search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ethiopia Conflict"

    • ஹெலிகாப்டரில் இருந்தவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
    • விபத்துக்கான காரணம் குறித்து முதற்கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

    கானோ:

    நைஜீரியா நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் போராளிகள் என்ற பெயரில் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இவர்கள் அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையடிப்பது, தாக்குவது, பொதுமக்களை கடத்துவது, கொலை போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய நைஜீரியாவில் கிரிமினல் குழுவை சேர்ந்தவர்கள் திடீரென்று ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். ராணுவ வீரர்களும் கடும் எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.

    இந்த தாக்குதலில் 26 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து ராணுவம் தரப்பில் கூறும்போது, மத்திய நைஜீரியாவில் நடந்த தாக்குதலில் மூன்று அதிகாரிகள் உள்பட 26 வீரர்களை இழந்துள்ளோம். 8 பேர் காயம் அடைந்தனர்.

    தாக்குதல் நடத்திய கிரிமினல் குழுவிலும் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

    இதற்கிடையே காயம் அடைந்த ராணுவ வீரர்களை மீட்பதற்காக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வந்தது. அந்த ஹெலிகாப்டர், காயமடைந்தவர்களில் 7 பேரையும், பலியானவர்களில் 11 பேரின் உடல்களையும் ஏற்றிக் கொண்டு சென்றது. ஹெலிகாப்டரின் தொடர்பு திடீரென்று துண்டானது. பின்னர் அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது தெரிய வந்தது.

    இது தொடர்பாக அரசின் செய்தி தொடர்பாளர் எட்வர்ட் காப்க்வெட் கூறும்போது, ஹெலிகாப்டர், சுங்கேரு ஆரம்ப பள்ளியில் இருந்து கடுனா பகுதிக்கு புறப்பட்டது. அந்த ஹெலிகாப்டர், சுகுபா கிராமம் அருகே விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஹெலிகாப்டரில் இருந்தவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து முதற்கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

    அதே வேளையில் கிரிமினல் குழுக்கள் நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ×