search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Craig Fulton"

    • ஸ்பெயினில் முடிவடைந்த 4 நாடுகள் போட்டியில் சிறப்பாக ஆடினோம்.
    • கடந்த 10 நாட்களில் சில மிகச் சிறந்த அணிகளை சந்தித்துடன் அவர்களுக்கு எதிராக நன்றாக செயல்பட்டோம்.

    சென்னை:

    ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (3-ந் தேதி) முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

    இந்த போட்டியில் பங்கேற்க மலேசியா, தென் கொரியா, ஜப்பான் அணிகள் ஏற்கனவே சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் ஸ்பெயினில் நடந்த 4 நாடுகள் போட்டியில் கலந்து கொண்ட ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி நேற்று அதிகாலை 2 மணியளவில் சென்னை வந்தது. விமான நிலையத்தில் இந்திய அணியினருக்கு ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இந்திய அணியினர் சொகுசு பஸ் மூலம் தங்கும் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    பாகிஸ்தான் அணி நேற்று காலை வாகா எல்லை வழியாக பஞ்சாப்பை வந்தடைந்தது. பின்னர் அமிர்தசரஸ் சென்ற பாகிஸ்தான் அணியினர் விமானம் மூலம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. சீன அணி நள்ளிரவில் வந்தடைந்தது.

    முன்னதாக இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரேக் புல்டான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'சமீபத்தில் நடந்த போட்டிகளில் எங்களது ஆட்டத்தில் சில யுக்தியை மாற்றி விளையாடினோம். தற்போது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் அத்தகைய யுக்தி மாற்றத்தை அமல்படுத்த இருக்கிறோம்.

    ஸ்பெயினில் முடிவடைந்த 4 நாடுகள் போட்டியில் சிறப்பாக ஆடினோம். கடந்த 10 நாட்களில் சில மிகச் சிறந்த அணிகளை சந்தித்துடன் அவர்களுக்கு எதிராக நன்றாக செயல்பட்டோம். வருகிற ஆசிய விளையாட்டுக்கு சிறந்த முறையில் தயாராவதற்கு இந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை அடித்தளமாக பயன்படுத்தி கொள்வோம்.

    ஆசிய விளையாட்டு நெருங்கும் சமயத்தில் இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நடைபெறுகிறது என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால் எங்களை சீரிய முறையில் தயார்படுத்திக் கொள்ள இது போன்ற ஆட்டங்கள் தேவைப்படுகிறது. எனவே இந்த போட்டியில் விளையாடுவது முக்கியமானதாகும். அதிலும் சொந்த மண்ணில் நடப்பது இன்னும் சிறப்பானது' என்று தெரிவித்தார்.

    • பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது இந்திய ஹாக்கி அணியின் முன்னுரிமையாக உள்ளது என கிரேக் புல்டான் தெரிவித்தார்.
    • ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது எங்களது முன்னுரிமையாகும்.

    புதுடெல்லி:

    இந்திய ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளரான தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரேக் புல்டான் நேற்று காணொலி மூலம் அளித்த பேட்டியில், 'ஆசிய மண்டலத்தில் இந்தியா நம்பர் ஒன் அணியாக இருக்க வேண்டும் என்பது எங்கள் இலக்குகளில் முதன்மையானதாகும். அத்துடன் உலக தரவரிசையில் முன்னேற்றம் காண்பதுடன் பதக்க மேடையை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டியது அவசியமானதாகும்.

    அணியில் போதுமான அனுபவத்தை உருவாக்கி, ஒவ்வொரு வீரருக்கும் பொருந்தக்கூடிய ஆட்ட திட்டத்தை வைத்து இருந்தால் நீங்கள் சர்வதேச போட்டியில் இறுதிசுற்றுக்குள் நுழைவதுடன் பதக்கத்தையும் வெல்ல முடியும். இந்த ஆண்டு இறுதியில் அரங்கேறும் ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது எங்களது முன்னுரிமையாகும்.

    அதனை எட்ட புரோ லீக், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட போட்டிகளை சரியாக பயன்படுத்தி கொள்வோம். நாங்கள் சிறந்த அணி கிடையாது. ஆனால் ஒரு நல்ல அணி. அதேநேரத்தில் மற்ற அணிகள் எதிர்கொள்ள ஒரு கடினமான அணியாகும். நமது அணி இருக்கும் நிலைக்கும், உலக தரவரிசையில் முதல் 2 இடங்களுக்குள் உள்ள அணிகளுக்கும் இடையே இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியை குறைக்க நாம் உழைக்க வேண்டியது அவசியமானதாகும்' என்று தெரிவித்தார்.

    • தென்னாப்பிரிக்க அணிக்காக சுமார் 195 போட்டிகளில் 10 ஆண்டு காலம் விளையாடி உள்ளார்.
    • இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது பெருமைக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கிரேக் ஃபுல்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. வரும் 10-ம் தேதி ஹாக்கி ப்ரோ லீக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    48 வயதான அவர் தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர். பயிற்சியாளராக சுமார் 25 ஆண்டுகால அனுபவம் கொண்டவர். 2014 முதல் 2018 வரையில் அயர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். அதன் பிறகு பெல்ஜியம் ஹாக்கி அணியின் துணை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். இந்த காலகட்டத்தில் 2018 உலகக் கோப்பை தொடர் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது பெல்ஜியம் அணி.

    தென்னாப்பிரிக்க அணிக்காக சுமார் 195 போட்டிகளில் 10 ஆண்டு காலம் விளையாடி உள்ளார். வெகு விரைவில் இவர் இந்திய அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது பெருமைக்குரியது என அவர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கிரஹாம் ரீட், உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு விலகி இருந்தார். அவருக்கு மாற்றாக அந்த பணியை ஃபுல்டன் கவனிக்க உள்ளார்.

    ×