என் மலர்
நீங்கள் தேடியது "Chariot of Varadaraja Perumal Temple"
- வில்லியனூர் வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
- வில்லியனூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படும் தென்கலை வரதராஜபெருமாள் கோவில் உள்ளது.
புதுச்சேரி:
வில்லியனூர் வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
வில்லியனூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படும் தென்கலை வரதராஜபெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 4-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
14 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கடந்த 9-ந் தேதி கருடசேவையும், 11-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் தேனீ. ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன் குமார், சிவா எம்.எல்.ஏ., மற்றும் வில்லியனூர் பகுதி முக்கிய பிரமுகர்கள் கோவில் நிர்வாகிகள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
கோவிந்தா கோவிந்தா கோஷங்களுடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி ஆங்காங்கே அன்னதானம் நடைபெற்றது.
போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து 16-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 17-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெற்று விழா நிறைவடைகிறது.
கொரோனா காலகட்டம் என்பதால் கடந்த 2 ஆண்டுகளாக வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இன்று நடந்த தேரோட்டத்தில் பக்தர்கள் உற்சாகமாக தேரை வடம்பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்தனர்.






