என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "400m Hurdles"

    • இந்திய ஓபன் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
    • இதில் நாடு முழுவதும் இருந்து 400-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், இந்திய ஓபன் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 14 வகையான பந்தயங்கள் நடைபெற்றன. இதில் நாடு முழுவதும் இருந்து 400-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தமிழக வீராங்கனைகள் டாப்-3 இடங்களை வசப்படுத்தினர். நித்யா ராமராஜ் 13.32 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். கே.நந்தினி (13.58 வினாடி) 2-வது இடத்தையும், ஸ்ரீரேஷ்மா (13.99 வினாடி) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ் 56.90 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை சொந்தமாக்கினார். கேரள வீராங்கனை அனு (57.52 வினாடி) 2-வது இடத்தையும், தமிழக வீராங்கனை அஸ்வினி (1 நிமிடம் 01.27 வினாடி) 3-வது இடமும் பெற்றனர். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கிருத்திகா 11.87 வினாடியில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கேரளாவின் ஆர்த்ரா (12.07 வினாடி) 2-வது இடமும், பீகாரின் ஷதாக்ஷி ராய் (12.15 வினாடி) 3-வது இடமும் கைப்பற்றினர்.

    ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் ஆந்திர வீரர் ஷேக் முகைதீன் (2.08 மீட்டர்) முதலிடமும், தமிழக வீரர் முகேஷ் அசோக்குமார் (2.05 மீட்டர்) 2-வது இடமும், கடற்படை வீரர் பாரதி விஸ்வநாதன் (2.05 மீட்டர்) 3-வது இடமும் பெற்றனர். நீளம் தாண்டுதலில் உத்தரபிரதேசத்தின் ஆதித்யா குமார் சிங் (7.74 மீட்டர்) தங்கப்பதக்கத்தை வென்றார். ரெயில்வே வீரர் சுவாமி நாதன் (7.64 மீட்டர்) 2-வது இடமும், தமிழகத்தின் ஷரோன் ஜெஸ்டஸ் (7.54 மீட்டர்) 3-வது இடமும் பிடித்தனர். டிரிபிள் ஜம்பில் தமிழகத்தின் கெய்லி வெனிஸ்டர் 15.64 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    • உலக தடகள இன்டோர் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது சொந்த 400 மீட்டர் உலக சாதனையை அவர் முறியடித்தார்.
    • 49.17 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார்.

    நெதர்லாந்தின் ஓட்டப்பந்தய வீராங்கனை ஃபெம்கே போல் நேற்று நடந்த உலக தடகள இன்டோர் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது சொந்த 400 மீட்டர் உலக சாதனையை முறியடித்தார். அவர் 49.17 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார். இரண்டு வாரங்களுக்கு முன்பு டச்சு சாம்பியன்ஷிப்பில் அவர் செய்த சாதனையை விட 0.07 முன்பே கடந்துள்ளார்.

    ஆகஸ்ட் மாதம் புடாபெஸ்டில் நடந்த உலகப் போட்டிகளில் அவர் வென்ற 400 தடைகள பட்டத்தை தொடர்ந்து இன்டோர் பட்டமும் கிடைத்ததுள்ளது.

    டீம்மேட் மற்றும் ஒன்றாக பயிற்சியில் ஈடுபடுவரான பாட்னர் லீக் கிளேவர் 50.16-ல் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இரண்டு டச்சு விளையாட்டு வீரர்கள் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

    ×