என் மலர்
நீங்கள் தேடியது "3 thousand cases"
- புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவர் நீதிபதி பரோஸ் யுபாத்யாய் வழிகாட்டுதலின்படி 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் புதுவையில் நடந்தது.
- தேசிய மக்கள் நீதிமன்றத்தை புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவர் நீதிபதி பரோஸ் யுபாத்யாய் வழிகாட்டுதலின்படி 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் புதுவையில் நடந்தது.
புதுவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம், காரைக்கால், மாகி, ஏனாம் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.
சுமார் 3 ஆயிரத்து 600 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதற்காக புதுவையில் 9, காரைக்காலில் 4, மாகிவில் 2, ஏனாமில் ஒரு அமர்வு என மொத்தம் 16 அமர்வுகள் செயல்பட்டன.
தேசிய மக்கள் நீதிமன்றத்தை புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் செந்தில்குமார், நீதிபதிகள் ராபர்ட்கென்னடி, ரமேஷ், வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேலு, பொருளாளர் லட்சுமிநாராயணன், மற்றும் வக்கீல்கள், அரசு அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், வழக்காளிகள் என பலரும் பங்கேற்றனர்.






