என் மலர்
நீங்கள் தேடியது "crumbling"
- எந்ேநரமும் இரு சக்கர வாகன போக்குவரத்தும் உள்ளது.
- சீரமைக்க வேண்டும் என பெற்றோர்களும் பொது மக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியின் கட்டிடமானது சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் ஆகும். இந்தப் பள்ளியின் முன்புற மதில் சுவர் தற்போது சேதம் அடைந்து கீழே விழும் நிலையில் இருந்தது.
இதனை 8 சிமெண்ட் தூண்கள் மூலம் தாங்கி பிடிக்கும் முட்டுக் கொடுத்து வைத்தனர். ஆனால் இந்த பள்ளி புதுவை-கடலூர் பழைய பாதையில் அமைந்துள்ளதால் பஸ், கார் மற்றும் லாரி போக்குவரத்தும் இருந்து வருகிறது. அதோடு எந்ேநரமும் இரு சக்கர வாகன போக்குவரத்தும் உள்ளது.
மேலும் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளும் அச்சத்தில்இருந்து வந்தனர்.
எனவே இந்த பள்ளியின் சுற்று சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பெற்றோர்களும் பொது மக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பொதுப்பணித்துறை சார்பில் சாய்ந்த மதில் சுவரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.






