என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bombay sisters"
- பம்பாய் சகோதரிகளில் ஒருவரான லலிதா (வயது 84) உடல்நலக் குறைவால் காலமானார்.
- இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த சகோதரிகள் சி.சரோஜா மற்றும் சி.லலிதா. இவர்கள் சிறு வயதிலேயே மும்பைக்கு குடிபெயர்ந்த நிலையில், பிரபல கர்நாடக இசை கலைஞரும், பாடகர் ஹரிஹரனின் தந்தையுமான ஹெச்.ஏ.எஸ். மணியிடம் கர்நாடக இசை பயின்றனர். இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு வந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர்களை பம்பாய் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 50 ஆண்டுகளாக பல மொழிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். இவர்களின் இசைப் பணிக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த லலிதா, செவ்வாய்க்கிழமை (நேற்று) காலமானார். சென்னை பெசண்ட் நகர் இல்லத்தில் இவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான என்.ஆர்.சந்திரன் இவரது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.