என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுதி ஏர்லைன்ஸ் விமானம்"

    சென்னை விமான நிலையத்தில் ரியாத் செல்வதற்கு புறப்பட்ட சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் எந்திர கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால் 204 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இன்று காலை ரியாத்துக்கு செல்லும் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அதில் 204 பயணிகள், 7 ஊழியர்கள் என மொத்தம் 211 பேர் இருந்தனர்.

    விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்தபோது அதில் எந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து அவர் விமானத்தை ஓடு பாதையிலேயே நிறுத்தி விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே இழுவை வாகனம் மூலம் விமானத்தை ஓடு பாதையில் இருந்து இழுத்து வந்து நிறுத்தினர். அதில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கினர்.

    அதன்பின் ஊழியர்கள் விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். விமானி உரிய நேரத்தில் எந்திர கோளாறை கண்டு பிடித்ததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
    ×