என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • ஒன்பதாவது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஐந்து ஏழைகளுக்கு (குறைந்தது) உணவு அளிக்க வேண்டும்.
    • நேரடியாக உணவு வழங்க இயலாதவர்கள் யார் மூலமாகவாவது பணமாகவோ, உணவாகவோ கொடுத்து வழங்கலாம்.

    இந்த விரதத்தை ஆண், பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

    ஜாதி, மத வித்தியாசமின்றி எல்லோரும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.

    ஒன்பது வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால், நிச்சயமாக அற்புதமான பலன்களைக் கொடுக்கும்.

    எந்த ஒரு வியாழக்கிழமையிலும் விரதத்தை ஆரம்பிக்கலாம்.

    நாம் எந்தக் காரியத்தை நினைத்து ஆரம்பித்தாலும் தூய மனதோடு சாயி நாமத்தை உச்சரித்து தொடங்கலாம்.

    ஒரு தூய்மையான பலகை அல்லது இருக்கையில் மஞ்சள் துணி விரித்து அதன் மேல் சாயிபாபா படத்தை வைக்க வேண்டும்.

    படத்தை வைப்பதற்கு முன்னால் தூய நீரால், துணியால் படத்தைத் துடைத்து சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்.

    மஞ்சள் நிற மலர்களை அணிவிக்க வேண்டும். ஊதுபத்தியும், சாம்பிராணி தூபமும், தீபமும் ஏற்றி சாயி விரத கதையைப் படிக்க வேண்டும். சாயிபாபாவை ஸ்மரணை செய்யவும்.

    பழங்கள், கற்கண்டு, இனிப்புகள் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். காலை அல்லது மாலை அல்லது இருவேளையிலும் செய்யலாம்.

    நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் பட்டினியுடன் இந்த விரதத்தைச் செய்யவே கூடாது. (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் உட்கொள்ளலாம்) காலை அல்லது மதியமோ அல்லது இரவோ பழ, திரவ ஆகாரம் ஒரு வேளை சாப்பிட வேண்டும்.

    ஒன்பது வியாழக்கிழமைகளும் முடிந்தவர்கள் சாயிபாபா கோவிலுக்குச் சென்று வணங்கலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே சாயிபா படத்தை வைத்து பூஜையை பக்தியுடன் செய்யலாம்.

    வெளியூர் போக நேர்ந்தாலும் கூட நிறுத்தாமல் இந்த விரதத்தைச் செய்யலாம்.

    பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்னபிற காரணங்களால் விரதம் இருக்க இயலவில்லை என்றால், அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அடுத்த வியாழக்கிழமை விரதம் இருந்து ஒன்பது வியாழக்கிழமைகள் நிறைவு செய்யலாம்.

    ஒன்பதாவது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஐந்து ஏழைகளுக்கு (குறைந்தது) உணவு அளிக்க வேண்டும்.

    நேரடியாக உணவு வழங்க இயலாதவர்கள் யார் மூலமாகவாவது பணமாகவோ, உணவாகவோ கொடுத்து வழங்கலாம்.

    சாயி பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக, நமது வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்தம் பந்தம், தெரிந்தவர் என்று இயன்ற அளவு சாயிபாபா விரத புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும்.

    ஒன்பதாவது வியாழக்கிழமை வழங்கும் புத்தகங்களை பூஜையில் வைத்து வழங்கலாம். இப்படிச் செய்வதால் புத்தகத்தைப் பெறும் பக்தர்களின் விருப்பங்களும் ஈடேறும்.

    இந்த விதமாக விதிமுறைகளின்படி விரதமும் விரத நிறைவும் செய்தால் உறுதியாக எண்ணிய காரியம் ஈடேறும். இது சாயிபாபா அருளிச் சென்ற நம்பிக்கை.

    • மூன்று முறை ஆரத்தி எதற்கென்றால் நாம் எல்லோரும் திரிகுணத்திற்கு அப்பாற்பட்டவர் ஆக வேண்டும் என்பதற்கே.
    • ஆகையினாலேயே முடிந்த வரை ஒரே குரலில் மிக பக்தியுடன் எல்லோரும் கலந்து கொண்டு ஆரத்தி செய்ய வேண்டும்.

    முதலில் 4 முறை ஆரத்தி சுற்றுவதற்கு அர்த்தம், நமக்கு நான்கு விதமான புருஷார்த்த நன்மைகள் ஏற்படவே.

    இரண்டு முறை ஆரத்தி சுற்றுவதற்கு அர்த்தம் நம்முடைய ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் சேர்ப்பதற்கே.

    ஒரு முறை ஆரத்தி எதற்கென்றால் பரத்மாத்மாவுக்கும் நமக்கும் நடுவில் இருக்கிற கண்ணாடி சுவர் மறைந்து அவருக்கும் நமக்கும் எவ்வித பேதங்களும் இல்லை என்பதை தெரிவிப்பதற்கே.

    கடைசியில் ஏழு முறை ஆரத்தி சுற்றுவது எதற்கென்றால் நாம் ஏழு கடல் தள்ளி இருந்தாலும் கருணைக் கடல் பாபா நம்மை நிச்சயம் காப்பாற்றுவார் என்பதை தெரிவிப்பதற்கே.

    மூன்று முறை ஆரத்தி எதற்கென்றால் நாம் எல்லோரும் திரிகுணத்திற்கு அப்பாற்பட்டவர் ஆக வேண்டும் என்பதற்கே.

    ஆகையினாலேயே முடிந்த வரை ஒரே குரலில் மிக பக்தியுடன் எல்லோரும் கலந்து கொண்டு ஆரத்தி செய்ய வேண்டும்.

    புதிதாக ஆரத்தி பாடுபவர்கள் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் பாபா புகைப்படம் முன் அமர்ந்து ஆரத்தி பாடல் பாட வேண்டும் அதன் பொருளை படித்து புரிந்து கொண்டால் நல்ல பலன்கள் கிட்டும்.

    • முதலில் தீபத்தை பாபாவின் காலடியில் 4 முறை ஆரத்தி காட்டுவார்.
    • அதன் பின் வயிறு தொப்புள் அருகே 2 முறை ஆரத்தி சுற்றுவார். முகத்தினருகே ஒரு முறை ஆரத்தி சுற்றுவார்.

    சீரடியில் பாபா உடலுடன் இருந்த பொழுது துவாரகா மாயயில் மத்திய ஆரத்தி மட்டும் தான் நடந்து கொண்டிருந்தது.

    ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாபா சாவடியில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது சேஜ் ஆரத்தி, அடுத்த மறு நாள் காலையில் காகட ஆரத்தி நடந்து கொண்டிருந்தது.

    தூப ஆரத்தி முதலில் சாதே வாடாவில் (இப்பொழுது குரு ஸ்தானம்), அதற்கு பிறகு தீட்சித் வாடாவில் (இப்பொழுது மியூசியம்) நடந்து கொண்டிருந்தது.

    நான்கு ஆரத்திகளில் மொத்தம் 30 பாடல்கள் இருக்கின்றன.

    ஆரத்தி என்பது சுலபமாக பக்தியை வெளிகாட்ட அக்னியோடு சம்மந்தப்பட்ட ஒரு வழிபாடு.

    கூட்டு பக்தி வழிபாட்டில் நெய்யில் வத்தியை ஊறவிட்டு தீபங்காட்டி பக்தி கீதங்கள் பாடுவார்கள்.

    ஆரத்தி கொடுத்ததை இரண்டு கைகளால் வாங்கி கண்களில் ஒற்றிக் கொள்கிறார்கள்.

    சாயிபாபா குரு தேவுக்கு ஆரத்தி கொடுத்து கொண்டிருக்கும் பொழுது  கண்ணாறப் பார்ப்பது புண்ணியமும், யோகமும், ஷேமமும் கூட, ஆரத்தி நடக்கிற பொழுது பூசாரி அந்த தீபத்தை வலது கையில் காண்பித்து இடது கையில் மணியை ஆட்டிக் கொண்டு ஆரத்தி செய்வார்.

    முதலில் தீபத்தை பாபாவின் காலடியில் 4 முறை ஆரத்தி காட்டுவார்.

    அதன் பின் வயிறு தொப்புள் அருகே 2 முறை ஆரத்தி சுற்றுவார். முகத்தினருகே ஒரு முறை ஆரத்தி சுற்றுவார்.

    தலையில் இருந்து கால்வரை உடம்பு முழுவதும் ஏழு முறை சுற்றுவார்.

    அதன் பிறகு பாதத்தில் இருந்து தலை வரை 3 முறை ஆரத்தி சுற்றி ஆரத்தி பாடல்கள் பாடுவார்கள்.

    பாபா உடலோடு இருக்கிற பொழுது இப்படித்தான் ஆரத்தி எடுக்கப்பட்டது.

    • மாதவா அக்கர் பாபாவிடம் இந்தப் பாடலை காட்டியவுடன் ”இந்த பாடலை ஆரத்தியில் பாடுங்கள்! இந்த பாடல் நன்றாக இருக்கிறது.
    • இதை யார் பாடினாலும் அவர்கள் என்னை அடைவார்கள் என்று ஆசீர்வதித்தார்.

    சீரடி சாய் பாபாவுக்கு முதன் முதல் எழுதப்பட்ட ஆரத்திப் பாடல் "ஆரத்தி சாய் பாபா".

    இந்த பாடல் மத்திய வேளையில் தூப ஆரத்தியில் உள்ளது.

    இந்த பாடலுடன் தான் தூப ஆரத்தி ஆரம்பமாகும். இந்தப் பாடலை எழுதியவர் மாதாவா அக்கர்.

    காலம் செப்டம்பர் 1904 (இந்தப் பாடலை தாசகணுவிற்கு காட்டினார்).

    அவர் "இந்த பாடலை நம் பாபா பார்த்தால் நன்றாக இருக்கும்" என்று சொன்னார்.

    மாதவா அக்கர் பாபாவிடம் இந்தப் பாடலை காட்டியவுடன் "இந்த பாடலை ஆரத்தியில் பாடுங்கள்! இந்த பாடல் நன்றாக இருக்கிறது.

    இதை யார் பாடினாலும் அவர்கள் என்னை அடைவார்கள் என்று ஆசீர்வதித்தார்.

    பாபாவின் அவதாரம் இன்னும் நடந்து கொண்டேயிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படி அவர் மற்றுமொரு ஜென்மம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    அதற்காகத் தான் நான்கு வேளைகளிலும் சமாதி மந்திரியில் ஆரத்தி நடந்து கொண்டிருக்கிறது.

    சமாதியில் இருந்து கொண்டே நான் எல்லா காரியங்களையும் செய்து கொண்டிருப்பேன் என்று பாபாவே 11 கட்டளைகளில் கூறியதை நாம் நினைவு கொள்ள வேண்டும். 

    • அன்றாட வாழ்க்கையில் சிறுசிறு துன்பங்கள் வராமல் இருப்பதற்கு மத்திய வேளை ஆரத்தி உதவி செய்கிறது.
    • மனம் போன போக்கில் போகாமல் சாய் சரணம் அடைவதற்கு தூப ஆரத்தி உதவி செய்கிறது.

    இந்த ஆரத்தியால் பல அற்புதங்கள் நிறைந்துள்ளன.

    நாம் காலையில் எழுந்து சத்குருவை நினைத்து உலகமும் நாமும் நலமாக இருப்பதற்கு காகட ஆரத்தி உதவி செய்கிறது.

    அன்றாட வாழ்க்கையில் சிறுசிறு துன்பங்கள் வராமல் இருப்பதற்கு மத்திய வேளை ஆரத்தி உதவி செய்கிறது.

    மனம் போன போக்கில் போகாமல் சாய் சரணம் அடைவதற்கு தூப ஆரத்தி உதவி செய்கிறது.

    இன்று நடந்த நல்ல காரியங்களுக்காக நன்றி தெரிவிக்க சேஜ் ஆரத்தி செய்கிறோம்.

    இந்த நான்கு ஆரத்திகளை தினம் தினம் செய்வதினால் மனமும் உடலும் நல்வழி செல்லும்,.

    அதுவே பாபாவின் வழி. எங்கெல்லாம் சாய் ஆரத்தி நடக்கிறதோ, அங்கெல்லாம் நான் இருப்பேன் என்று சாய் உறுதி மொழி கூறுகிறார்.

    • இந்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்த ஆரத்திகள் முறையாக நடைபெற்று வருகின்றன.
    • ஆரத்தியை தினம் தினம் இப்படி பழக்கப்படுத்திக் கொண்டால் மந்த புத்தி மாறி சுறு சுறுப்படையலாம்.

    சாய் மார்க்கத்தில் செல்வதற்கு மூன்று சிறந்த வழிகள் உண்டு. அதில் முதலாவது,

    1. சீரடிக்கு செல்வது

    2. சாயி சத்சரித்திரம் பாராயணம் செய்வது.

    3. நான்கு வேளைகளும் ஆரத்தி பாடுவது.

    இதில் மூன்றாவது வேலையை முதலில் செய்து விட்டால் முதல் இரண்டு வேலைகளும், எந்த தடையுமின்றி நடக்கும். ஆகையால் ஆரத்தி செய்வதால் நல்ல பலன்களே கிடைக்கும்.

    குடும்பத்தினர், பந்துக்கள் ஓர் இடத்தில் சேர்ந்து ஒழுங்கு தவறாமல் சாய் ஆரத்திகளை பாடுவதினால் மனம் நிம்மதியடைந்து நல்ல சூழ்நிலை குடும்பத்தில் உண்டாகும்.

    ஆரத்தி நடக்கும் இடம் புனிதமடைந்து சாந்தி நிலையமாக மாறும்.

    சீரடி சாய் மந்திரில் தினமும் நான்கு வேளை ஆரத்தி நடைபெறுகிறது.

    காலை 4.30 காகட ஆரத்தி

    மதிய வேளையில் 12 மணிக்கு மதிய ஆரத்தி நடக்கும்.

    மாலையில் சூரியன் மறையும் கோதூளி வேளையில் தூப ஆரத்தியும், இரவு 10.30 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடைபெறுகின்றன.

    சமாதி மந்திரியில் ஆரத்தி நடை பெற்றுக் கொண்டிருந்தாலும், துவாரக மயீ, சாவடி, குருஸ்தான், க்யூ காம்ப்ளக்சில் டி.வி.யில் பார்த்துக் கொண்டு நாம் ஆரத்தி நடத்திக் கொள்ளலாம்.

    இந்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்த ஆரத்திகள் முறையாக நடைபெற்று வருகின்றன.

    ஆரத்தியை தினம் தினம் இப்படி பழக்கப்படுத்திக் கொண்டால் மந்த புத்தி மாறி சுறு சுறுப்படையலாம்.

    • பாபா உயிரோடு வந்ததைக் கண்ட பக்தர்களும் மக்களும் மகிழ்ச்சி கொண்டனர்.
    • பாபாவின் இந்தச் செயலால் பாபாவின் மகிமை மேலும் நாடு முழுவதும் பரவியது.

    பாபா ஒரு நாள் தமது சீடர் மஸல்சாபதியுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது மஹல்சாபதியிடம் நான் கடவுளைப் பார்த்துவிட்டு வர வேண்டும்.

    நான் வரும் வரையில் எனது உடலை பத்திரமாக பாதுகாத்து வைத்திருங்கள் என்று கூறினார்.

    நான் போய்வர மூன்று நாட்களாகும். மூன்று நாட்களில் திரும்பி வந்து நான் எனது உடலில் நுழைந்து உயிர் பெறுவேன் என்றும் பாபா கூறினார்.

    மஹல்சாபதியும் அப்படியே ஆகட்டும் என்றார். பாபா சொன்னபடி அவரது உயிர் உடலைவிட்டுப் பிரிந்து சென்றது. உயிரில்லாத உடலை மஹல்சாபதி பாதுகாத்து வந்தார்.

    இந்த விஷயம் எப்படியோ வெளியில் தெரிந்து மக்கள் அங்கே திரளாக கூடி விட்டனர்.

    இது தொடர்பாக விசாரிக்க உயர் அதிகாரிகளும் வந்து விட்டனர்.

    அதிகாரிகள் பாபாவின் உயிரற்ற உடலைப் பார்த்துவிட்டு, அவர் இறந்து விட்டார். எனவே அவரது உடலை அடக்கம் செய்து விடலாம் என்றனர்.

    ஆனால் பாபாவின் சீடர் மஹல்சாபதி அதற்கு சம்மதிக்க வில்லை.

    பாபாவின் அருள்வாக்கு இதுவரையிலும் பொய்யானதே இல்லை. அதனால் யாரும் அவரது உடலைத் தொட நான் அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

    உயர் அதிகாரிகள் கோபம் கொண்டு, நீங்கள் சொன்னது போல் மூன்று நாள் கழித்து நான்காவது நாள் பாபா உயிர் பெறாவிட்டால் நாங்களே பாபாவின் உடலை அடக்கம் செய்து விடுவோம் என்று மஹல்சாபதியை எச்சரித்து விட்டுச் சென்றனர்.

    மஹல்சாபதி சொன்னபடி மூன்று நாட்கள் கழிந்தன.

    நான்காவது நாள் காலையில் எல்லோரும் பாபாவின் உடல் அருகே கூடி விட்டனர்.

    அப்போது பாபா சொன்னபடியே அவரது உயிரற்ற உடல் உயிர் பெற்று எழுவதைக் கண்டனர்.

    பாபா உயிரோடு வந்ததைக் கண்ட பக்தர்களும் மக்களும் மகிழ்ச்சி கொண்டனர்.

    பாபாவின் இந்தச் செயலால் பாபாவின் மகிமை மேலும் நாடு முழுவதும் பரவியது.

    • சீரடி சாயி பாபா படுத்து தூங்குவதற்கு ஒரு சணல் துணியையே பயன்படுத்தி வந்தார்.
    • தரையில் விரித்து உட்காருவதற்கும், குளிரும் போது போர்வையாகப் போர்த்திக் கொள்வதற்கும் பயன்படுத்தினார்.

    சீரடி சாயி பாபா படுத்து தூங்குவதற்கு ஒரு சணல் துணியையே பயன்படுத்தி வந்தார்.

    தரையில் விரித்து உட்காருவதற்கும், குளிரும் போது போர்வையாகப் போர்த்திக் கொள்வதற்கும் பயன்படுத்தினார்.

    இதைக் கண்ட பக்தர்கள் பாபா இப்படி ஒரே துணியைப் பயன்படுத்துகிறாரே என்று வருந்தினார்கள்.

    இதனால் அவர்கள் பாபா படுத்து உறங்க ஐந்து அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட பலகையைக் கொண்டு வந்து பாபாவிடம் கொடுத்து, பாபா இனிமேல் நீங்கள் இந்தப் பலகையில் தான் படுத்து உறங்க வேண்டும் என்று வேண்டினார்கள்.

    பாபாவும் பக்தர்களின் வேண்டுகோளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.

    பக்தர்கள் கொடுத்த மரப்பலகையை மசூதியின் கூரையிலிருந்து மூன்று அடி தாழ்வாகவும், தரையிலிருந்து ஏழடி உயரத்திலும் அந்தரத்தில் இருக்குமாறு செய்து படுத்துக் கொள்வார்.

    இந்த அதிசயத்தைக் கண்டு பாபாவின் மகிமை மேலும் மேலும் பரவியது.

    • தண்ணீரிலேயே விளக்கு ஏற்றுங்கள் என்றார் பாபா. பக்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. புரியாமல் குழம்பினார்கள்.
    • பாபா மறுபடியும் சொன்னார். தண்ணீரை ஊற்றி விளக்கை ஏற்றுங்கள் என்றார்.

    சீரடியில் பாபா தங்கி இருந்த இடத்தில் இரவு நேரத்தில் அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்.

    அந்த அகல் விளக்குகளுக்கு, அங்கேயிருந்த வியாபாரிகள் எண்ணெய் வழங்கிக் கொண்டு இருந்தார்கள்.

    பாபாவின் மீது பொறாமை கொண்ட சிலர், அந்த வியாபாரிகளிடம் சென்று இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, இனிமேல் நீங்கள் எண்ணெய் தர வேண்டாம்.

    பாபா உங்களை எல்லாம் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று சொன்னார்கள்.

    அதை நம்பிய வியாபாரிகளும் விளக்கு எரிய தேவையான எண்ணெய் தருவதை நிறுத்தி விட்டார்கள்.

    ஒருநாள் விளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாமல் தவித்தனர். இதை பாபாவிடம் சென்று தெரிவித்தார்கள்.

    பாபாவின் ஞான திருஷ்டியில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டார்.

    அவருக்கு சிரிப்பு தான் வந்தது.

    இனிமேல் நமக்கு எண்ணெய் வேண்டாம்.

    தண்ணீரிலேயே விளக்கு ஏற்றுங்கள் என்றார் பாபா. பக்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. புரியாமல் குழம்பினார்கள்.

    பாபா மறுபடியும் சொன்னார். தண்ணீரை ஊற்றி விளக்கை ஏற்றுங்கள் என்றார்.

    பக்தர்கள் தயங்கியபடியே அவ்விதமே செய்ய, அகல் விளக்குகள் எண்ணெய்யில் எரிவதை விட பிரகாசமாக எரிந்தன.

    இதைக் கண்ட பக்தர்கள் ஆச்சரியம் அடைந்து மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.

    இதைக் கேள்விப்பட்ட வியாபாரிகள் தங்கள் தவறை உணர்ந்து பாபாவிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

    • அதன் காரணமாக ஊது உலைக்களத்தில் குழந்தை நழுவி விழுந்து விட்டது. "சாயி" என்று பாபா நாமத்தை உச்சரித்தாள்.
    • அதே நேரத்தில் சாயிபாபா தமது கைகளை தூணியில் நுழைக்கிறார்.

    1910&ம் ஆண்டு தீபாவளி நேரம். அது விடுமுறைக் காலமும் கூட.

    துவாரகாமய்யில் நெருப்பு குண்டமான தூணிக்கு அருகிலேயே அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார் சாயி பாபா.

    ஒளி பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த தூணியில் விறகுகளை நுழைத்துக் கொண்டிருந்தார் சாயிபாபா.

    அதே நேரத்தில் நீரடியில் சிறிது தூரத்தில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் ஒரு கொல்லனின் மனைவி உலைக் களத்தில் உள்ள துருத்தியில் கடமையாற்றிக் கொண்டு இருந்தாள்.

    அந்த நேரத்தில் அவள் கணவர் ஏதோ ஒரு கடமைக்காக அவளை அழைத்தார்.

    இடையில் குழந்தை இருப்பதை மறந்து "சாயி" என்று கூறியவாறு அவசரமாக வேகமாக விவேகம் இழந்து ஓடினாள்.

    அதன் காரணமாக ஊது உலைக்களத்தில் குழந்தை நழுவி விழுந்து விட்டது. "சாயி" என்று பாபா நாமத்தை உச்சரித்தாள்.

    அதே நேரத்தில் சாயிபாபா தமது கைகளை தூணியில் நுழைக்கிறார்.

    கைகள் கருகின. ஏன் பாபா இவ்வாறு செய்தார் என்று யாருக்கும் புரியவில்லை.

    அவருக்கு அருகில் இருந்த மாதவ்ராவும், தேவ்பாண்டேயாவும் உடனே நிலையை கண்டு உணர்ந்து, சாயிபாபாவைப் பின்னால் இழுத்து "சுவாமி ஏன் இவ்வாறு செய்தீர்கள்?" என்று கேட்டார்கள்.

    இங்கு இருந்து சிறிது தூரத்தில் எனது பக்தையின் குழந்தை தவறி எரிந்து கொண்டிருக்கும் உலைக் களத்தில் விழுந்துவிட்டது.

    ஆகவே தான் அதைக்காப்பாற்ற இங்கு தீயில் கைகளை விட்டேன் என்றார் சாயிபாபா.

    அனைவருக்கும் குழந்தையைக் காப்பாற்ற பாபா செய்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்கள்.

    "எனது கரங்கள் கருகிப் போனால் என்ன? மருந்து தான் உள்ளதே! குழந்தை (மறந்து தீயில் விழுந்த குழந்தை) தியில் வெந்து போனால் பிறகு நொந்து என்ன பயன்? என்று கூறி அருளினார்.

    இந்த சம்பவம் மூலமாக பாபாவின் பெருங்கருணையும் அவர் இங்கு அங்கு என்று இல்லாமல் எங்கும் நிறைந்தவர் என்பதும், ஆபத்தில் விரைந்து வருவார் என்பது தெரிய வருகிறது அல்லவா?

    தாய் என்றும் சேயின் நினைவே கொண்டது போல், பக்தையின் குழந்தைக்காக தனது கரத்தையே கருகச் செய்தார். சாபிபாபா.

    • அங்கே அவர் கண்களுக்கு, சாயிபாபாவே பாண்டு ரங்க சாமியாக காட்சி அளித்தார்.
    • கண்ணீர் மலர்களால் பூஜை செய்து திகைத்தார் தாசகணு.

    சாயி பக்தர்களில் ஒருவர் தாசகணுவர் என்பவர்.

    அவருக்கு ஒரு பண்டரிபுரம் சென்று பண்டரிநாதனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே, சாயிபாபாவிடம் சென்று கனிகளையும் காணிக்கைகளையும் சமர்ப்பணம் செய்துவிட்டு "நான் பண்டரிபுரம் செல்ல அனுமதி வேண்டும்" என்று கேட்டார்.

    சாயிபாபா "சீரடிதான் பண்டரிபுரமாக இருக்கிறது.

    இது புரியவில்லையா? உனக்கு எதற்காக அவ்வளவு தூரம், நேரம் காலம், பணம், ஆரோக்கியம், சிரமம்? இவற்றை எல்லாம் செலவு செய்து போகத்தான் வேண்டுமா? என்று கேட்டார்.

    ஒப்புக்கொள்கிறேன்.

    சீரடியே பண்டரிபுரமாக இருக்கட்டும். ஆகால் பாண்டுரங்கன் யார்? என்று புரிய வில்லையே...? என்ற சந்தேகக் கேள்வியுடன் தம் தேகத்தைக் கீழே கடத்தி சாஷ்டாங்கமாக நோக்கினார்.

    அங்கே அவர் கண்களுக்கு, சாயிபாபாவே பாண்டு ரங்க சாமியாக காட்சி அளித்தார். கண்ணீர் மலர்களால் பூஜை செய்து திகைத்தார் தாசகணு.

    • அதைப் பெற்றுக்கொண்டு லட்சுமி ஆலயத்திற்கு வந்தார் பாலகணபதி.
    • என்ன விந்தை! கறுப்பு நிற நாய் ஒன்று அவரை வாலை ஆட்டியவாறே வரவேற்றது.

    பால கணபதி என்ற சாயிபாபா பக்தர் ஒருவருக்கு ஒரு முறை மலேரியா சுரம் வந்து அவதியுற்றார்.

    பல டாக்டர்கள் கவனித்தும், பல மருந்துகள் சாப்பிட்டும் நோய் குணம் ஆகவில்லை. பார்த்தார் பல கணபதி.

    சாயிபாபா தான் சரணம் என சீரடிக்கு பயணமானார். சாயிபாபாவை தரிசனம் செய்தார். அவர் திருவடிகளில் வீழ்ந்தார்.

    பாபா கூறினார்: " வீட்டுக்குப் போ உன் மனைவி தயிர் சாதம் செய்து இருப்பாள்.

    அதை லட்சுமி ஆலயத்தின் வாசலில் கறுப்பு நிற நாய்க்கு கொடு! நோய் என்ற பேய் ஓடிவிடும்" என்று கூறினார்.

    கறுப்பு நாய்க்கு தயிர் சாதம் கொடுத்தால் எப்படி நோய் குணமாகும் என்று சந்தேகம் கொள்ளாமல் நம்பிக்கை பொறுமை இரண்டும் இருகண்கள் என்பதாக நினைத்து, பாலகணபதி தம் இல்லத்திற்கு சென்றார்.

    என் கனவில் பாபா தோன்றி சீக்கிரம் தயிர் சாதம் செய் பசிக்கிறது என்றார் என்று பாலகணபதியிடம் அவருடைய மனைவி தன் கணவனிடம் கூறினாள்.

    ஆகவே தயிர் சாதம் செய்தேன் இந்தாருங்கள் என்று கூறி தயிர் சாதத்தை தந்தாள்.

    அதைப் பெற்றுக்கொண்டு லட்சுமி ஆலயத்திற்கு வந்தார் பாலகணபதி. என்ன விந்தை! கறுப்பு நிற நாய் ஒன்று அவரை வாலை ஆட்டியவாறே வரவேற்றது.

    அந்த ஊரிலேயே வசிக்கும் பாலகணபதி இது நாள் வரையில் அந்த நாயை கண்டதே கிடையாது.

    கறுப்பு நிற நாய்க்கு அன்புடன் தயிர் சாதத்தை கொடுத்தார் பாலகணபதி.

    அதுவும் சாதம் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டது. மறுநாள் மலேரியா நோய் பாலகணபதியை விட்டு எங்கோ மலை ஏறிவிட்டது.

    சாயி பாபாவின் மருத்துவமுறை இந்த உலக மருத்துவ முறையைவிட முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது அல்லவா?

    ×