என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Volunteers"

    • சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தலைமை தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பயிற்சி மூலம் புதுவையை போதை இல்லாத நகரமாக மாற்ற பல விழிப்புணர்வுகள் நடத்தப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சமூகநலத்துறை சார்பில் அன்னை தெரசா முதுகலை பட்டதாரி மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தலைமை தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், போதைப்பொருள் குறைப்புக்கான தேசிய செயல் திட்டம் மற்றும் நஷா முக்ட் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

    என்.எஸ்.எஸ், என்.சி.சி., நேருயுவகேந்திரா மாணவர்களுக்கு அமைச்சக ஒருங்கிணைப்பாளர்கள், துறை வளமிக்க விளக்கவுரையாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி மூலம் புதுவையை போதை இல்லாத நகரமாக மாற்ற பல விழிப்புணர்வுகள் நடத்தப்பட உள்ளது.

    இதில் பங்கேற்ற அனைவரும் போதைப்பொருள் தவிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். பயிற்சி முகாமை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். சமூகநலத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் முத்துமீனா, கலெக்டர் மணிகண்டன், பாரதமாதா ஒருங்கிணைந்த மதுபோதை சிகிச்சை மறுவாழ்வு மைய சேர்மன் கோபால் பிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர். கள அதிகாரி கனகராஜ் நன்றி கூறினார்.

    ×