என் மலர்
நீங்கள் தேடியது "cashew nut fruit"
- முந்திரி பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன.
- முந்திரி பழம் கோடை காலங்களில் சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
முந்திரி பழம் கோடை காலங்களில் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனை கொல்லாம் பழம் என்றும் அழைப்பார்கள். முந்திரி பழம் இனிப்பு மற்றும் சற்று துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இது ஒரு மென்மையான பழம்.
இந்த பழத்தில் கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் பி, இரும்பு, கார்போஹைட்ரேட், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
முந்திரி பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால் நீரின் அளவு அதிகமாக இருக்கும். இதை உட்கொள்வது ரத்த சக்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. முந்திரி பழம் நோய்கள் வராமல் தடுக்கவும், காயங்களை ஆற்றவும், ரத்த சோகையை போக்கவும் உதவுகிறது.
இதனை கோடை காலங்களில் சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வைட்டமின் சி முந்திரி பழத்தில் அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அளவை கட்டுப்படுத்துகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கவும் முந்திரி பழம் பயன்படுகிறது.






