என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BRTC BUS"

    • நிறுத்தப்பட்ட சேவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
    • புதுவையில் மாலை 6.25 மணிக்கு புறப்படும் பஸ் மறுநாள் காலை 5 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

    புதுச்சேரி:

    புதுவையிலிருந்து பி.ஆர்.டி.சி. மூலம் நாகர்கோவி லுக்கு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். நிறுத்தப்பட்ட சேவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    இதையடுத்து பஸ் புதிதாக கட்டமைப்பு செய்யப்பட்டு  முதல் புதுவையில இருந்து நாகர்கோவிலுக்கு பஸ் இயக்கப்பட உள்ளது. புதுவையில் மாலை 6.25 மணிக்கு புறப்படும் பஸ் மறுநாள் காலை 5 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

    கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருதாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக இந்த பஸ் நாகர்கோவிலை சென்றடையும்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புஷ்பேக் இருக்கையுடன் இந்த புதிய பஸ் இயக்கப்படுகிறது. புதுவை பஸ் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தி லும், பஸ் இந்தியா செயலி மூலமும் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    ×