என் மலர்
நீங்கள் தேடியது "சிகரெட் விற்பனை"
சென்னை:
சென்னையில் தடையை மீறி பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள கடைகளில் சிகரெட் விற்பனை நடந்து வருகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பீடி, சிகரெட், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்பட்டு ஆண்டுக்கு பல ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்து வருகிறார்கள். ‘புகை நமக்கு பகை’, ‘புகைப்படித்தல் உடல் நலத்துக்கு கேடு’, ‘புகைப்பிடிக்காதீர்கள்’ என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகரில் பள்ளிக்கூடங்கள் அருகே சிகரெட் விற்பனை செய்பவர்கள் மீதும், பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இதனால் பள்ளிக்கூடங்கள் அருகே புகையிலைப் பொருட்கள், சிகரெட் விற்பனைக்கு 2003-ம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது. மேலும் பள்ளி அருகே 100 மீட்டருக்குள் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை மாநகரில் முக்கிய பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்கள் அருகே சிகரெட் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
புரசைவாக்கம், வேப்பேரி, சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் தாரளமாக பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
தி.நகர் பனகல்பூங்கா பிரகாசம் சாலையில் உள்ள சென்னை மாநகரட்சி பள்ளி முன்பு உள்ளபெட்டிக்கடையில் சிகரெட், புகையிலை பொருட்களை அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் வாங்கி புைக்கிறார்கள்.
இதனால் அங்கு மாணவ- மாணவிகள் புகையால் அவதிப்படுகிறார்கள். இதே போல் உஸ்மான் ரோட்டில் அரசு உதவி பெறும் பள்ளி காம்பவுண்டு சுவர் அருகே உள்ள பெட்டிக்கடையில் பீடி, சிகரெட், புகையிலைப் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
புரசைவாக்கம் அழகப்பா சாலையில் உள்ள தனியார் பள்ளி எதிரேயும், வேப்பேரி நாராயண குரு ரோட்டில் உள்ள பள்ளிக்கூடம் முன்பு உள்ள டீக்கடையிலும் சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






