search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hepatitis infection"

    • ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஹெபடைடிஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.
    • தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நபர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    திருவனந்தபுரம்:

    ஹெபடைடிஸ் என்பது ஒரு வைரஸ் நோய் ஆகும். அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரால் இந்த வைரஸ் பரவுகிறது. கேரள மாநிலம் மரப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஹெபடைடிஸ் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

    அந்த மாவட்டத்தில் நிலம்பூர் அருகே உள்ள பொதுகல்லு மற்றும் எடக்கரை ஊராட்சிகளில் ஏராளமானோர் ஹெபடைடிஸ் வைரஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும் பொதுக்கல்லு ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 47 மற்றும் 60 வயது மதிக்கத்தக்க இருவர் ஹெபடைடிஸ் நோய் பாதித்து இறந்தனர்.

    இந்நிலையில் அங்கு மேலும் ஒருவர் இறந்தார். 37 வயது மதிக்கத்தக்க அந்த நபர் நேற்று இறந்து விட்டார். இதனால் அந்த வைரஸ் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து விட்டது. மேலும் பொதுக்கல்லு ஊராட்சியில் நேற்று ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஹெபடைடிஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.

    தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நபர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களை டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    மலப்புரம் மாவட்டத்தில் இதுவரை 232 பேர் ஹைபடைடிஸ் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் நோய் பாதிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு சுகாதார பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மலப்புரம் மாவட்ட கலெக்டர் வினோத் தெரிவித்துள்ளார்.

    கருமையான சிறுநீர், குமட்டல், வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்டவைகளே ஹெபடைடிஸ் வைரஸ் நோயின் அறிகுறிகளாகும். அந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகச்சை பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் ஓட்டல் மற்றும் பேக்கரிகளில் பழச்சாறுகள் தயாரிக்க சுத்தமான தண்ணீரை பயன்படுத்ததுவதை உறுதி செய்ய உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    ×