என் மலர்
நீங்கள் தேடியது "புதிய வகுப்பறை கட்டிடங்கள்"
- அமைச்சர் ஆர்.காந்தி குத்து விளக்கேற்றி ெதாடங்கி வைத்தார்
- முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சிமூலம் திறந்து வைத்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 அரசுப் பள்ளிகளில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3கோடியே 67 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று காணொளி காட்சிமூலம் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து ராணிப்பேட்டை அடுத்த வி.சி. மோட்டுர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல் அமைச்சர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இணையாக முன்னேற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளையும், பழுதடைந்த பழைய பள்ளிக் கட்டிடங்களை அகற்றி பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் சேஷாவெங்கட், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் கடப்பேரி சண்முகம்,ஊராட்சி மன்றத் தலைவர் முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






