search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Open Challenger Tennis"

    • முதன்மை சுற்றின் ஒற்றையர் பிரிவில் விளையாட 4 இந்திய வீரர்கள் தகுதி பெற்று இருந்தனர்.
    • சுமித் நாகல் இங்கிலாந்தின் ரையான் பெனிஸ்டனை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    சென்னை:

    தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதன் முதன்மை சுற்றின் ஒற்றையர் பிரிவில் விளையாட 4 இந்திய வீரர்கள் தகுதி பெற்று இருந்தனர். இதில் சுமித் நாகல் தவிர மற்ற 3 வீரர்களும் முதல் சுற்றிலேயே தோற்றனர்.

    ராம்குமார் ராமநாதன் 3-6, 6-7 (3-7) என்ற கணக்கில் டிமிட்டர் குஷ்மானோவிடமும் (பல்கேரியா), முகுந்த் சசிகுமார் 2-6, 2-6 என்ற கணக்கில் மேக்ஸ் புர்செலிடமும் (ஆஸ்திரேலியா), பிரஜ்னேஷ் குணேஷ் ரரன் 6-4, 3-6, 7-6 என்ற கணக்கில் ஜாய் கிளார்க்கிடமும் (இங்கிலாந்து) தோற்றனர்.

    சுமித் நாகல் 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் இங்கிலாந்தின் ரையான் பெனிஸ்டனை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடைபெறும் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்களான சுமித் நாகல்-முகுந்த் சசிகுமார், ஸ்ரீராம்-ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர்-அணிருத் சந்திர சேகர், விஷ்னு வர்தன்-ராம்குமார் ராமநாதன் ஆகிய 4 ஜோடிகள் விளையாடுகிறது.

    • முதல் சுற்றில் முகுந்த் சசிகுமார் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் பர்செலை எதிர்கொள்கிறார்.
    • சுமித் நாகல் இங்கிலாந்து வீரர் ரயான் பெனிஸ்டனை சந்திக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ரூ.1.06 கோடி பரிசு தொகைக்கான இந்தப் போட்டி வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது.

    இதல் 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    நேற்று நடந்த தகுதி சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சுமித் நாகல், முகுந்த் சசிகுமார் ஆகியோர் வெற்றி பெற்று முதன்மை சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    சுமித் நாகல் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தென் கொரியாவின் ஜங்குகையும், முகுந்த் சசிகுமார் 4-6, 6-4, 6-4 என்ற கணக்கில் தைவானின் ஜேசன் ஜங்கையும் வீழ்த்தினார்கள்.

    மற்றொரு இந்திய வீரர் திக்விஜய் பிரதாப் சிங் 2-6, 6-7(2-7) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் மைக்கேப்பிடம் தோற்று முதன்மை சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.

    இன்று நடைபெறும் முதல் சுற்றில் முகுந்த் சசிகுமார் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் பர்செலையும், சுமித் நாகல் இங்கிலாந்து வீரர் ரயான் பெனிஸ்டனையும் சந்திக்கிறார்கள்.

    இருவரும் முதல் சுற்றில் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளனர். இருவரும் எதிர்த்து விளையாடும் வீரர்கள் தர வரிசையில் முன்னிலையில் இருப்பவர்கள். இதனால் கடுமையான சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்.

    'வைல்டு கார்டு' மூலம் விளையாட தகுதி பெற்ற மற்றொரு இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் இன்றைய முதல் சுற்றில் பல்கேரிய வீரர் டிமிட்டர் குஷ்ரம்கோவை எதிர் கொள்கிறார். டிமிட்டர் தர வரிசையில் 8-வது இடத்தில் உள்ளார்.

    நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தப் போட்டியில் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் செங்சுன் (தைவான்), அலிபெக் கச்மாசோவ் (ரஷியா) உள்ளிட்ட வீரர்கள் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

    ×