search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai-Mumbai National Highway"

    வேலூர் மாவட்டத்தில் சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலை 4 வழி பாதைக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு 3 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், வேளாண் இணை இயக்குனர் ராமலிங்கம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்:- சென்னை, மும்பை தேசிய நெடுஞ்சாலை 4 வழி பாதைக்காக, காட்பாடி தாலுகா முத்தரசி குப்பம் தொடங்கி சேர்க்காடு, திருவலம், ராணிப்பேட்டை, செட்டித்தாங்கல் வரை நிலம் கையகப்படுத்தப்படுகிறது. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு 3 மடங்கிற்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.

    ஒரு தென்னை மரத்தில் ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதே போல், சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலை 4 வழி பாதைக்கு கையகப்படுத்தும் நிலத்திற்கும் 3 மடங்கும், தென்னை மரத்திற்கு ரூ.40 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சையில் விவசாயிகளுக்கு நெல் விதை இலவசமாக வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கும் நெல் விதை மற்றும் ஏர் கலப்பையை இலவசமாக வழங்க வேண்டும். காட்டு பன்றிகள் தொல்லையை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும்.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களின் நலன் கருதி மலிவு விலையில் உணவு கிடைக்க அம்மா உணவகம் அமைக்க வேண்டும். 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களை விவசாய வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றனர்.

    100 நாள் ஊரக வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்த ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வரப்பை சரி செய்ய, பாத்தி கட்ட உள்ளிட்ட விவசாய பணிகளை செய்ய 100 நாள் ஊரக திட்ட பணியாளர்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக, முறைபடி விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறினார்.
    ×