search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganapathy subramaniam"

    • குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டு வந்தார்.
    • பதவிக்காலம் மே 19 ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது.

    டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனம் தனது மூத்த இயக்க அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான என்.ஜி. கணபதி சுப்ரமணியம் இன்று (மே 20) முதல் தனது பதிவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், மே 19 ஆம் தேதியுடன் கணபதி சுப்ரமணியத்தின் அலுவல் பணிகளின் கடைசி நாள் ஆகும்.

    இது தொடர்பாக டி.சி.எஸ். சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிவிக்கையில், "நிறுவனத்தின் மூத்த இயக்க அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான திரு. என். கணபதி சுப்ரமணியத்தின் பதவிக்காலம் மே 19 ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது," என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு டி.சி.எஸ். நிறுவனத்தில் இணைந்த என்.ஜி. கணபதி சுப்ரமணியம் 2017, பிப்ரவரி மாதம் டி.சி.எஸ். நிறுவனத்தின் மூத்த இயக்க அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அன்று முதல் டி.சி.எஸ். நிறுவன வளர்ச்சி மற்றும் நிர்வாக பணிகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டு வந்த கணபதி சுப்ரமணியத்தின் பதவிக்காலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

    கடந்த ஏப்ரல் மாத வாக்கில் டி.சி.எஸ். வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், கணபதி சுப்ரமணியத்திற்கு மாற்று அதிகாரியை நேரடியாக நியமிக்கப்போவதில்லை என்று தெரிவித்து இருந்தது.

    "அவர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார், இதனால் ஒரு அதிகாரியால் அவருக்கு மாற்றாக அமைந்துவிட முடியாது. எங்களது தலைமை குழுவினர் ஒன்றுகூடி அவர் மேற்கொண்டு வந்த பணிகளை பகிர்ந்து அளிக்க திட்டமிட்டு வருகிறோம். இதனால் புதிதாக தலைமை இயக்க அதிகாரி நியமிக்க விரும்பவில்லை," என்று டி.சி.எஸ். தலைமை செயல் அதிகாரி கே. கீர்த்திவாசன் தெரிவித்து இருக்கிறார். 

    ×