என் மலர்
நீங்கள் தேடியது "Cottage Replacement Board Officer"
- கரிக்கலாம் பாக்கத்தில் நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்திருந்ததை தட்டிக்கேட்ட குடிசை மாற்று வாரிய அதிகாரி தாக்கப்பட்டார்.
- கரிக்கலாம் பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து இவர் புதுவை குடிசைமாற்று வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
புதுச்சேரி:
கரிக்கலாம் பாக்கத்தில் நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்திருந்ததை தட்டிக்கேட்ட குடிசை மாற்று வாரிய அதிகாரி தாக்கப்பட்டார்.
வில்லியனூர் அருகே கரிக்கலாம் பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து இவர் புதுவை குடிசைமாற்று வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்க அங்குள்ள கடைதெருவுக்கு சென்றார். அப்போது அதே தெருவில் குமரவேல் என்பவரின் உறவினரான காரணப்பட்டை சேர்ந்த பூமணி நடுரோட்டில் நாற்காலியை போட்டு அமர்ந்திருந்தார். இதனை வீரமுத்து தட்டிக்கேட்டு நாற்காலியை சாலை ஓரமாக போட்டு அமருமாறு அறிவுறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த பூமணி தகாத வார்த்தைகளால் திட்டி வீரமுத்துவை நாற்காலியை எடுத்து தாக்கினார். இதில் வீரமுத்துவுக்கு இடதுகை நடுவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து வீரமுத்து தனது உறவி னர்கள் உதவியுடன் கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைகாக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வீரமுத்துவின் மனைவி விஜயா கரிக்கலாம் பாக்கம் புறகாவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






