search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chithrakupthan"

    • சித்திரகுப்தனை வேண்டி பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர்.
    • விளக்கு ஏற்றிவைத்துப் பூசை செய்வார்கள். வெண்பொங்கல் இடுவதும் உண்டு.

    சித்திரகுப்தனை வேண்டி பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர்.

    சித்ராபவுர்ணமி தினத்தில் மாக்கோலம் போடுவார்கள். அதன் ஒரு பகுதியில் சித்திரகுப்தனைப்போலவே கோலம் போடுவார்கள்.

    அருகில் ஏடும், எழுத்தாணியும் வைப்பார்கள்.

    விளக்கு ஏற்றிவைத்துப் பூசை செய்வார்கள். வெண்பொங்கல் இடுவதும் உண்டு.

    இட்ட பொங்கலுடன் இனிப்புப் கொழுக்கட்டை, மாங்காய், தட்டைப்பயறு குழம்பு இவைகளுடன் நீர்மோர், பழங்கள், கண் திறந்த இளநீர், பானகம் இவைகளை வைத்துப் படைப்பார்கள்.

    பலகாரங்களும் செய்து வைக்கலாம்.

    இவைகளை வைத்துப்படைத்து மதியத்திற்கு விரதம் இருப்பார்கள். இவ்வுணவையே உட்கொள்வார்கள்.

    சித்திரபுத்திர நாயனார் கதை, புராணம் ஆகியவற்றைப் படிப்பார்கள்.

    காலையில் கோவிலுக்குச்சென்று பிள்ளையார், நந்தி, சிவபெருமான் மூன்று தெய்வங்களுக்கும் அர்ச்சனை செய்து கொண்டு வருவார்கள்.

    விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்தவுடன் பசுவுக்கு வெல்லம் கலந்த பச்சரிசி வைப்பார்கள்.

    ஒரு வேளைதான் உணவு உட்கொள்ளவேண்டும்.

    இவ்விரதத்தால் சித்ரபுத்தர் மனம் மகிழ்ந்து நம் பாபக்கணக்குகளைக் குறைப்பார். நமக்கு நற்கதி கிடைக்கும்.

    ×