என் மலர்
முக்கிய விரதங்கள்
பூமியின் புதல்வியாகிய அன்னை, தான், ஜனகனின் திருமகளாகப் போற்றப்பட திருவுளம் உவந்த புண்ணிய தினம்.
ஜனக மகாராஜன், ஒரு வேள்வி செய்ய விரும்பி, அதற்கான நிலத்தைத் தேர்ந்தெடுத்தார்... யாகபூமியை சமம் செய்வதற்காக, முறைப்படி வழிபாடுகள் செய்து, எருதுகளில் தங்கக் கலப்பையைப் பூட்டி, உழ ஆரம்பித்தார்..அப்போது, ஓரிடத்தில், ஏர் முனை நகராது போகவே, அதை ஆராய்ந்து பார்த்ததில், ஒரு பெட்டி கிடைத்தது...பெட்டியில் சிறு குழந்தையாகத் திருமகள் தோன்றியருளினாள்
மாசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினமே சீதா அஷ்டமி.. இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்கள் சிலவற்றிலும், தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் வைசாக சுக்ல நவமி தினம் சீதையின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகின்றது... எனினும் பெரும்பாலான பகுதிகளில் சீதையின் ஜெயந்தி உத்சவம் இன்று தான்..
இன்றைய தினம், ஸ்ரீ சீதா தேவிக்குப் பூஜைகள் செய்து வழிபடுவது மிக நல்லது..
இல்லங்களிலும், ஸ்ரீ சீதாராமரின் திருவுருவப்படத்திற்கோ அல்லது விக்ரகத்திற்கோ அபிஷேக ஆராதனைகள் செய்து, ஸ்ரீராமரின் அஷ்டோத்திரங்களைக் கூறி வழிபடலாம்.. அண்ணலின் திருநாமங்களைக் கூறியல்லவோ அனுமன் அசோகவனத்தில் அன்னையின் உயிர் காத்தான்!!...

திருக்கோயில்களில் அன்று விசேஷ வழிபாடுகள் செய்யப்படுவதால், கோயில்களுக்குச் சென்று ஸ்ரீ சீதாராமரை தரிசனம் செய்யலாம். இராமாயணம் பாராயணம் செய்வதும், ஸ்ரீராமஜெயம் எழுதுவதும் மிக நல்லது..
ஜானகி தேவியின் ஜன்ம தின உத்சவத்தில், விரதமிருந்து அன்னையின் அருங்குணங்களைச் சிந்தித்து வணங்கி, நலம் பெறுங்கள்.

சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; அதிலும் சிறந்தது மாத சிவராத்திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ காலம்.
பிரதோஷ காலத்தில் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர். பிரதோஷ காலத்தில், சகல தேவர்களும், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின்றனர். அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசியமில்லை. பிரதோஷ காலங்களில் சிவதரிசனம் செய்வதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும்;
சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்; சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிப்பதால், இந்திரனுக்கு சமமான புகழ் கிட்டும்; பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் செய்யப்படும் எந்த கைங்கர்யமும் பலவாகப் பெருகி, அளவற்ற பலனை கொடுக்கும். பிரதோஷ காலத்தில் சிவன் கோவில் வழியாகப் போனான் ஒருவன். போகும் போது வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டே போனான். வெற்றிலை பாக்கு போட்ட பிறகு, விரலில் கொஞ்சம் சுண்ணாம்பு இருந்தது. அதை வழியிலிருந்த சிவன் கோவில் சுவரில் தடவி விட்டுப் போனான். ஆனால், அதுவே பெரும் புண்ணியமாகி விட்டது.
இவன் தடவிய சுண்ணாம்பு, மதில் சுவரில் இருந்த ஒரு சிறிய பள்ளத்தை அடைத்து விட்டது. உடனே, சிவன் கோவிலில், கைங்கரியம் செய்த புண்ணியம் இவனுக்கு சேர்ந்து விட்டது. இப்படியாக சிவ கைங்கர்யம், வழிபாடு எல்லாவற்றுக்குமே புண்ணியம் சொல்லப்படுகிறது. சிவன் கோவிலில், “சோம சூத்ர பிரதட்சணம்’ என்று ஒன்று உண்டு. இது, கொஞ்சம் சிக்கலானது. புரிந்து கொள்வது கூட சிரமம்; புரிந்து செய்தால் புண்ணியம். பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்வது புண்ணியம்.