என் மலர்
நீங்கள் தேடியது "Cosmetically"
- மஞ்சள் நிற பூக்களை உடைய ஒருவகையான கொடி தாவரமாகும்.
- தரையில் படர்ந்து வளரக்கூடியது.
முதியார் கூந்தல் என்பது வெள்ளை நிறம் கலந்த மஞ்சள் நிற பூக்களை உடைய ஒருவகையான கொடி தாவரமாகும். தரையில் படரக்கூடியது, இது செம்மண் நிலங்களிலும் மற்றும் புதர்களிலும் தானாக வளரக்கூடிய ஒரு கலைச் செடியாகும். இதை சவுரிக்கொடி என்றும், அவ்வையார் கூந்தல் என்றும், பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதனுடைய கொடி மிகவும் நீளம் நீளமாக படர்ந்து வளரக்கூடியது. அதனால் இதை பெண்களின் கூந்தலுடன் ஒப்பிடலாம். எனவே இது முதியார் கூந்தல் என்று அழைக்கப்படுகிறது.
கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பயன்படும் மிகமுக்கிய பயனாக பார்க்கப்படுகிறது.
முதியார் கூந்தல் எண்ணெய் தயாரிக்கும் முறை:
முதியார் கூந்தல் தைலம் தயாரிப்பதற்கு ஒரு முழு முதியார் கூந்தல் கொடியை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதன் பூ, காய், வேர், இலை, கொடி அனைத்தையும் எடுத்து அதனுடன் நீர் சேர்த்து அரைத்து அந்த கலவையை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள கலவையின் சம அளவுக்கு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டு நன்றாக காய்ச்ச வேண்டும். தேங்காய் எண்ணெயின் நிறம் பச்சையாக மாறும் வரை காய்ச்சி பின் ஆற வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த எண்ணெய்யை வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும். தலை சீவும் போது கூந்தல் வேருடன் உதிர்வதை தடுக்கும். கூந்தல் மிக நீளமாக வளரும். பொடுகுத் தொல்லையில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.






