என் மலர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள் வெளியேற்றம்"
லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அந்த குடியிருப்பில் வசித்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். #LondonFire #LondonFlatsFire
லண்டன்:
லண்டனின் மேற்கு ஹாம்ப்ஸ்டட் பகுதியில் உள்ள 5 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென பரவத் தொடங்கியது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக, சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதலில் 4-வது தளத்தில் தீப்பிடித்து, மேல் தளத்திற்கும் பரவியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேல் தளம் சேதமடைந்து, கூரை இடிந்து விழும் ஆபத்து இருப்பதாகவும் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. #LondonFire #LondonFlatsFire
லண்டனின் மேற்கு ஹாம்ப்ஸ்டட் பகுதியில் உள்ள 5 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென பரவத் தொடங்கியது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக, சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதேசமயம், குடியிருப்பில் வசித்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் அவசரம் அவசரமாக வெளியேறி உயிர்தப்பினர். தீ சூழ்ந்த அறையில் சிக்கிக்கொண்ட 2 நபர்கள் மட்டும் கிரேன்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறித்த நேரத்தில் மக்கள் வெளியேற்றப்பட்டதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வடக்கு இங்கிலாந்தில் காட்டுத் தீ பரவி வருவதால் அப்பகுதியைச் சுற்றி வசிக்கும் ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
லண்டன்:
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர் அருகே காட்டுத் தீ பரவி வருகிறது. கடும் வெப்பநிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமையன்று டவ்ஸ்டோன்ஸ் நீர்த்தேக்கம் அருகே தீப்பிடித்து, பின்னர் அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவியது. சுமார் 6 கிமீ தொலைவுக்கு தீ பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. 10 தீயணைப்பு வாகனங்களில் சென்றுள்ள 50 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, காட்டு தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 34 வீடுகளில் வசித்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

காட்டுத் தீயினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், கரும்புகை காரணமாக பாதிப்பு ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் ஜன்னல் கதவுகளை மூடி வைக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இன்று அப்பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. #tamilnews






