என் மலர்
முக்கிய விரதங்கள்
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் வருகிறது. கார்த்திகையன்று விரதமிருந்து வழிபடுவோர் சகலசவுபாக்கியம் பெறுவர்.
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் வருகிறது. சிவனுக்கு திருக்கார்த்திகை போல, முருகனுக்கு ஆடிக்கார்த்திகை சிறப்பானது. இன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதத்தை மேற்கொள்வோர் பதவி உயர்வு அடைவர். நாரத மகரிஷி 12ஆண்டுகள் தொடர்ந்து இந்த விரதம் இருந்ததால், எல்லா முனிவர்களிலும் மேலான பதவி பெற்றார்.
இந்த விரத நாளில் கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் படிக்க வேண்டும். முருகனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். சிவன் தன் ஆறு நெற்றிக் கண்களில் நெருப்புப்பொறியை தோற்றுவித்தார். அப்பொறிகளை வாயுவும், அக்னியும் கங்கையில் சேர்த்தனர். அவை ஆறு குழந்தைகளாக உருவாயின. அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை சிவன் கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரிடம் ஒப்படைத்தார். பிள்ளைகளைக் காண வந்த பார்வதி ஆறுமுகத்தையும் ஒரு முகமாக்கினாள்.

அப்பிள்ளைக்கு ‘கந்தன்’ என்ற திருநாமம் உண்டானது. சிவபெருமான் முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம், “நம் பிள்ளையை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் அனைவரும் வானில் நட்சத்திர மண்டலத்தில் என்றென்றும் நிலைத்து வாழ்வீர்கள்.
உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு கார்த்திகேயன் என்றபெயரும் வழங்கும். கார்த்திகையன்று விரதமிருந்து வழிபடுவோர் சகலசவுபாக்கியம் பெறுவர்” என அருளினார். காளிதாசர் இயற்றிய குமார சம்பவம் என்னும் காவியத்திலும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணத்திலும் இந்தத் தகவல்கள் உள்ளன.

ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதியில் விரதமிருந்து திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களை கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும்.
வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது. தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களை கொண்டு அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 தெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும்.
இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.
நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களை கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லா பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.
தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.

ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு ஏற்ற நைவேத்தியம்:
வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும். ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பை தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள். பெளர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பெளர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பெளர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.
சித்திரை& பரணி, ஐப்பசி& பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.
தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும்.
பைரவர் விரதம் :
எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிட சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.
மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரை பொங்கல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜையறையில் பூஜை முடிந்து, இனி என்னால் யாருக்கும் எந்த கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பது தான்.

வைகுண்ட ஏகாதசி(மோட்ச ஏகாதசி) என அளக்கப்படும் இந்த நாளில் விரதமிருந்து பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறும், அவர்களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும்.
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி மோட்ச ஏகாதசி எனப்படும் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என ஸ்வாமியே சொன்ன மார்கழியில் வரும் இந்த ஏகாதசி மிக மிக சிறப்பு வாய்ந்தது.
வைகுண்ட ஏகாதசி என அளக்கப்படும் இந்த நாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறும், அவர்களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும்.
வைகுண்ட ஏகாதசியின் மகிமைப் பற்றிய ஒரு கதை வருமாறு:-
கம்பம் என்னும் நகரை மன்னர் வைகானாசர் ஆண்டு வந்தார். ஒரு நாள் இரவு மன்னர் ஒரு கனவு கண்டார். அது அவருக்குத் துயரத்தை விளைவித்தது. பொழுது விடிந்ததும் வேதத்தில் கரை கண்டவர்களை அழைத்தார்.
உத்தமர்களே! நேற்று இரவு நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். என் முன்னோர்கள் நரகத்தில் விழுந்து துயரப்படுகிறார்கள். என்னைப் பார்த்து, "மகனே, நாங்கள் படும் துயரம் உன் கண்ணில் படவில்லையா? இந்த நரகத்தில் இருந்து எங்களை விடுவிக்க ஏதாவது ஒரு வழி செய்யமாட்டாயா?'' என்று கதறி அழுதார்கள். இதற்கு என்ன அர்த்தம்? நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்" என்று வேண்டினார் மன்னர்.

"மன்னா! பர்வதர் என்று ஒரு முனிவர் இருக்கிறார். உன் முன்னோர்கள் ஏன் நரகத்தில் இருக்கிறார்கள், அவர்களை எப்படிக் கரை ஏற்றுவது என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும், அவரிடம் போ'' என்று வழி காட்டினார்கள்.
மன்னர் உடனே பர்வதரை தேடிப் போனார். அவரிடம் தான் கண்ட கனவை சொல்லி, தன் வருத்தத்தை நீக்குமாறு வேண்டினார். உடன் கண்களை மூடி சிறிது நேரம் தியானித்த பர்வத முனிவர், பின் கண்களைத் திறந்து எதிரில் கை கூப்பி நின்றிருந்த மன்னரிடம் சொல்லத் தொடங்கினார். "வைகானசா உன் தந்தை அரசன் என்ற பதவி போதையில் மனைவியை அலட்சியம் செய் தான்.
சேர வேண்டிய காலங்களில் தன்னைச் சேரும்படி மனைவி வேண்டியும், அவளை மதிக்கவில்லை. அவள் பார்வையில் இருந்தே விலகி போனான். இல்லற தர்மத்தில் ஈடுபடுபவர்கள், நல்ல பிள்ளை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியுடன் சேர வேண்டிய காலங்களில் சேர வேண்டும் என்பதை மறந்தான். அந்தப் பாவம்தான் அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.
நீ உன் மனைவி மக்களுடன் மோட்ச ஏகாதசி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து பரவாசுதேவனான பகவானை பூஜை செய். அதன் பலனை உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய். அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று சொன்னார் பர்வதார்.
மன்னனும் விதிப்படி மோட்ச ஏகாதசி விரதம் இருந்து பலனை முன்னோர்களுக்கு அர்ப்பணித்தார். அதன் பலனாக அவன் முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெற்று மகனுக்கு ஆசி கூறினார்கள். அன்று முதல் மன்னர் மோட்ச ஏகாதசியைக் கடைப்பிடித்துச் சிறப்படைந்தார்.
எனவே நமக்கு மட்டுமல்ல, நம் முன்னோர்களுக்கும் நற்கதி வரக் கூடிய ஏகாதசி இது.

பிரிவை சந்தித்த தம்பதியரை, சேர்த்து வைக்கும் வல்லமை காரடையான் நோன்பிற்கு உண்டு. இந்த விரதத்தை ஒரு முறை பார்வதிதேவியே கடைப்பிடித்திருக்கிறார்.

கயிலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடினாள், பார்வதிதேவி. ஆதியும், அந்தமுமான ஈசனின் கண்கள் மூடப்பட்டதால், உலகமே இருளில் மூழ்கியது. உலக உயிர்கள் துன்பத்தில் துவண்டன. இந்தப் பாவத்தை போக்கிக் கொள்வதற்காக உமாதேவி, பூலோகம் வந்தாள். காஞ்சீபுரம் என்ற திருத்தலத்தில் உள்ள ஆற்றங்கரையில் மணலில் சிவலிங்கம் செய்து, தவம் செய்தாள்.
அப்போது சிவபெருமான் திருவிளையாடலால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தண்ணீரில் சிவலிங்கம் கரைந்து போகாமல் இருக்க, காரடையான் நோன்பை அம்பாள் கடைப்பிடித்தாள். இதைக் கண்டு மணம் மகிழ்ந்த ஈசன், அம்பாளுக்கு காட்சி கொடுத்து அன்னையை தன்னுடன் இணைத்துக் கொண்டார். இங்கு தவம் செய்த அன்னையே காமாட்சி என்று பெயர் பெற்றாள்.

காஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த விரதத்தை, ‘காமாட்சி அம்மன் விரதம்’ என்றும் அழைக்கிறார்கள்.
வைக்கோலுக்கு மரியாதை :
காரடையான் நோன்பை மேற்கொள்பவர்கள், அந்த விரத வழிபாட்டின் போது அம்பாளுக்கு நைவேத்தியமாக அடை செய்து படைப்பார்கள். இந்த அடையை, காரரசி மாவு, காராமணி அல்லது துவரை கலந்து செய்ய வேண்டும்.
அடை தயாரிக்கப்படும் போது வாணலியின் அடியில் வைக்கோல் போட்டு மேலே தட்டில் அடையை வேக வைப்பார்கள். நெல் கதிரில் இருந்து பிரியும் வரை வைக்கோல் நெல்மணியை காத்து இருக்கும். சத்தியவான் உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன் ‘உயிரை மீட்டுக் கொண்டு வரும் வரை உடலை காத்திரு’ என்று சாவித்திரி சொல்லி விட்டு, வைக்கோலால் சத்தியவான் உடலை மூடி விட்டு சென்றாள் சாவித்திரி.
அதன் நினைவாகத் தான் வைக்கோல் போடுகிறோம். இந்த விரதத்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

கன்னிப்பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காகவும், நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் கூடகாரடையான் நோன்பை மேற்கொள்ளலாம்.
14-3-2017 (இன்று) காரடையான் நோன்பு
திருமணமான பெண்கள் ஒவ்வொருவரும் தவறாமல் வேண்டிக்கொள்வது, தங்களில் மாங்கல்ய பலம் நிலைத்திருக்க வேண்டும் என்பதே. அவர்களின் இந்த வேண்டுதலை நிறைவேற்றும் விரதமாக இருக்கிறது ‘காரடையான் நோன்பு’ என்னும் விரதம். கன்னிப்பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காகவும், நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் கூட இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
மாசி மாதத்தின் முடிவிலும், பங்குனி மாத தொடக்கத்திலும் இந்த விரதம் கடைப் பிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தின் போது, திருமணமான பெண்கள் அனைவரும், தங்கள் மாங்கல்யக் கயிறை, புதியதாக மாற்றிக்கொள்வார்கள்.
இந்த விரதம் எப்படி வந்தது என்பதைப் பார்ப்போம்..
அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி. இவள் ஒரு முறை காட்டில் சத்தியவானைச் சந்தித்தாள். கண் தெரியாத தாய்- தந்தையரை பண்போடு கவனித்து வந்த அவனது செய்கை, சாவித்திரிக்கு பிடித்துப் போனது. அவனையே திருமணம் செய்வதாக முடிவு செய்தாள். இதுபற்றி தனது தந்தையிடம் கூறினாள். அந்த நேரத்தில் அங்கு வந்த நாரதர், ‘சத்தியவான் சிறந்த குணவான். ஆனால் அவனது ஆயுள்காலம் இன்னும் ஓராண்டுகளே உள்ளது’ என்றார்.
சாவித்திரி அதைப் பற்றி கவலைப்படவில்லை. ‘மனித வாழ்வில் இன்ப துன்பங்கள் வந்து போகத்தான் செய்யும். அதை எதிர்கொள்வதில்தான் வாழ்க்கையின் சுவாரசியம் இருக்கிறது’ என்றாள்.
மகளின் விருப்பப்படியே சத்தியவான்- சாவித்திரி திரு மணத்தை நடத்தி வைத்தார் அஸ்வபதி. திருமணத்திற்கு பிறகு, காட்டிற்கு போய் தனது கணவனுடன் தங்கியிருந்தாள் சாவித்திரி. மாமனார், மாமியாரை அன்போடு கவனித்துக் கொண்டாள். இந்த நிலையில் சத்தியவானின் இறப்பு காலம் நெருங்கியது. அவனது இறுதிநாள் என்று குறிக்கப்பட்ட தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக சாவித்திரி ஒரு விரதத்தை மேற்கொண்டாள். மூன்று நாட்கள் இரவும், பகலும் விழித்திருப்பதுடன், உணவருந்தாமல் அந்த விரதத்தை கடைப்பிடித்தாள். இறுதிநாளின் போது கணவனை விட்டு பிரியாமல் கூடவே இருந்தாள். அவர்கள் இருவரும் காட்டில் பழங்களை பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மயங்கி விழுந்த சத்தியவானின் உயிர் பிரிந்தது.
சத்தியவானின் உயிரை எடுத்துச் செல்வதற்காக எமதர்மன் வந்தார். பதிவிரதை என்பதால், சாவித்திரியின் கண்களுக்கு எமனின் உருவம் தெரிந்தது. கணவனின் உயிரை எடுத்துக் கொண்டு தன் வழியில் சென்ற எமதர்மனை, பின் தொடர்ந்தாள் சாவித்திரி. இதைக் கண்ட எமதர்மன், ‘உனக்கு என்ன வேண்டும்?. எதற்காக என்னைப் பின்தொடர்கிறாய்?’ என்று கேட்டார்.
அதற்கு சாவித்திரி, ‘நான் இவ்வளவு நாள் இருந்த விரதத்தை கருத்தில் கொண்டு, என் கணவனின் உயிரைத் திரும்பித்தர வேண்டும்’ என்றாள்.
‘இல்லை பெண்ணே! இறந்தவரின் உயிரைத் திரும்பித் தருவதென்பது நடவாத காரியம். உனக்கு வேறு ஏதாவது வேண்டும் என்றால் கேள்’ என்றார் எமதர்மன்.
சமயோசித புத்தி கொண்ட சாவித்திரி, ‘அறத்தின் தேவதையே! எனது மாமனாருக்கு கண் தெரிய வேண்டும். அவரது நாடு மீட்கப்பட வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும்’ என்றாள்.

அவள் கேட்ட வரத்தை தந்துவிட்டதாக கூறிய எமதர்மன் அங்கிருந்து புறப்பட்டார்.
ஆனாலும் சாவித்திரி, எமதர்மனை பின் தொடர்ந்தபடியே இருந்தாள். இதைப் பார்த்த எமன், ‘நீ கேட்ட வரத்தை தந்த பிறகும், என்னைப் பின் தொடர்வதில் நியாயம் இல்லை’ என்றார்.
‘சரிதான்.. நான் கேட்ட வரத்தைக் கொடுத்து விட்டீர்கள். ஆனால் நான் நூறு குழந்தைகள் பெற்றுக்கொள்ள, எனக்கு என் கணவர் உயிருடன் வேண்டுமே..’ என்றாள்.
அவளது புத்திக்கூர்மையைக் கண்டு மகிழ்ந்த எமதர்மன், சத்திய வானின் உயிரைத் திரும்பிக் கொடுத்து அவர்கள் இருவரையும் வாழ்த்தி மறைந்தார். நூறு குழந்தைகள் வேண்டும் என்று சாவித்திரி கேட்ட வரத்தின் பலன் காரணமாக, சத்தியவானும், சாவித்திரியும் நானூறு ஆண்டுகள் வாழும் பாக்கியம் பெற்றனர்.
தன் கணவனுக்காக சாவித்திரி இருந்த விரதமே, ‘காரடையான் நோன்பு’ என்று அழைக்கப்படுகிறது.
விரதம் இருப்பது எப்படி?
இந்த விரதத்தின் போது வீட்டை தூய்மை செய்து மாக்கோலம் இட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து கலசம் வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து, அந்த அம்மனை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும்.
சாவித்திரி காட்டில் தன் கணவர் சத்தியவானுடன் வாழ்ந்த போது அங்கு கிடைத்த செந்நெல்லையும், காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து அம்பாளுக்கு சமர்ப்பித்து வழிபட்டாள். எனவே இந்த விரதத்தின் போது கார் நிலத்தில் விளைந்த நெல்லைக் குத்தி, அதில் கிடைக்கும் அரிசியை அரைத்து மாவாக்கி அடை தயாரித்து நைவேத்தியம் படைக்க வேண்டும்.
இதனால்தான் இந்த நோன்புக்கு ‘காரடையான் நோன்பு’ என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. பூஜையின் போது நோன்பு சரடை அம்மனுக்கு சாத்தி வழிபட வேண்டும். வழிபாட்டிற்கு பிறகு, மூத்த பெண்கள் இளைய பெண்களுக்கு சரடு கட்ட வேண்டும். பிறகு மூத்த பெண்கள், தானும் மஞ்சள் சரடை கட்டிக் கொண்டு அம்மனை வணங்கி, அடையை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

வருங்காலம் நலமடையவும் எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றலைப் பெறவும் வருகிற 9-4-2017 (ஞாயிற்றுக்கிழமை) திருமுருகன் விரத வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
குருவிற்கு சொந்த வீடாக அமைந்த மீனத்தில் சூரியன் பங்குனி மாதத்தில் சஞ்சரிப்பார். ‘உத்ரம்’ நட்சத்திரம் வரும்பொழுது பங்குனி உத்திரம் என்ற பார் போற்றும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு தங்கரதம் ஏறி வரும் முருகப்பெருமானை தரிசித்தால், மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். மன அமைதி கிடைக்கும்.
வருங்காலம் நலமடையவும் எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றலைப் பெறவும் திருமுருகன் வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான பங்குனிஉத்திரம் வருகிற 9-4-2017 (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. ஒரு வீட்டை நிலை நிறுத்துவது மரத்தாலான உத்திரம் தான்.

இரண்டு தூண்களுக்கு இடையே உத்திரம் அமைப்பர். அதுதான் வீட்டைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறது. அதே போல உத்திரத்தன்று முருகனை வழிபட்டால், தூண் போல நம்மை அவன் தாங்கிப் பிடித்துக் கொள்வான். துயரங்களை துரத்திவிட்டு துணையாக நம்முடன் அவன் இருப்பான்.
அன்றைய தினம் முருகப்பெருமானை, சர்க்கரையால் அபிஷேகம் செய்து சந்தோஷம் காணுங்கள். இளநீரால் அபிஷேகம் செய்து இனிய வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள். காவடி சுமந்தால் கவலைகள் குறையும். பால் அபிஷேகம் செய்தால் பார்போற்றும் வாழ்க்கை அமையும்.

பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
மனிதர்கள் இறைவனை வேண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டவையே விரதங்கள். பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது.
ஏனெனில் அந்த நாளில்தான் பார்வதிதேவி, தக்கனின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆம்! அந்த நாள் அன்னையின் பிறந்த நாள். சக்தியாகிய உமாதேவியே தன்னுடைய மகளாக பிறக்க வேண்டும் என்று தக்கன் நினைத்தான். இதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். அந்த தவத்தின் பயனாக உமாதேவி, தக்கனின் மகளாக அவதரித்தாள்.
அந்த தெய்வக் குழந்தைக்கு ‘தாட்சாயிணி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தான் தக்கன். இறுதியில் தன் மகளை, சிவபெருமானுக்கே திருமணமும் செய்து வைத்தான். அன்னை உமாதேவி அவதரித்த நாள் மாசி மகம் என்பதால் அந்த நாள் புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.
மக நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் கேது பகவான். இவர் ஞானத்தையும், முக்தியையும் அருள்பவர். செல்வ வளம் சேரும் யோகத்தை வழங்கக் கூடியவர். மாசி மக நாளை, ‘கடலாடும் நாள்’ என்றும், ‘தீர்த்தமாடும் நாள்’ என்றும் அழைப்பார்கள். இந்நாளில் விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். மாசி மகத்தில் விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். பின்னர் உலர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு சிவ சிந்தனையுடன், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மதியம் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு விட்டு, இரவு பால், பழம் சாப்பிடலாம். அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாமல், இறைவனை நினைக்கும் ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும். தேவார, திருவாசக பாடல்களை பாராயணம் செய்யலாம்.
இந்த விரதத்தை கடைப்பிடித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
தீர்த்தமாடும் நிகழ்வின் சிறப்பினை எடுத்துரைக்க, ஒரு புராண வரலாற்றுக் கதையும் கூறப்படுகிறது.
ஒரு முறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதில் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். அதில் இருந்து விடுபட வருணன், சிவபெருமானை நினைத்து பிரார்த்தித்தான். இந்த நிலையில் வருணன் கட்டுண்டு கிடந்ததால், உலகில் மழையில்லாமல் வறட்சியும், பஞ்சமும் நிலவியது.
அனைத்து உயிர்களும் துன்பம் அடைந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர். வருண பகவானை விடுவிக்கும்படி ஈசனிடம் வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசி மக திருநாளாகும்.
விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினார். பின்னர் ஈசனிடம், ‘இறைவா! நான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடலில் கிடந்தபோது, நீருக்குள் இருந்தபடியே உங்களை வணங்கினேன். அதன் பயனாக எனக்கு விடுதலைக் கிடைத்தது. அதே போல் மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி, இறைவனை வழிபடும் அனைவருக்கும் அவர்களின் பாவங்களையும், பிறவி துன்பங்களையும் நீக்கி அரு செய்ய வேண்டும்’ என்று கேட்டார்.
சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்த மாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. மாசிமகத்தன்று பிரசித்திப் பெற்ற புண்ணிய தலங் களில் ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேசுவரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வது நலன் தரும்.

ஒவ்வொரு மாதமும் சிரவணத் திருநாளில் நீராடி விரதம் இருந்து உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்த பின்னர், அதனை உண்டு விரதம் முடிப்பதே சிரவண விரதமாகும்.
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும். ஆகாச நகரம், திருவிண்ணகர் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. பக்தர்கள் நினைத்ததை நடத்தி வைப்பவர் ஒப்பிலியப்பன்.
இத்தலத்திற்கு வந்து ஸ்ரீனிவாசனை சரணடைந்தோர் அவரது அருளை பரிபூரணமாய் பெறுவது திண்ணம். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
செவ்வாய், வெள்ளி, சனிக் கிழமைகளில் திருவோண நட்சத்திரம் போன்ற நாட்களில் இந்த திருக்குளத்தில் நீராடி பெருமாளை தரிசிப்பவர் வைகுந்தம் செல்வதாக ஐதீகம். சாரங்க தீர்த்தம், சூரிய தீர்த்தம், இந்திர தீர்த்தம் என பல புண்ணிய தீர்த்தங்கள் கோவிலில் உள்ளன.
ஒப்பிலியப்பனை துளசியால் அர்ச்சிப்பவர், ஒவ்வொரு இதழுக்கும் அசுவ மேத யாகம் செய்த பலனை அடைகிறார். சந்தனம், குங்குமம், பூ இவற்றை சமர்பிப்பதன் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபடுகிறார்கள். ஆடை, அணிகலன்களை சமர்ப்பிப்பவர்கள் பாவ விமோசனம் பெறுகின்றனர். புரட்டாசி அல்லது பங்குனி சிரவனத்தன்று காலையில் புஷ்கரணியில் நீராடி, தானங்களை செய்பவர்கள் பாவங்கள் அகன்று போகும்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோயிலில் மாதாமாதம் சிரவணம் என்ற விழா பிரசித்தம். சிறப்பு என்னன்னா 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ'( என்னை சரணைந்தால் உன்னை நான் காப்பேன்). என்ற சரமச்லோகப்பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் சிரவணத் திருநாளில் பகல் 11 மணிக்கு சிரவண தீபம் தரிசனம் செய்யலாம். இத்திருநாளில் விரதம் இருந்து நீராடி, உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்த பின்னர், அதனை உண்டு விரதம் முடிப்பதே சிரவண விரதமாகும். பக்தர்கள் இந்த விரதத்தை தங்களது வீடுகளிலும் கடைப்பிடிக்கலாம். குருவாயூரைப் போன்று இங்கும் துலாபாரம் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உப்பு தவிர தங்கள் வேண்டுதலுக்கேற்ப அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்தலாம்.
உப்பிலியப்பனுக்குப் படைக்கப்படும் உப்பில்லாத உணவையே பிரசாதமாக உண்டு வந்தோம்.பூமி நாச்சியார் பகவானுக்கு சமைக்கும்போது உப்புப் போட மறந்துவிட்டதால் பெருமாள் உப்பில்லாமலே படைப்பதாக ஐதீகம்.
உப்பிலியப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் சிரவண நக்ஷத்திரத்தன்று சிரவண தீபம் எடுத்து குறி சொல்வது விசேஷம். பெருமாளுக்கு நெய் தீபம் பிரகாரமாக எடுத்துச் செல்லப்படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கேற்ப அனைத்து பொருட்களையும் ( உப்பு தவிர ) இங்கு காணிக்கை செலுத்தலாம்.
கும்பகோணத்தில் இருந்து தெற்கில் 7 கிலோ மீட்டர் தூரத்திலும், காரைக்கால், திருநள்ளாறு செல்லும் சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திலும், ராகு தலமான திருநாகேஸ்வரம் கோவிலுக்கு மிக அருகிலும் ஒப்பிலியப்பன் கோவில் அமைந்துள்ளது.

வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் மகான்களுக்கு விரதம் இருந்து அவர்களை பூஜிப்பது மிகவும் விஷயமாகும்.
வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் மகான்களுக்கு விரதம் இருந்து பூஜிப்பது சிறந்த விடயமாகும். குருக்கள் மக்களை நல்வழிப்படுத்தி இறைரீதியான பரிகாரங்களை உபதேசிப்பதால் மகான்களை குருவாக நினைத்து வியாழக்கிழமையில் இந்த விரங்களை அனுஷ்டிக்கின்றோம்.
மேலும் இந்த விரத அனுஷ்டிப்பின் போது மௌனமாக தியானிப்பதன் மூலம் மனதில் உள்ள கோரிக்கைகளை மகானின் பதம் சமர்ப்பிக்கலாம். சில இஸ்லாமிய தர்ஹாக்களில் வியாழக்கிழமை மிக விசேட தினமாக அனுஷ்டிக்கப்படுவதற்கு காரணம், அந்த தர்ஹாவில் ஒரு இஸ்லாமிய மகான் நிச்சயமாக அடங்கி இருப்பார் என்பது ஆகும்.

மேலும் எமது மனதில் எந்த ஒரு மகானுக்கோ அல்லது சித்தர்களுக்கோ முன்னுரிமை இருந்தால் அவர்களை நினைத்து வியாழக்கிழமைகளில் பூஜப்பது, விரதம் இருப்பது சிறந்த பலனைத் தரும்.

போன பிறவிப் பாவங்களையும் இந்த பிறவியில் செய்த பாவங்களையும் சேர்த்தே அழித்து, நமக்கு உயர்வை அளிக்கக் கூடியது புரட்டாசி மாதத் தேய்பிறையில் வரும் அஜா ஏகாதசி.
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறோம் இதற்குக் காரணம் நாம் செய்த பாவங்களே. இந்தப் பிறவியில் நாம் செய்த பாவங்களை ஓரளவுக்கு கணக்கிட்டு விட முடியும்.
ஆனால் போன பிறவிகளில் என்னென்ன பாவம் செய்தோம்? அவை எவ்வளவு என யாராலும் கணக்கிட முடியாது. தவறாமல் அவை நமக்குத் துன்பங்ககளைத் தந்து கொண்டுதான் இருக்கும்.

அப்படிப்பட்ட போன பிறவிப் பாவங்களையும் சேர்த்தே அழித்து, நமக்கு உயர்வை அளிக்கக் கூடியது புரட்டாசி மாதத் தேய்பிறையில் வரும் அஜா ஏகாதசி.
இதற்குச் சான்று அரிச்சந்திரன். ராஜ்ஜியம் இழந்து மனைவியையும் மகனையும் விலைக்கு விற்று, தானும் அடிமையாக இருந்து சுடுகாட்டைக் காவல் காத்தான் அரிச்சந்திரன்.
இவ்வளவுக்கும் காரணம் அவனது முன் வினையே. அரிச்சந்திரனின் துயரத்தை அறிந்த கௌதம முனிவர் "அரிச்சந்திரா புரட்டாசி மாதத் தேய்பிறையில் வரும் அஜா ஏகாதசி அன்று நீ இருந்து வழிபாடு செய். உன் துயரங்கள் எல்லாம் நீங்கும்" என்று உபதேசம் செய்தார் அதை அப்படியே செய்து அரிச்சந்திரன் உயர்வு பெற்றார்.

விஷ்ணுக்கு உகந்த ஏகாதசிகளில் விரதம் இருந்து வழிபாடு வந்தால் வாழ்வில் வளம் பெறலாம். இப்போது யோகினி ஏகாதசியை பற்றி விரிவாக பார்க்கலாம்.
குபேரன் சிவபூஜை செய்யும்போது, அவனுக்குப் பூக்களைக் கொண்டு வரும் வேலையை ஹேமமாலி என்பவன் செய்து வந்தான். மனைவியிடம் மிகுந்த அன்பு கொண்ட ஹேமமாலி ஒரு நாள், மனைவியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்ததால், குபேரனின் பூஜைக்குப் பூக்களைக் கொண்டு போகவில்லை.
பூஜையின்போது பூக்கள் இல்லாததைக் கண்ட குபேரன் கோபத்தில் குதித்தான். "தவறு செய்த ஹேமமாலிக்குப் பதினெட்டு விதமான குஷ்ட ரோகங்கள் வரட்டும்" என்று சபித்தான்.
ஹேமமாலியைக் குஷ்ட ரோகம் பீடித்தது. அவன் மனைவி விசாலாட்சி உள்ளம் உடைந்தாள். கணவன் மனைவி இருவருமாக மேரு மலைக்குப் போய், அங்கே தவம் செய்து கொண்டிருந்த மார்க்கண்டேயரின் திருவடிகளில் வீழ்ந்தார்கள்.

அவர் "யோகினி ஏகாதசி''யை அவர்களுக்கு உபதேசித்தார். அதன்படியே விரதம் இருந்து மகாவிஷ்ணுவை பூஜித்த ஹேமமாலி நோய் நீங்க பெற்றான். குபேரபுரிக்கே திரும்பினான்.
ஆடி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி யோகினி ஏகாதசி எனப்படும். குஷ்ட ரோகத்தை நீக்கும் ஏகாதசி இது.

புண்ணியமிகு ஏகாதசி திருநாளில் (மாதந்தோறும்) பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப்பேறும், அவர்களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும்.
ஏற்றங்கள் மிகுந்தது ஏகாதசி. தேய்பிறையில் வரும் ஏகாதசி, வளர்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக, ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி இருபத்தைந்து ஏகாதசிகளும் வருவதுண்டு. இவற்றுள் மார்கழி மாதம் வளர் பிறையில் வருவது 'மோட்ச ஏகாதசி'. இதையே வைகுண்ட ஏகாதசியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்.
புண்ணியமிகு இந்தத் திருநாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப்பேறும், அவர்களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும். அன்றைக்கு ஏகாதசியின் மகிமையையும், இந்த விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்களையும் விவரிக்கும் திருக்கதைகளைப் படிப்பது வெகு விசேஷம் என்பார்கள்.
தசமி அன்றும், துவாதசி அன்றும் ஒரு வேளைதான் உணவு உண்ண வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நித்திய கர்மாக்களை (காலை வழிபாடு) செய்ய வேண்டும். ஏகாதசி அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மஹாவிஷ்ணுவை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.
ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மஹாவிஷ்ணுவின் கதைகளைக் கேட் பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும். கோபம், கலகம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும். துவாதசி அன்று காலையில் ஸ்வாமியைப் பூஜை செய்து விட்டுப் பிறகே உண்ண வேண்டும். ஓர் ஏழைக்காவது உணவு தந்து, அதன் பிறகே நாம் உண்பது நல்லது. அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை உண்பது நல்லது.