என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aaneega Kalanjiyam"

    • பெருமாளுக்கு புஷ்ப மாலைகள் சாற்றியிருக்கும் விதம் நேர்த்தியாக உள்ளது.
    • தனி சந்நிதியில் பத்மாவதித் தாயார் கம்பீரமாக வீற்றிருந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    பெருமாள் திருமார்பில் மகாலட்சுமித் தாயார் எழுந்தருளி உள்ளார்.

    கல்யாண மாப்பிள்ளை ஆதலால் கையில் கங்கணம் அணிந்து கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார்.

    தசாவதார ஒட்டியாணம் அவர் அழகுக்கு அழகு செய்கிறது.

    வேட்டையாடச் சென்று பெண்மானான பத்மாவதியை வேட்டையாடியதால் கையில் கத்தியுடன் பெருமாள் காணப்படுகிறார்.

    உத்சவர் கல்யாண சீனிவாசர் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உள்ளார்.

    போக ஸ்ரீநிவாசரும் சந்நிதியில் அழகாக எழுந்தருளி உள்ளார்.

    மூலவரின் திருவடி தரிசனம் நம் மனதை விட்டு என்றுமே அகலாது.

    பெருமாளுக்கு புஷ்ப மாலைகள் சாற்றியிருக்கும் விதம் நேர்த்தியாக உள்ளது.

    புஷ்பங்களை கண்ணைக் கவரும் வண்ணக்கலவை மிளிரும் வண்ணம் தொடுத்து பகவானுக்கு அர்ப்பணித்து உள்ளது மிகவும் அற்புதம்.

    தனி சந்நிதியில் பத்மாவதித் தாயார் கம்பீரமாக வீற்றிருந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    இது அவருடைய பிறந்த இடம் அல்லவா? எழிற்பொங்க நம்மை வசீகரிக்கிறார் உற்சவர் பத்மாவதித் தாயார்.

    அமர்ந்த கோலத்தில் தாயார் மஞ்சள் சரடுகள் அணிந்து காட்சி அளிப்பது மிகவும் அழகாக உள்ளது.

    விளம்பி வருஷம், வைகாசி மாதம், உத்திர நட்சத்திரம் அன்று திருமணம் நிகழ்ந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    தீர்த்தம் பரம தீர்த்தம் எனப்படுகிறது.

    திருச்சானூரில் எழுந்தருளி இருப்பவர் மகாலட்சுமியாகிய அலர்மேல் மங்கை என்றும், இந்த தலத்து தாயார் தான் பத்மாவதி என்றும் இந்தப் பகுதியில் உள்ளோர் பெருமிதமாகக் கூறிக்கொள்கிறார்கள்.

    தாயார் சந்நிதிக்கு வெளியில் பத்மாவதி திருக்கல்யாண வைபவத்திற்கு மஞ்சள் அரைத்த இயந்திரம் இன்றும் காணப்படுகிறது.

    அந்த விபரத்தை நமக்குப் புரியும் வண்ணம் தமிழில் எழுதிவைத்துள்ளனர். பிரகாரத்தில் தனி சந்நிதி கொண்டு ஆண்டாள் நாச்சியாரும் எழுந்தருளி உள்ளார்.

    திருப்பதியில், ஏகாந்தமாக சேவை சாதிக்கும் சீனிவாசர் இங்குக் கல்யாண வேங்கடேசப் பெருமாளாக காட்சி அளிக்கிறார்.

    இதனால் இவ்வூருக்கும், இந்த ஊர் பெருமாளுக்கும் ஏற்றம் அதிகம்.

    பிராட்டியோடு சேர்த்து சேவை சாதிக்கும் இந்தக் கல்யாண வேங்கடேசரைக் காண இப்போது நிறைய பக்தர்கள் வருவது மனதிற்கு நிம்மதியாக உள்ளது.

    திருமலை போன்றே தரிசனகால அட்டவணை இங்கும் உள்ளது.

    காலை 7 மணியில் இருந்து பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணிவரையிலும் இக்கோவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    ×