என் மலர்
நீங்கள் தேடியது "Construction of cement"
- திருபுவனை தொகுதிக்குட் பட்ட சோரப்பட்டு கிராமம் காலனி பகுதி பிள்ளையார் கோவில் பின்புறம் புதுவை அரசு ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரை நிலைக் கழகத்தின் மூலமாக ரூ. 26 லட்சத்து 53 ஆயிரம் செலவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படுகிறது.
- இதேபோல் சோரப்பட்டு யூ வடிகால் வாய்க்கால் மறுசீரமைப்பு பணிக்காக ரூ.8 லட்சத்து 94 ஆயிரம் ஓதுக்கப் பட்டுள்ளது.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதிக்குட் பட்ட சோரப்பட்டு கிராமம் காலனி பகுதி பிள்ளையார் கோவில் பின்புறம் புதுவை அரசு ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரை நிலைக் கழகத்தின் மூலமாக ரூ. 26 லட்சத்து 53 ஆயிரம் செலவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படுகிறது.
இதேபோல் சோரப்பட்டு யூ வடிகால் வாய்க்கால் மறுசீரமைப்பு பணிக்காக ரூ.8 லட்சத்து 94 ஆயிரம் ஓதுக்கப் பட்டுள்ளது.
சன்னியாசிக்குப்பம் பகுதியில் புதுவை அரசு ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரை நிலை கழகத்தின் மூலமாக ரூ. 5 லட்சத்து 12 ஆயிரம் 968 ரூபாய் செலவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையை திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ, அங்காளன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சி யில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரை நிலை கழகத்தின் மேலாண் இயக்குனர் தயாளன்,உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் திருவருட்செல்வன் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.






