என் மலர்
நீங்கள் தேடியது "123 person affected"
- புதுவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்தது.
- புதுவையில் 59, காரைக்காலில் 15, ஏனாமில் 15 பேர் என 89 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்தது.
இந்நிலையில் ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று பரவியுள்ளது. புதுவையில் 2 ஆயிரத்து 355 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 86, காரைக்காலில் 28, ஏனாமில் 9 பேர் என புதிதாக 123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 10, காரைக்காலில் 2, ஏனாம் 2 பேர் என 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 510, காரைக்காலில் 95, ஏனாமில் 39, மாகேவில் 2 பேர் என 649 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 59, காரைக்காலில் 15, ஏனாமில் 15 பேர் என 89 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 48 ஆயிரத்து 571 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறிமுறைகளை தொடரவும், அனைவரும் முககவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.






