என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- ஈரோடு அருகே உள்ள சென்னிமலையில் பைரவருக்கு தனிக்கோவில் உள்ளது.
- யோக பைரவரின் அருட்தலமான இந்த திருப்பத்தூர் மதுரையிலிருந்து காரைக்குடிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
வைரவன்பட்டி:
பிள்ளையார்பட்டியிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த வைரவன்பட்டியில் மகா பைரவர் சிவகுமரனாகத் தனிச்சிறப்புடன் வீற்றிருந்து அருள்புரிந்து வருகிறார்.
சென்னிமலை:
ஈரோடு அருகே உள்ள சென்னிமலையில் பைரவருக்கு தனிக்கோவில் உள்ளது.
திருப்பத்தூர் யோக பைரவர்:
யோக பைரவரின் அருட்தலமான இந்த திருப்பத்தூர் மதுரையிலிருந்து காரைக்குடிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
இலுப்பைக்குடி வடுக பைரவர்:
காரைக்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரமுள்ள இந்த இலுப்பைக்குடித் தலத்தில் தான்தோன்றீஸ்வரர் - வடிவுடையம்மன் மூலவர் வடிவங்களாகத் திகழ்ந்தாலும் பரிவாரத் தெய்வமாகத் திகழும் வடுக பைரவரே சிறப்புத் தெய்வமாக வழிபடப்படுகிறார்.
புதுச்சேரியிலுள்ள திரு ஆண்டார் கோவில் வடுக பைரவர், திருப்பாதிரிபுலியூர் கால பைரவர், திருமயிலை கபாலீஸ்வரர், திருஒற்றியூர் பைரவர், திருவான்மியூர் பைரவர் முதலிய தலங்களிலுமுள்ள பைரவ வடிவங்கள் அதிக சக்தி உள்ளவர்களாக வழிபடப்படுகின்றனர்.
- இவைகள் எல்லாவற்றையும் தரிசித்து வருவது இயலாத காரியம்.
- ஆகவே மிக முக்கியமான எட்டு பைரவத் தலங்களை மட்டும் சிறப்புடன் வழிபடுகின்றனர்.
தில்லையாடி கால பைரவ விநாயகர்:
மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் வழியாக செல்லும் வழியில் பொறையாரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் தில்லையாடி அமைந்துள்ளது.
அஷ்ட பைரவ யாத்திரை தலங்கள்:
காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு பகுதிகளில் பைரவர் தலங்கள் காணப்படுகின்றன.
இவைகள் எல்லாவற்றையும் தரிசித்து வருவது இயலாத காரியம்.
ஆகவே மிக முக்கியமான எட்டு பைரவத் தலங்களை மட்டும் சிறப்புடன் வழிபடுகின்றனர்.
கார்த்திகை, மார்கழி மாதங்களில் அஷ்டமி தினத்தன்று இந்த வழிபாடு செய்யப்படுகின்றது.
வடக்கே காசி நகரில் அனுமன் காட்டில், ருரு பைரவரும், துர்கா மந்திரில் சண்ட பைரவரும், விருத்தகாளேசுவரத்தில் அஜிதாங்க பைரவரும், லட் பைரவர் கோவிலில் கபால பைரவரும், திரிலோசனகஞ்ச்சில் சங்கார பைரவரும், தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவரும், காமாச்சாவில் வடுக பைரவரும், காசிபுராவில் பீஷாண (பூத) பைரவரும், காசி நகரில் சிறப்பாக வழிபடப்படுகின்றனர்.
தெற்கில் திருப்பத்தூர், பைரவன்பட்டி, அழகாபுரி, பெருச்சிக் கோவில், திருமெய்ஞானபுரம், காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி ஆகிய தலங்கள் அஷ்ட பைரவத் தலங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
இவர்களைத் தரிசிக்க செல்வதே அஷ்ட பைரவ யாத்திரை எனப்படுகிறது.
- இத்தலத்திலுள்ள மலைக்கோவில் உச்சியில் தென்முகம் நோக்கி நின்ற கோலத்துடன் சட்டநாதர் காட்சி தருகிறார்.
- இவர் பைரவரின் அவதாரமே. பிரகாரத்தில் அஷ்ட பைரவர்களுக்கென்று தனிக்கோவில் உள்ளது.
சீர்காழி சட்டநாதர் ஆலயம்:
சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் தலைமைத் தானமாக விளங்குவது சீர்காழியாகும்.
திருஞான சம்பந்தர் அவதரித்த மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூரில் பிரம்மாவால் பூசிக்கப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் என்ற பெரிய சிவாலயம் உள்ளது.
இத்தலத்திலுள்ள மலைக்கோவில் உச்சியில் தென்முகம் நோக்கி நின்ற கோலத்துடன் சட்டநாதர் காட்சி தருகிறார்.
இவர் பைரவரின் அவதாரமே. பிரகாரத்தில் அஷ்ட பைரவர்களுக்கென்று தனிக்கோவில் உள்ளது.
காஞ்சிபுரம் வைரவேச்சுரம்:
திருக்கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் உள்ளது.
இங்கு பிரம்மன்சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது சிரத்தைக் கிள்ளியபைரவருக்கும் தனி சன்னதி அமைத்து வழிபாடு செய்தான்.
இதன் அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது.
இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ளது.
- தெற்கு நோக்கிய கருவறையில் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கும். இவர் சூரசூளாமணி பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
- இவருக்கு நேர் எதிரில் முதல் பிரகாரத்தில் சப்த மாதர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
வடசென்னையில் உள்ள தியாகராஜசுவாமி ஆலயத்தில் (மாணிக்கத் தியாகர்&வடிவுடையம்மை) வட்டப்பாறையம்மன் என்னும் துர்க்கை சந்நிதிக்கு எதிரே ஸ்ரீபைரவருக்குத் தனிக்கோவில் உள்ளது.
நமது ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் ஆட்சி செய்கின்றன. இந்த நட்சத்திரம் ஒவ்வொன்றும் லிங்க வடிவில், இத்தல அதிபதியான ஸ்ரீபைரவரை வணங்கி பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது.
தெற்கு நோக்கிய கருவறையில் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கும். இவர் சூரசூளாமணி பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
இவருக்கு நேர் எதிரில் முதல் பிரகாரத்தில் சப்த மாதர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
பொதுவாக சப்தமாதர்கள் தெற்குப் பிரகாரத்தில் மட்டுமே காணப்படுவர்.
ஆனால், இத்தலத்தில் சப்தமாதர்கள் பைரவரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென்பதற்காக வடக்கு பிரகாரத்தில் அமைத்து தனி வழியும் அமைத்துள்ளனர்.
பைரவருக்கு கிழக்கில் சூலதீர்த்தம் என்னும் பைரவ தீர்த்தம் அமைந்துள்ளது.
இங்குள்ள பைரவருக்கு கருப்பு நூலினால் நெய்யப்பட்ட வேட்டி மற்றும் துண்டினை வைத்து வழிபாடு செய்கின்றனர்.
பின்னர் இந்த வேண்டுதல் துணிகளை உடல் குறைபாடுள்ள ஏழைகளுக்கு வஸ்திர தானம் செய்கின்றனர். இவ்வாறு வஸ்திர தானம் செய்யும் குடும்பத்தவருக்கு பைரவர் காவல் தெய்வமாய் விளங்குகின்றார்.
- மேற்கு நோக்கிய கருவறையுடைய இத்தலத்தில் உள்ள இத்தல பைரவரைப் போன்ற அமைப்பு வேறு எந்தத் தலங்களிலும் கிடையாது.
- மேலும் ஸ்ரீகால பைரவருக்கு காசியில் உள்ளது போன்றே நாய் வாகனம் காணப்படவில்லை.
ஸ்ரீபைரவருக்கென்றே அமைந்த தனித்த ஆலயங்களில் இது காசிக்கு நிகரான பெருமையுடையது.
கும்பகோணம் மயிலாடுதுறை பெருவழியில் திருவாவடுதுறை அருகேயுள்ள இந்தத் தலத்தில்தான் பிரமனின் தலையைக் கொய்த ஸ்ரீகால பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்று கூறுவர்.
வடக்கே உள்ள காசி தீர்த்தத்தில் மூன்று நாட்கள் நீராடிய பலனை இங்குள்ள ஐந்து தீர்த்தங்களிலும் மூழ்கி ஒரே நாளில் அடையலாம் என்பது ஐதீகம். அதனால் இந்த ஷேத்ரபாலபுரத்தை காசிக்கும் வீசமதிகமான சிறப்பு பொருந்திய தலம் என்பர்.
இந்த ஊரில் பிறந்தவர்களுக்கும், இந்த ஊரில் இறப்பவர்களுக்கும் ஸ்ரீகால பைரவர் வலது காதில் தாரக மந்திரத்தை உபதேசித்து யம வாதனையை நீக்குவதாக கூறப்படுகிறது.
மேற்கு நோக்கிய கருவறையுடைய இத்தலத்தில் உள்ள இத்தல பைரவரைப் போன்ற அமைப்பு வேறு எந்தத் தலங்களிலும் கிடையாது.
மேலும் ஸ்ரீகால பைரவருக்கு காசியில் உள்ளது போன்றே நாய் வாகனம் காணப்படவில்லை.
காசியை வீட வீசமதிக பலன் தரும் என்பதால் காசிக்குச் சென்று ஸ்ரீகால பைரவரை வழிபட இயலாதவர்கள் இத்தல பைரவரை வழிபட்டும், காசி தீர்த்தமான கங்கையில் நீராட முடியாதவர்களும் இத்தலத்திற்கு வடக்கே ஓடும் காவிரியில் நீராடியும் காசிக்கு நிகரான புண்ணியத்தைப் பெறுகின்றனர்.
தினசரி இத்தலத்தில் ஒரு கால பூஜையே பகல் 12 மணிளவில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பகல் 12 மணிக்கு நடைபெறும். உச்சிக்கால பூஜை சிறப்புத் தரிசனமாகக் கூறப்படுகிறது.
காலையில் 8 மணிக்குள் காவிரியில் நீராடி 10.30 மணியளவில் சூலத்தீர்த்தத்தில் நீராடி 11 மணியிலிருந்து 12 மணிக்குள் ஸ்ரீகால பைரவரை தரிசிப்பவர்களுக்கு காசியின் எல்லாப் புண்ணியங்களும் ஒரு சேரக் கிடைக்கும்.
அது தவிர, கொடியவர்களால் ஏவப்பட்ட பில்லி, சூனியம், ரோகம் யாவும் அன்றைய தினமே நீங்கி இன்பம் கிட்டும் என்றும் கூறப்படுகிறது.
- தென்திசை நோக்கிய கருவறையில் காணப்படும் இந்த ஸ்ரீகால பைரவருக்கு ஸ்ரீசந்தான கால பைரவர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இது
- குழந்தைச் செல்வம் வரமருளும் சிறந்த தலம்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அருகிலுள்ள வாலீஸ்வரர் ஆலயத்தினை ஒட்டி ஸ்ரீகால பைரவருக்கான தனி ஆலயம் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் அமைக்கப்பட்டது.
இந்த பைரவ ஆலயத்தில் ஸ்ரீகால பைரவர் தனது சக்தியான ஸ்ரீகாளி தேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தென்திசை நோக்கிய கருவறையில் காணப்படும் இந்த ஸ்ரீகால பைரவருக்கு ஸ்ரீசந்தான கால பைரவர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
இது குழந்தைச் செல்வம் வரமருளும் சிறந்த தலம்.
குழந்தைச் செல்வம் வேண்டும் தம்பதியர் இக்கோவிலின் நந்தி தீர்த்தத்தில் புனித நீராடி, ஸ்ரீகாளிகா தேவி சமேத ஸ்ரீகால பைரவரை தரிசித்து, வேண்டுதலுக்காக அங்கு வைக்கப்பட்டிருக்கும் கல் நாய்க்குட்டிகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள பைரவரின் பெரிய நாய் வாகனத்தை மும்முறை வலம் வந்து, கல்நாய்க்குட்டியை கீழே வைத்து மழலைச் செல்வம் வேண்டி ஸ்ரீசந்தான கால பைரவரை வணங்கிச் செல்வது இவ்வாயத்தின் தனிச்சிறப்பு.
இந்தப் பிரார்த்தனையில் நிச்சயம் பலம் உண்டு என்பதற்கு இங்கு பெருமளவு காணப்படும் கல்நாய்க் குட்டிகளே சான்றாகத் திகழ்கின்றது.
ஸ்ரீசந்தான கால பைரவரின் அருளால் குழந்தை பிறந்த பிறகு மக்கட்செல்வம் வேண்டிய தம்பதியர், குழந்தையுடன் புதிய ஒரு கல்நாய்க்குட்டி பொம்மையைக் கொண்டு வந்து நேர்த்திக் கடன் முடித்து சிறப்புப் பூஜைகள் செய்கின்றனர்.
தெலுங்கு மொழிப் பிரதேசத்தில் அமைந்துள்ள இத்தல பைரவருக்குத் தமிழில் அர்ச்சனை செய்வது இன்னுமொரு கூடுதல் சிறப்பாகும்.
- நிர்வாணஷட்கம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும்.
- இது ஆத்மஷட்கம் என்ற பெயராலும் அறியப்படுகிறது.
நிர்வாணஷட்கம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும்.
இது ஆத்மஷட்கம் என்ற பெயராலும் அறியப்படுகிறது. ஆதிசங்கரர் துறவறம் மேற்கொண்டு குருவை தேடிக் கொண்டிருந்த பொழுது, ஆச்சாரியார் கோவிந்த பகவத்பாதரை சந்தித்தார்.
கோவிந்த பகவத்பாதர் ஆதிசங்கரரிடம் யாரென வினவ, அதற்கு விடையாக ஆதிசங்கரர் இந்த ஆறு பாடல்களை பாடியதாக ஒரு கருத்து நிலவுகிறது.
இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம் ஆகியற்றை மறுத்து சிவனே ஆனந்த மயமானவன் என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார்.
ஆறு பாடல்களையும் சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.
பாடல்கள்
1. மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை; இரு
கண்ணில்லை; செவி, நாக்கு நாசியும் இல்லை;
வானில்லை மண்ணில்லை; வளி ஒளியும் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
2. உயிர் மூச்சு மில்லை; ஐங் காற்றும் இல்லை;
எழு தாதும் இல்லை; ஐம் போர்வை இல்லை;
கை கால்கள் இல்லை; சினை வினையும் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
3. வெறுப்பில்லை விருப்பில்லை; மையல் பற்றில்லை;
சிறு கர்வம் இல்லை; அழுக்காறும் இல்லை;
அறம் பொருள் நல்லின்ப, வீடு பேறில்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
4. வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை;
மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை;
உணவில்லை, உணவாக்கி உண்பவரும் இல்லை!
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
5. மரணங்கள் ஐயங்கள், உயர்வு தாழ்வில்லை;
தந்தை தாயில்லை; தரும் பிறப்பில்லை;
உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
6. மாற்றங்கள் இல்லை; பல தோற்றங்கள் இல்லை;
எங்கெங்கும் எல்லாமும், எதனுள்ளும் இவனே;
தளையில்லை; தடையில்லை; வீடுபேறில்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
- அழகிய பவானிகோவில் ஜோஷி மடத்திலிருந்து ஆறு கி.மீ தொலைவில், ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
- ஜோஷி மடத்திலிருந்து 44 கி.மீ தொலைவில் ஸ்ரீகிருஷ்ணரின் பத்ரிநாத்கோவில் அமைந்துள்ளது.
பவானிகோவில்
அழகிய பவானிகோவில் ஜோஷி மடத்திலிருந்து ஆறு கி.மீ தொலைவில், ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
பத்ரிநாத்கோவில்
ஜோஷி மடத்திலிருந்து 44 கி.மீ தொலைவில் ஸ்ரீகிருஷ்ணரின் பத்ரிநாத்கோவில் அமைந்துள்ளது.
போக்குவரத்து வசதிகள்
ஜோஷி மடத்திற்கு 293 கி.மீ தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம், டேராடூனில் உள்ளது.
மிக அருகில் அமைந்துள்ள தொடருந்து நிலையம், அரித்வார் அருகே உள்ள ரிஷிகேஷில் அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை எண் 58 ஜோஷி மடத்தை புதுதில்லி, மற்றும் இந்திய-திபெத் எல்லைகளை சாலை வழியாக இணைக்கிறது.
- ஜோஷி மடத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் தபோவனம் எனும் அமைதியான இடம் அமைந்துள்ளது.
- இங்கு இயற்கையாக அமைந்த வெந்நீர் ஊற்றில் குளிக்க இதமானது. தௌலி கங்கை ஆறு அமைதியாக இவ்விடத்தை கடக்கிறது.
சங்கராச்சாரியர் மடம்
ஜோசி மடம் ஆதிசங்கரரால் இமயமலையில் நிறுவப்பட்டது. இங்குள்ள புனித குகையில் ஆதிசங்கரர் தவமியற்றியதாகக் கருதப்படுகிறது.
பத்ரிநாத்கோவில், சங்கரர் நிறுவிய ஜோஷி மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது.
நரசிம்மர்கோவில்
பனிக்காலத்தில் பத்ரிநாத்கோவில் மூடப்படும் போது, கோவிலிலுள்ள முக்கிய தெய்வச்சிலைகளை தீபாவளி நாள் முதல் ஜோஷி மடத்தில் உள்ள நரசிம்மர் கோவிலினுள் வைத்து வழிபடுவர்.
தபோவனம்
ஜோஷி மடத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் தபோவனம் எனும் அமைதியான இடம் அமைந்துள்ளது.
இங்கு இயற்கையாக அமைந்த வெந்நீர் ஊற்றில் குளிக்க இதமானது. தௌலி கங்கை ஆறு அமைதியாக இவ்விடத்தை கடக்கிறது.
- அதர்வண வேதத்தை நிர்வகிக்கும்படியாக ஆதிசங்கரர் ஜோஷி மடத்தை நிறுவினார்.
- ஜோஷி மடத்தில் குடிகொண்டுள்ள முக்கிய இறைவன் நரசிம்மர் ஆவார்.
ஜோஷி மடம் அல்லது ஜோதிர் மடம்ந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில் , இமயமலையில் 6150 அடி உயரத்தில் அமைந்துள்ள நகராட்சி பகுதியாகும்.
இமயமலையில் மலை ஏறும் குழுவினர்களுக்கும், பத்ரிநாத்கோவில் புனித யாத்திரை செய்பவர்களுக்கும் ஜோஷி மடம் நுழை வாயிலாக அமைந்துள்ளது.
இந்தியாவில் ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களில் ஜோஷி மடமும் ஒன்று.
சமயச் சிறப்புகள்
அதர்வண வேதத்தை நிர்வகிக்கும்படியாக ஆதிசங்கரர் ஜோஷி மடத்தை நிறுவினார். ஜோஷி மடத்தில் குடிகொண்டுள்ள முக்கிய இறைவன் நரசிம்மர் ஆவார்.
பத்ரிநாத்கோவில், குரு கோவிந்த்கோவில், பூக்களின் பள்ளத்தாக்கு எனப்படும் தேசிய பூங்கா ஆகிய இடங்களுக்கு ஜோஷி மடத்திலிருந்துதான் செல்ல வேண்டும்.
- சாம வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மடத்தை காளி மடம் என்றும் அழைப்பர்.
- இம்மடத்தின் முதல் மடாதிபதியாக இருந்தவர், ஆதிசங்கரரின் நான்கு சீடர்களில் ஒருவரான அஸ்தாமலகர் ஆவார்.
துவாரகை மடம்
துவாரகை மடம் அல்லது துவாரகை பீடம் , இந்தியாவின், குஜராத் மாநிலத்தில், இன்றைய தேவபூமி துவாரகை மாவட்டத்தின் கடற்கரை நகரான துவாரகையில், ஆதிசங்கரரால் எட்டாம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட அத்வைத மடமாகும்.
சாம வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மடத்தை காளி மடம் என்றும் அழைப்பர்.
இம்மடத்தின் முதல் மடாதிபதியாக இருந்தவர், ஆதிசங்கரரின் நான்கு சீடர்களில் ஒருவரான அஸ்தாமலகர் ஆவார்.
கோவர்தன மடம்
கோவர்தன மடம், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், புரி நகரத்தில் அமைந்துள்ளது. புரி ஜெகன்நாதர் கோயிலுக்கு தொடர்புடைய கோவர்தன மடம், ஆதிசங்கரர் கி. பி., 820இல் நிறுவிய நான்கு மடங்களில் ஒன்று.
ரிக் வேதத்தை முதன்மைபடுத்த, இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நிறுவப்பட்ட கோவர்தன மடத்தின் முதல் மடாதிபதியாக ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர் பொறுப்பேற்றார்.
பைரவர் மற்றும் பைரவியுடன், இம்மடத்தில் பெருமாள் மற்றும் சிவ பெருமான் பூஜிக்கப்படுகிறார்.
- யசூர் வேதத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது.
- இம்மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஷ்வரர் எனும் தன் சீடரை நியமித்தார் சங்கரர்.
சிருங்கேரி சாரதா பீடம் அல்லது சிருங்கேரி சாரதா மடம் தென்னிந்தியாவின், கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றாங்கரையில், சிருங்கேரி எனுமிடத்தில், ஆதிசங்கரரால் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் அத்வைத தத்துவத்தை பரப்ப அமைக்கப்பட்ட முதல் மடம்.
யசூர் வேதத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது.
இம்மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஷ்வரர் எனும் தன் சீடரை நியமித்தார் சங்கரர்.
மங்களூருவிலிருந்து 105 கி. மீ. தொலைவிலும், பெங்களூரிலிருந்து 303 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
பெருவாரியான ஸ்மார்த்தர்கள் ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை பின்பற்றுகிறார்கள்.






