என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharathidasan Foundation"

    • அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளில் தமிழ் பாடத்துக்கான 4 பருவ தேர்வுகளை 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
    • தமிழ் பாடத்தேர்வை குறைக்கும் முடிவை கைவிட்டு ஏற்கனவே இருந்து வரும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் கோ.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளில் தமிழ் பாடத்துக்கான 4 பருவ தேர்வுகளை 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மொழி அறிவை மேம்படுத்துவதற்கு குந்தகம் விளைவிக்கும் எனவே புதுவை பல்கலைக்கழகமும் புதுவை அரசும் தமிழ் பாடத்தேர்வை குறைக்கும் முடிவை கைவிட்டு ஏற்கனவே இருந்து வரும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×