search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "As a beauty product"

    • தலைமுடியை பராமரிக்கவும் நீளமாக வளர உதவி செய்யும்.
    • இயற்கையாகவே சிவப்பு நிறத்தையும் கொடுக்கும் ஒரு மூலிகைப்பொருள்.

    தலைமுடியை பராமரிக்கவும் நீளமாக வளர உதவி செய்யவும் இயற்கை நமக்கு கொடுத்த அற்புத பொருள்தான் இந்த வேம்பாளம்பட்டை என்று சொல்லலாம். பல மருத்துவ குணங்கள் கொண்ட இந்த பட்டையை தலைமுடிக்கு, சருமத்துக்கு மட்டுமின்றி உணவுக்கு இயற்கையாகவே சிவப்பு நிறத்தையும் கொடுக்கும் ஒரு மூலிகைப்பொருள். இதை வைத்து எண்ணெய் தயாரித்து தலையில் தேய்த்து வர முடி உதிர்தல் நின்று நீளமாக வளரும். இளநரை வராமல் தவிர்க்க முடியும்.

    எல்லோருக்குமே முடி காடு மாதிரி நல்ல அடர்த்தியாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கத்தான் செய்கிறது, ஆனால் இன்று நாம் சாப்பிடும் உணவு முறை பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்தினால் தலைமுடி உதிர்வது என்பது சகஜமாக போய்விட்டது.

    தலைமுடி தானே போனால் போகட்டும் என்று அலட்சியமாக விட்டவர்கள் பலரும், நாளடைவில் முன்கூட்டியே யோசித்து இருக்கலாமோ? முன்கூட்டியே கவனித்து இருக்கலாமோ? என்று புலம்புவதையும் காண முடிகிறது. எனவே தலை முடி அதிகமாக உதிர ஆரம்பித்தால் ஆரம்பத்திலேயே இந்த விஷயத்தை நீங்கள் கடைப்பிடித்து வருவதனால் உடனடியாக கட்டுப்படுத்தி விட முடியும்.

    அப்படியே முடி இழந்த பின்பும் கவலை இல்லாமல் இந்த எண்ணெய்யை தடவி பாருங்கள், நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும். மீண்டும் உதிர்ந்த இடத்தில் முடியை வளர வைக்கக்கூடிய சக்தி இந்த வேம்பாளம்பட்டைக்கு உண்டு.

    இது நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும். தலைமுடி உதிர்வு, தலைமுடி அடர்த்தி குறைதல், நீண்ட வளர்ச்சி இன்மை, நரைமுடி, இளநரை ஆகிய அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து கட்டக்கூடிய  அற்புதமான எண்ணெய்யை எப்படி தயாரிப்பது? என்பதை  இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்

    தேவையான பொருட்கள்:

    வெட்டிவேர்- 50 கிராம்

    வெந்தயம்- ஒரு ஸ்பூன்

    தேங்காய் எண்ணெய்- 500 லிட்டர்

    வேம்பாலைப்பட்டை-5

    ஆமணக்கு எண்ணெய்- 2 ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் வெட்டிவேர், வெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். இதனை டபுள் பாய்லிங் முறையில் சூடுபடுத்த வேண்டும். அதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதில் வெட்டிவேர், வெந்தயம் போட்ட பாத்திரத்தை உள்ளே வைத்து சூடுபடுத்த வேண்டும்.

    நன்றாக தேங்காய் எண்ணெய் சூடான பிறகு இறக்கி அதில் வேம்பாலை பட்டை மற்றும் 2 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து அதில் ஒரு வேம்பாலைப்பட்டை போட்டு அப்படியே ஒருநாள் முழுவதும் வைக்க வேண்டும். அதன்பிறகு தலைக்கு தேய்க்கலாம்.

    வேம்பாளம்பட்டை தலைமுடியின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரித்து முடி உடைதலைத் தடுக்கிறது. அதோடு உடல் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதால் முடியை வலிமையாக்கி தலைமுடியின் பல்வேறு அடுக்குகளுக்குள் எண்ணெய் சென்று தலைமுடிக்குத் தேவையான ஊட்டத்தையும் வலிமையையும் கொடுக்கும்.

    ×