என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- சில பழமையான ஆலயங்களில், மூலவரே பல்வேறு பெயர்களில் பிரகாரங்களில் தனி தனி சன்னதிகளில் இருப்பதை காணலாம்.
- இந்த இறைமூர்த்தங்களின்அவதார தோற்றம் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு வரலாறும் சிறப்பும் உள்ளது.
ஆலய வழிபாட்டின் போது கருவறை மூலவரை வழிபட்ட பிறகு பிரகாரங்களில் உள்ள தனி சன்னதிகளில் அருள்பாலிக்கும் இறைமூர்த்தங்களையும் நாம் தவறாது வழிபட வேண்டும்.
பக்தர்களில் பெரும்பாலானவர்கள் மூலவரிடம் காட்டும் பயபக்தி உணர்வை பிரகார சன்னதிகளில் வெளிப்படுத்துவதில்லை. இது தவறு.
வைணவத்தலங்களில் கருடர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆஞ்சநேயர் என்று பல்வேறு இறைமூர்த்தங்கள் தனி சன்னதிகளில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சில பழமையான ஆலயங்களில், மூலவரே பல்வேறு பெயர்களில் பிரகாரங்களில் தனி தனி சன்னதிகளில் இருப்பதை காணலாம்.
இந்த இறைமூர்த்தங்களின்அவதார தோற்றம் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு வரலாறும் சிறப்பும் உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் மூலவரின் அம்சமாக பிரதிபிம்பமாகத் திகழும் இந்த இறைமூர்த்தங்கள் குறிப்பிட்ட பலன்களை மக்களுக்கு வாரி, வாரி வழங்கும் ஆற்றல் பெற்றவை.
எனவே ஆலய வழிபாடு செய்யும் போது, அந்த ஆலயத்தில் உள்ள அத்தனை சன்னதிகளிலும் தவறாமல் மனதை ஒருமுகப்படுத்தி வழிபாடுகள் செய்ய வேண்டும்.
சில சன்னதிகளில் அபிஷேக, ஆராதனை, நைவேத்திய, பூஜை முறைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அதற்கு ஏற்ப நாம் வழிபாடுகளை செய்தல் வேண்டும்.
- நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு.
- பெருமாள்கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாகத்தான்.
நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு.
பெருமாள்கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாகத்தான்.
நாரம் என்ற சொல்லுக்கு பிரும்ம ஞானம் என்ற பொருளும் உண்டு. இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துகிறது.
நாராயணன் என்பதை நாரம்+அயணன் என பிரிக்கலாம். நாரம் என்றால் தீர்த்தம். அயணன் என்றால் படுக்கை உடையவன்.
பாற்கடலாகிய தீர்த்தத்தில் பாம்பணையில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்குப் பொருள். நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர்.
நாராயண நாராயண என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார்.
இவர் தோன்றுவதற்கு முன், இந்த உலகில் தண்ணீர் என்பதே குறைவாக இருந்ததாம். அவரது பிறப்புக்கு பின்தான் தண்ணீர் அதிகரித்தது. இதன் காரணமாக அவர் நாரதர் என்ற பெயர் பெற்றார் என்பர்.
நாரதர் போல நாமும் நாராயணன் பெயரை அதிகம் உச்சரித்தால் வெள்ளமாக அருள் மழை பெற முடியும். அதுவும் புரட்டாசியில் உச்சரித்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
- அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூடி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்.
- புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்கார வடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
''மாதவா, என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வந்தால் நூறு அண்டா வெண்ணையும், நூறு அண்டா அக்காரவடிசலும் உனக்கு நிவேதனமாகத் தருகிறேன்...'' திருமாலிருஞ்சோலை அழகரிடம் ஆண்டாள் இப்படி வேண்டிக் கொண்டாள்.
அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூடி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்.
ஆண்டாள், தான் வேண்டியபடி நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் பகவானுக்குக் கொடுத்தாளா, இல்லையா...? சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் ராமானுஜருக்கு வந்தது.
உடனே அந்த மகான் என்ன செய்தார் தெரியுமா? நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதனை செய்தார்.
ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார்.
அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள்.
இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உத்சவமாக கொண்டாடுகிறார்கள்.
அன்று அக்காரஅடிசல் பிரசாதமும் உண்டு. அக்காரை என்றால் சர்க்கரை.
அடிசல் என்பது குழைய வெந்த சாதம். பார்க்க சர்க்கரைப் பொங்கல் போல இருந்தாலும் சர்க்கரைப் பொங்கலுக்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்கார வடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
- ஸ்ரீசுதர்சன அஷ்டோத்தரம் சொல்லி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
- இவ்விதமான வழிபாட்டினால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். வாழ்க்கையில் எந்த விதமான கஷ்டமும் ஏற்படாது.
தினசரி அதிகாலையில் குளித்து முடித்து, தூய்மையுடன், நித்திய கர்மாக்களை முடித்து விட்டு, ஸ்ரீசுதர்சன யந்திரம் முன் உட்கார்ந்து கொண்டு ஸ்ரீசுதர்சனரை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஸ்ரீசுதர்சன அஷ்டோத்தரம் சொல்லி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
இவ்விதமான வழிபாட்டினால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். வாழ்க்கையில் எந்த விதமான கஷ்டமும் ஏற்படாது.
எடுத்த காரியம் யாவிலும் வெற்றி கிடைக்கும்.
ஆபத்துகளிலிருந்து விடுபடுவதும், தீராத நோய்கள் நீங்குவதும், சத்ரு நாசமும், சர்வஜன வசியமும், இஷ்ட காரிய சித்தியும் இந்த வழிபாட்டினால் ஏற்படும்.
இதைப்போலவே, பக்தி சிரத்தையுடன் நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, சுத்தமான இடத்திலோ அல்லது பூஜை அறையிலோ அமர்ந்து, ஒரு பஞ்சபாத்திரத்தில் உள்ள புனித நீரில் சில துளசி தளங்களைச் சேர்த்து, வலது கரத்தால் மூடிக்கொண்டு, வலிமை மிக்க சுதர்சன மகா மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறைக்கு மேல் ஜபித்து பகவான் மீது நம்பிக்கை கொண்டு தீர்த்தத்தை நோயுற்றவர்களுக்குக் கொடுத்தால் நோய் தீர்வதை காணலாம்.
ஸ்ரீசுதர்சன மகாமந்திரம் சர்வ வல்லமை பெற்றது.
உடனே பலன் தரக்கூடியது. எனவே தக்க பெரியோர்களிடம் உபதேசம் பெற்று, அங்க நியாச, கர நியாச, தியான முறைகளோடு சரியான உச்சரிப்புடன் முறைப்படி ஜபிக்க வேண்டியது அவசியம்.
ஸ்ரீசுதர்சன மகா மந்திரத்தை தானே ஜபிப்பதும், மற்றவர் ஜபிக்கக் கேட்பதும், சுதர்சன யாகம் நடக்குமிடத்தில் இருப்பதும் மிகவும் புண்ணியம் தரக்கூடியது.
யாகத்துக்குரிய திரவியங்களைக் கொடுக்கலாம்.
இயலாதவர்கள் பொருளாகவோ, பணமாகேவா யாகத்துரியவர்களிடம் சேர்ப்பிப்பதும் மிகுந்த புண்ணியம் தரும்.
ஏராளமான நற்பலன்களையும் அளிக்கும்.
- யந்திர பூஜையைக் கடைப்பிடிப்போர், ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் தத்துவத்தை மகா யந்திரங்களில் தியானித்து வழிபடுகிறார்கள்.
- மனதை செலுத்தி, அதற்கு திருமஞ்சனம், அர்ச்சனை முதலியவற்றால் வழிபட்டு பயன் பெறுகிறார்கள்.
சுதர்சன சக்கர யந்திர அமைப்பு இரு வகையானது. செப்புத் தகட்டில் வரி வடிவிலேயே முக்கோணம், ஷட்கோணம் போன்ற கோண அமைப்புகளில் ஸ்ரீசுதர்சன வடிவை வழிபடலாம். இது ஒரு முறை.
இன்னொன்று சக்கரத்தில் ஸ்ரீசுதர்சனரின் வடிவை உள்ளடக்கிய விக்கிரக ஆராதனை வழிபாடு.
இந்த இரண்டு வகைகளிலும் சுதர்சனரை வழிபட இயலாமல் போனால், சுதர்சனரை மனக் கண்ணில் இருத்தி, அவரின் பல்வேறு மந்திரங்களை தூய்மையான மனதுடன் சொல்லி வழிபடலாம்.
உடலும் உள்ளமும் சுத்தமான சூழ்நிலையில் இந்த மந்திரங்களை உச்சரிப்பது, நிறைவான பலனை அளிப்பதோடு மனதுக்கு அமைதியையும் கொடுக்கும்.
பகவான் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அருள் புரிவதற்காக, சிலை வடிவம் தாங்கி இந்த பூலோகத்தில் தோன்றினார்.
விக்ரக வழிபாடு முறையில் பகவானை நன்கு அலங்கரித்து அவனது அற்புற அழகிலே லயித்து, அவனது ஆயிரத்தெட்டு நாமாக்களினால் அர்ச்சித்து, ஆராதித்து ஆத்ம சாந்தியைப் பெறுகிறார்கள்.
அதுபோல், பகவான் மந்திர ரூபமாகவும், யந்திர ரூபமாகவும் உருவெடுத்தான். சிலை உருவை வீட்டில் வைத்து வழிபட இயலாதவர்களும் தன்னை வழிபட ஏதுவாக யந்திர உருவம் தாங்கினான் பகவான்.
அதனால், பக்தி சிரேஷ்டர்கள் பகவானை விக்ர ரூபமாகவும், மகா யந்திரத்தின் ரூபமாகவும், சாளக்கிராம ரூபமாகவும் வழிபடுகிறார்கள்.
யந்திர பூஜையைக் கடைப்பிடிப்போர், ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் தத்துவத்தை மகா யந்திரங்களில் தியானித்து வழிபடுகிறார்கள்.
மனதை செலுத்தி, அதற்கு திருமஞ்சனம், அர்ச்சனை முதலியவற்றால் வழிபட்டு பயன் பெறுகிறார்கள்.
மகாசுதர்சன யந்திரத்தை முறையாக வழிபடுவோர், எவ்விதமான இன்னல்களுமற்று, சகல சவுபாக்கியங்களுடன், இன்பமாக வாழ்கிறார்கள்.
ஸ்ரீசுதர்சன உபாசனை வீரம் அளிப்பது. தீர்க்க முடியாத நோய்களும், சுதர்சனரின் கடாட்சத்தால் நீங்கப் பெறும்.
போர்முனையில் வெற்றித் திருமகளின் கடாட்சத்தைப் பெறுவதே, தமது லட்சியமாகக் கொண்ட வீரவாழ்வு வாழ்ந்த பல மாமன்னர்கள், சுதர்சன உபாசனை செய்தவர்களாகவே இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- கோதுமையில் செய்த ரொட்டியைப் பொடி செய்து தயாரிக்கப்பட்ட பலகாரம், வாழைப்பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும்.
- ஆஞ்சநேயரின் சரீரத்தில் தைலம் கலந்த செந்தூரத்தைப் பூச வேண்டும். இதனால் விரும்பிய பலன்களைப் பெறலாம்.
ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம்.
அதற்கு வசதிப்படாதவர்கள் புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடலாம்.
ஸ்ரீஆஞ்சநேயரின் திருவுருவப் படத்தையோ அல்லது ராமர் பட்டாபிஷேகத்தையோ பூஜையில் வைத்து, அவருக்கு நைவேத்தியமாக அவரவர் வசதிக்கேற்ப பழங்களையும், வடை போன்ற இன்ன பிறவற்றையும் சமர்ப்பிக்கலாம்.
துளசி மாலையும், வெற்றிலைச்சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விசேஷமானவை.
பூஜையை ஆரம்பிக்கும்போது 'ஸ்ரீராமஜெயம்' அல்லது "ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம" என்ற மந்திரத்தை 54 முறை அல்லது 108 முறை தியானிக்க வேண்டும்.
அதன்பிறகு தமது பிரார்த்தனையை சொல்லி நாமாவளி மற்றும் மலர் வழிபாட்டினால் அர்ச்சனை செய்ய வேண்டும். கவசம் மற்றும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.
ஓம் ஹம் ஹனுமதே நம... என்ற மந்திரத்தை சொல்லி அனுமனின் தலையில் துளசிகளும் வாசனை மலர்களும் வைத்தால் கஷ்டங்கள் யாவும் பறந்து போகும்.
அனுமனின் ஆரத்தியின்போது 5, 11, 50, 108 நெய் நிரப்பிய சிவப்பு திரியைப் பயன்படுத்த வேண்டும்.
கோதுமையில் செய்த ரொட்டியைப் பொடி செய்து தயாரிக்கப்பட்ட பலகாரம், வாழைப்பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும்.
ஆஞ்சநேயரின் சரீரத்தில் தைலம் கலந்த செந்தூரத்தைப் பூச வேண்டும். இவ்வாறு செய்வதால் விரும்பிய பலன்களைப் பெறலாம்.
ஆஞ்சநேய விரதம் இருந்தால் பிரிந்து சென்ற கணவன்மனைவி வாழ்வில் ஒற்றுமையாக இருப்பர். பகை மாறி வெற்றி உண்டாகும்.
தாய், தந்தை, அண்ணன், தம்பி உறவு பலம்பெறும். ஆத்ம பலம், சம்பத் பலம் ஆகிய ஆறு வகையான பலன்களும் நிரந்தரமாக கிடைக்கப்பெறுவர்.
அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சகல வியாதிகளும் விலகும். மோட்சம் பெறலாம்.
- கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.
- எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.
விஷ்ணு கோவிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத்தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும்.
கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.
கோவிலில் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதன் அருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம். கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோவிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்துள்ளது.
இவரை வணங்கிய பின் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். அதன்பின் லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், சரஸ்வதி, ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்க வேண்டும்.
கோவிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும்.
அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும், பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படும்படியாக பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும்படியாக சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.
- மாலை வேளைகளில் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
- ஆறாவது நாள் இரவு யானை வாகனத்தில் பகவான் பவனி வருவார்.
ஐந்தாம் நாள் திருவிழா அன்று காலையில் மோகினி அவதார உத்சவம் நடைபெறும். இரவு எம்பெருமான் கருடாழ்வார் மீது பவனி வந்து அருட்காட்சி தந்து அருளுகிறார்.
கருட வாகனத்திற்கு வெண்பட்டுக் குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. ஆறு பெரிய குடைகளும், நான்கு சிறிய குடைகளும் சமர்ப்பிக்கப்படும்.
இக்குடைகள் சென்னையிலிருந்து திருமலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
கருடோத்சவ தினத்தன்று மூலவருக்கு அணிவிப்பதற்காக விலை உயர்ந்த பட்டாடைகள் தயாரித்து ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்து தினசரி பூஜை செய்வர்.
காலை, மாலை இரு வேளைகளிலும், சின்ன சேஷவாகனம், பெரிய சேஷவாகனம், தங்கத் திருச்சி, ஹம்சவாகனம், முத்துப்பந்தல், கல்ப விருஷம், சர்வ பூபால வாகனங்கள், பல்லக்கு கருட சேர்வை, ஹனுமந்த வாகனம், சூரிய, சந்திரப்பிரபை வாகனம், திருத்தேர், குதிரை வாகனம் இப்படி பல வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா வருகிறார்.
குடை, சாமரம், மங்கள வாத்தியம் முதலியவற்றுடன் வடமொழி மறையும், தென் மொழி மறையும் பாராயணம் செய்ய பக்தர்களின் பஜனை புடை சூழ பிரம்ம உத்சவம் நடைபெறும். இத்திருவிழா காண்போரை இன்பக்கடலில் மூழ்கச் செய்யும்.
மாலை வேளைகளில் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
ஆறாவது நாள் இரவு யானை வாகனத்தில் பகவான் பவனி வருவார்.
இதற்கு முன்பாக வசந்த உத்சவம் நடைபெறும். வெள்ளை வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு குங்குமக் குழம்புடன் கூடிய சந்தனத்தை வாரி அள்ளி வழங்கிக் கொண்டு பவனி வருகிறார்.
தேர் திருவிழா அன்ற பகவான் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
திருவிழாவின் கடைசி தினமான திருவோணத்தன்று சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு நீரோட்டம் நடைபெறும்.
பின் கொடியிறக்கம் (துவஜாவரோகணம்) நடைபெற்றுத் திருவிழா இனிதே நடைபெறுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் பிரம்ம உத்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
- “திருமலையில் ஸ்ரீவேங்கடேசுவரருக்கு பிறப்பு கடவுளான பிரமன்தானே முன்னின்று இவ்விழாவை நடத்தி வைத்தார்.
- பிரம்மனால் நடத்தப்பட்ட உற்சவம் ஆகையால் இது பிரம்மோத்சவம் என்று அழைக்கப்பட்டது.
புரட்டாசி திருவோணம், திருவேங்கடவனின் பிறந்த நாளாகத் தொன்று தொட்டு கருதப்பட்டு வருகிறது.
இந்த திருவோண தினத்திற்கு முன்பாக ஒன்பது நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் பல வாகனங்களில் விசேஷ அலங்காரங்களுடன் உற்சவமூர்த்தியான திருமலை அப்பன் அமர்ந்து திருவீதி வலம் வருகிறார்.
"திருமலையில் ஸ்ரீவேங்கடேசுவரருக்கு பிறப்பு கடவுளான பிரமன்தானே முன்னின்று இவ்விழாவை நடத்தி வைத்தார்.
பிரம்மனால் நடத்தப்பட்ட உற்சவம் ஆகையால் இது பிரம்மோத்சவம் என்று அழைக்கப்பட்டது.
கி.பி.966 ம் ஆண்டில் ஒருமுறை பிரம்மன் திருவிழா நடைபெற்று வந்ததாகவும், அதன்பிறகு புரட்டாசியில் ஒன்றும், மார்கழியில் ஒன்றுமாக இரண்டு தடவை நடத்தப்பட்டன என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.
திருமலையின் மூன்றாம் சுற்றுச்சுவற்றிலுள்ள ஒரு கல்வெட்டில் 1551-ம் வருடத்தில் பதினொரு பிரம்மோத்சவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கிறது. கொடியேற்றத்துடன் பிரம்ம உற்சவம் தொடங்கும்.
பிரம்மோத்சவத்தில் ஊஞ்சல் சேவையைக் காண்போருக்கு இம்மையிலும், மறுமையிலும் கோடான கோடி இன்பமும் பெருகும்.
- புரட்டாசி பவுணர்மியன்று சிவபிரானை (வருடம் தோறும்) காலையில் வழிபட்டால் முற்பிறப்பு தீவினைகள் எல்லாம் ஒழியும்.
- மாலையில் வழிபட்டால் ஏழு பிறவிகள் தோறும் முற்றிய தீவினைகள் எல்லாம் ஒழிவதோடல்லாமல் விரும்பியன எல்லாம் வந்து சேரும்.
புரட்டாசி மாதத்தில் நவராத்திரியில் அன்னை கொலு விருந்து 10 வது நாள் விஜயதசமி அன்று மகிஷனை வதம் செய்தாள்.
அதனால் எழுந்த கோபத்தினால் அன்னை உக்கிரமாக இருந்தாள்.
பவுர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றித் துதித்தனர்.
அதன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பவுர்ணமியில் சாந்த சொரூபிணியாக அன்னை காட்சி அளித்தாள்.
நவராத்திரி விரதமிருப்பவர்கள் புரட்டாசி மாத பவுர்ணமி அன்றும் விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்பவர்கள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.
புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள்.
பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.
இந்நாளில் விரதம் இருப்பவர்கள் இரவில் குறைவான எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஆகாரத்தை உண்ண வேண்டும். இவ்வாறு உண்டால் நள்ளிரவில் தியானம் செய்வதற்கும், பிராணாயமம் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும்.
இந்தச் சக்தியை நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கு மேலும் மேலும் இறைவனின் அருள் கிடைக்கும். இப்படி பட்டவர்களுக்கு நல்ல தேஜசும் நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தியும் கிடைக்கும்.
இவர்கள் எந்த காரியத்தைத் தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும்.
புரட்டாசி பவுணர்மியன்று சிவபிரானை (வருடம் தோறும்) காலையில் வழிபட்டால் முற்பிறப்பு தீவினைகள் எல்லாம் ஒழியும்.
மதியம் வழிபட்டால் முற்பிறவியோடு இப்பிறப்பு தீவினைகளும் ஒழியும்.
மாலையில் வழிபட்டால் ஏழு பிறவிகள் தோறும் முற்றிய தீவினைகள் எல்லாம் ஒழிவதோடல்லாமல் விரும்பியன எல்லாம் வந்து சேரும்.
- அவை மண்மலர்கள்தான் என்பதை மீண்டும் மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன.
- கதவுகள் அனைத்தையும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையைத் தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது.
ஏழுமலையான், தனக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம்தான், அதிலும் சனிக் கிழமைதான் எனக்கு உகந்த நாள் என்கிறார். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது.
அந்த கதை வருமாறு:-
மன்னன் தொண்டைமானுக்கு ஏழுமலையான் மீது பற்றும், பாசமும் அதிகம்.
எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான்.
அதன்படியே பூஜையும் செய்து வந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுவதைக் கண்டான்.
திடுக்கிட்ட அவன், அவை மண்மலர்கள்தானா எனக் கூர்ந்து நோக்கினான்.
அவை மண்மலர்கள்தான் என்பதை மீண்டும் மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன.
கதவுகள் அனைத்தையும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையைத் தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது.
மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.
குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம்.
தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான்.
வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.
பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம். பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான்.
அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான். இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான்.
அச்சமயங்களில்தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான்.
காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகி விட்டது. இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான்.
அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, `தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்தப் பூஜையை நீயும் செய்து பார், அப்போது உண்மை விளங்கும்' என்று கூறி மறைந்தார்.
தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான்.
தினமும் செய்வது போலவே, பீமய்யன் தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலை அருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களைத் தூவி இறைவனை வழிபடுவதை கண்டான் தொண்டைமன்னன்.
உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிய தொண்டைமான் அவனிடம், `உன் பக்தி உயர்வான பக்தி.
உனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன்' என்றான்.
இதற்கிடையில் அந்தப் பரந்தாமன் பீமய்யனின் கனவிலும் தோன்றி, `உன் பக்தி யின் பெருமையை என்று பிறர்கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துக் கொள்வேன்' எனக் கூறியிருந்தார்.
அதன்படியே தொண்டைமான், பீமய்யனின் பக்தியை பாராட்டியதைக் கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது.
எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது.
- தன்னை நம்பும் பக்தர்களிடம் அத்தனை அன்பும், கருணையும் அவருக்கு உண்டு.
- ஆதலால்தான் ‘பக்தவத்சலன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. தன் பக்தர்களுக்கு குழந்தை போன்றவன் என்பது பொருள்.
நரசிம்மருடைய அவதாரத் தோற்றம், சிம்ம முக உருவில் பயங்கரமாகவும், பக்தனான குழந்தை பிரகலாதனுக்கு இரணியகசிபு இழைத்த கொடுமைகளினால் உக்கிரமான கோபம் கொண்டவராகவும் சேவை சாதிப்பதால், அவரை பூஜிப்பது கடினம் என்று பலர், தவறான கருத்தை கொண்டுள்ளனர்.
தனக்கு அபசாரம் செய்தவர்களை நரசிம்மர் பொறுத்துக் கொள்வார். ஆனால் தனது பக்தர்களுக்கு அநீதி செய்பவர்களை பொறுத்துக் கொள்ள அவரால் முடியாது.
ஏனெனில் தன்னை நம்பும் பக்தர்களிடம் அத்தனை அன்பும், கருணையும் அவருக்கு உண்டு. ஆதலால்தான் 'பக்தவத்சலன்' என்ற திருநாமம் ஏற்பட்டது. அதாவது, தன் பக்தர்களுக்கு குழந்தை போன்றவன் என்பது பொருள்.
நம்மிடம் அளவற்ற கருணை கொணட ஸ்ரீநரசிம்மரிடம் பயம் ஏன்?
நரசிம்மரை பூஜித்து வழிபடுவது மிகவும் சுலபம். அனைவருக்கும் அவர் எளிதானவர்.
முற்பிறவித் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தையும் ஒரு நொடியில் போக்கி அருளக்கூடிய ஆற்றல் நரசிம்மரைக் கிரக தோஷப் பரிகாரமாக எவரும் வழிபடலாம். அதற்கு உடனடியாக பலனும் காண முடியும்.
தினமும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் படத்தை வைத்து, நெய் தீபம் ஏற்றிக் குறைந்தது 12 முறையாவது வலம் வந்து வணங்க வேண்டும். வணங்கிய பிறகு வெல்லத்தினால் செய்த பானகம் நைவேத்தியம் வேண்டும்.
48 நாள்களாவது பூஜித்து வர வேண்டும். மாலை நேரத்தில் செய்வது விசேஷப் பலன் தரும். ஏனெனில் அவர் நரசிங்கமாக அவதரித்தது மாலை நேரத்தில்தான்.
ஆனால் ஒன்று, ஸ்ரீலட்சுமி நரசிம்மர் மட்டுமின்றி, தெய்வத்தின் எந்த உருவையும், தோஷப் பரிகாரமாகப் பூஜித்து வரும் காலத்தில், அசைவ உணவைத் தவிர்ப்பதும், நீராடி, நியமத்துடனும், தூய்மையான உள்ளத்துடனும் நம்பிக்கை, பக்தியுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஸ்ரீநரசிம்மரை பிரதோஷத்தன்று வழிபடுவது சிறப்பாகும்.
அன்று மாலை லட்சுமி நரசிம்மர் போட்டோவை வீட்டில் வைத்து சந்தனம், துளசியால் அலங்கரித்து பானகம் வைத்து வழிபடவும்.
ஸ்ரீலட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்றும், செவ்வாய்க்கிழமையிலும், பிரதோஷ நாளன்றும் வழிபடலாம். நரசிம்மர் துதியை தினமும் சொல்லி தியானித்துவர ஏவல், பில்லி சூனியம், காரிய தடை, கடன் தொல்லை இவைகள் நீங்கி சுகம் பெறலாம்.
திருமண தடை உள்ளவர்கள் பிரதோஷ தினத்தன்று பானகம் வைத்து நரசிம்மரை வழிபட்டு வர வேண்டும். நரசிம்மர் அருளால் விரைவில் தடை நீங்கி நல்லபடியாக திருமணம் நடைபெறும்.






