என் மலர்
நீங்கள் தேடியது "hotel employee attack"
திருபுவனை:
திருபுவனை பாளையத்தை சேர்ந்நதவர் பாபு. இவர் திருபுவனையில் -புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் புதுவை டி.ஆர். நகரை சேர்ந்த குமார் (வயது55) என்பவர் சப்ளையராக வேலைபார்த்து வருகிறார்.
நேற்று மதியம் திருபுவனை பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடியான கேடி மணி என்ற மணிகண்டன் என்பவர் குடிபோதையில் ஓட்டலுக்கு சாப்பிட வந்தார். பிரியாணி வாங்கி சாப்பிட்ட மணிகண்டன் அதற்கான பணத்தை கொடுக்காமல் ஓட்டலை விட்டு வெளியேற முயன்றார். அப்போது மணிகண்டனிடம் ஓட்டல் சப்ளையர் குமார் பணத்தை கொடுத்து விட்டு செல்லுமாறு கூறினார்.
அதற்கு தன்னிடமே பணம் கேட்கிறாயா என கூறி குமாரை சரமாரியாக தாக்கினார். மேலும் குமாரையும், ஓட்டல் உரிமையாளர் பாபுவையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சென்றார்.
இதுகுறித்து குமார் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.






