என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Greaves Electric Mobility"

    • கிரீவ்ஸ் மொபிலிட்டி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 100 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.
    • நான்கு நிறங்கள் மற்றும் நான்கு வித ரைடிங் மோட்களை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

    கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ஆம்பியர் பிரைமஸ் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இந்திய சந்தையில் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    செயல்திறனை பொருத்தவரை புதிய ஆம்பியர் பிரைமஸ் மாடல் 4கிலோவாட் PMS மோட்டார் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இத்துடன் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை ஐந்து நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. புதிய பிரைமஸ் மாடல் - இகோ, சிட்டி, பவர் மற்றும் ரிவர்ஸ் என நான்குவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.

     

    இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் பவர் மோடில் 100 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இகோ மோடில் இதன் ரேன்ஜ் மேலும் அதிகரிக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன், பிரத்யேக ஸ்மார்ட்போன் செயலி கொண்டிருக்கிறது.

    ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஹிமாலயன் வைட், ராயல் ஆரஞ்சு, ஹேவ்லாக் புளூ மற்றும் பக் பிளாக் என நான்கு விதமான மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட டூயல் டோன் பெயிண்ச் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஹார்டுவேரை பொருத்தவரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ரியர் ஸ்ப்ரிங் மற்றும் டிரம் பிரேக்குகளை கொண்டுள்ளன.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை டால்-செட் ஹெட்லைட், அப்ரனில் மவுண்ட் செய்யப்பட்ட முன்புற இண்டிகேட்டர்கள், ஸ்டெப்-அப் சீட் மற்றும் ஒற்றை கிராப் ரெயில் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    ×