பகுதியை சேர்ந்த பொது மக்கள், வியாபாரிகள் இடையே கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. எனவே மெட்ரோ வழித்தடப்பாதை திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×