என் மலர்
நீங்கள் தேடியது "Farming Festival"
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
- பாரம்பரிய நெல் ரகங்களையும் இயற்கை வழி விவசாய பொருட்களையும் பார்வையிட்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் இயற்கை உழவர்கள் மற்றும் காரைக்கால் ரோட்டரி சங்கம் பிரெஞ்சு சிட்டி இணைந்து நடத்தும் இயற்கை வழி வேளாண்மை திருவிழா காரைக்கால் அம்பாள் சத்திரம் சக்தி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த இயற்கை வழி வேளாண்மை திருவிழாவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தி னராக கலந்து கொண்டு வேளாண் திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் காட்சிப்படுத்தப் பட்ட பாரம்பரிய நெல் ரகங்களையும் இயற்கை வழி விவசாய பொருட்களையும் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் திருநள்ளாறு பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் விவசாய பெருமக்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






