என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- அம்பிகையை மயில்வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும்.
- இவளை கவுமாரி என்றும், குமார கணநாதாம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பவள் இவள்.
அம்பிகையை மயில்வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும்.
இவளை கவுமாரி என்றும், குமார கணநாதாம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பவள் இவள்.
மதுரை மீனாட்சியம்மன் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலையில் காட்சி தருகிறாள். மதுரையை ஆட்சி செய்த சுகுணபாண்டியன், மறுபிறவியில் கருங்குருவியாகப் பிறந்தான்.
மற்ற பறவைகள் துன்புறுத்தியதால் காட்டிற்கு பறந்த அக்குருவி, ஒரு மரத்தில் தங்கியது.
அங்கு வந்த சிவபக்தர் ஒருவர், சிவநாமத்தை ஜெபிக்க கேட்ட குருவி ஞானம் அடைந்தது. குருவியும் மதுரை கோவிலுக்கு வந்து, குளத்தில் நீராடி ஈசனை வழிபட்டது.
சிவனும் குருவிக்கு மந்திர உபதேசம் செய்தருளி, குருவியினத்தில் வலிமை மிக்க வலியன் குருவியாக இருக்க வரமளித்தார்.
இக்கோலத்தை தரிசித்தால் மன வலிமை உண்டாகும்.
நைவேத்யம்: தயிர் சாதம்
தூவ வேண்டிய மலர்: முல்லை
- நவராத்திரியின் முதல்நாளில் அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று பெயர் சூட்டி வணங்க வேண்டும்.
- மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமான இவளை, இந்நாளில் சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும்.
நவராத்திரியின் முதல்நாளில் அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று பெயர் சூட்டி வணங்க வேண்டும்.
மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமான இவளை, இந்நாளில் சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும்.
மதுரை மீனாட்சி அன்றைய நாளில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.
அண்ட சராசரத்துக்கும் அம்பிகையே தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும்.
அண்டம் என்றால் உலகம். சரம் என்றால் அசைகின்ற பொருட்கள். அசரம் என்றால் அசையாத பொருட்கள்.
ஆம்.... அன்னை ராஜராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.
இக்கோலத்தை தரிசித்தால் ராஜபோக வாழ்வு கிடைக்கும்.
நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
தூவும் மலர்கள்: மல்லிகை, வில்வம்
- மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள்.
- அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள்.
முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள்.
அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை.
அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர்.
இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர்.
அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர்.
ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.
மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள்.
அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள்.
அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது.
அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.
அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.
ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு.
மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.
அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.
- இதன் பலனாக அனுமனுக்கு தெற்கு நோக்கி நரசிம்மர் தலை முளைத்தது.
- நரசிம்மரின் முகம் பூதம், பிசாசு தொல்லைகளில் இருந்து மக்களை காப்பாற்றும்.
ராமபிரானுக்காக பிரதிபலன் பாராமல் உழைத்த ஆஞ்சநேயருக்கு வைகுண்டத்தில் என்ன பதவி கொடுப்பது என்று ஒருமுறை ஆலோசனை நடந்தது.
நீண்ட ஆய்வுக்கு பிறகு அனைவரும் ஒருமனதாக கடைசியில் வரப்போகும் யுகத்திற்கு, அவரை பிரம்மாவாக தேர்ந்து எடுக்கலாம் என்று முடிவு செய்தனர்.
தேவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.
பிறகு தேவர்கள் பூலோகம் வந்து பிரம்மனுக்குரிய சின்னங்¢களான சங்கு, சக்கரம், கிரீடம், குண்டலம் இவற்றை அனுமனிடம் அளித்தார்கள்.
ஆனால் அனுமன் அதை ஏற்க மறுத்தார். "ராம நாமமே" எனக்கு மனநிறைவைத் தருகிறது. மேலும் எனக்கு பிரம்மாவின் வேலை என்ன என்பதே தெரியாதே! என்றார்.
அப்போது மகாவிஷ்ணு தோன்றினார். "பிரம்மாவின் படைப்பு விந்தைகள் உனக்கே தெரியும். தெரியாததை நான் கிருஷ்ண அவதாரம் எடுக்கும் போது சொல்வேன்" என்று கூறி மறைந்தார்.
கிருஷ்ண அவதாரத்தில் நடந்த பாரத போரில் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு சாரதியாக இருந்து கீதா உபதேசம் செய்தார். அது அர்ஜூனனுக்கு மட்டுமல்ல. தேரில் கொடியாக இருந்த அனுமனுக்கும் தான்.
பிரம்மாவாக ஆவதற்கு நான்கு சக்திகள் தேவை. அம்ருதம் எனப்படும் உயிருட்டும் சக்தி. விஷத்தை அடக்கும் சக்தி. நிலைநிறுத்தும் சக்தி. மற்றும் குரு மண்டலத்தில் அகர ஸ்தானம் வகிக்கும் சக்தி.
இந்த நான்கு சக்திகளையும் பெற்றால் தான் பிரம்மா செய்யும் வேலைகளை செய்ய முடியும். இதை கருத்தில் கொண்டு தான், ஆஞ்சநேயர், நான் ராம நாமம் ஜபித்துக்கொண்டு இருக்கிறேன்.
இதெல்லாம் எனக்கு வேண்டாம் என்று கூறினார்.
ஆனாலும் மும்மூர்த்திகளும் கேட்கவில்லை.
அதனால் அம்ருதம் வர்ஷிக்க ஸ்ரீ நரசிம்மத்தை குறித்து தவம் செய்தார்.
இதன் பலனாக அனுமனுக்கு தெற்கு நோக்கி நரசிம்மர் தலை முளைத்தது.
நரசிம்மரின் முகம் பூதம், பிசாசு தொல்லைகளில் இருந்து மக்களை காப்பாற்றும்.
கருடனை குறித்து தவம் செய்தார். அதன் பயன் கருட முகம் கிழக்கு நோக்கி முளைத்தது.
கருட முகம் பாம்பு போன்ற கொடிய விஷங்களில் இருந்து காப்பாற்றுகிறது.
வராக மூர்த்தியை நோக்கி தவம் செய்யும் போது வடக்கு நோக்கி வராக முகம் முளைத்தது.
வராக மூர்த்தியின் முகம் பக்தர்களுடைய உடல் பிணிகளை அகற்றும்.
ஹயக்கீரிவரை நோக்கி தவம் செய்தார்.
அதனால் அவரது முகம் மேல்புறம் தோன்றியது. ஹயக்கீரிவருடைய முகம் பக்தர்களுக்கு அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தை கொடுக்கக்கூடியது.
இப்படி பிரம்ம பதவி தகுதிக்கு நிகரான அனைத்து சக்திகளும் ஆஞ்சநேயருக்கு கிடைத்தன.
ஏற்கனவே சங்கு சக்கரம், அஷ்டதிக்பாலர்களின் சக்திகள், விஷ்ணு சக்தி, மூன்றாவது கண் எல்லாம் பெற்ற ஆஞ்சநேயருக்கு இந்த சக்திகள் மேலும் பலத்தைக் கொடுத்தன.
இதனால் தான் ஆஞ்சநேயரை நாம் வணங்கும் போது புத்தி, பலம், புகழ் மன உறுதி, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்கு வன்மை இத்தனையையும் நமக்கு தந்து ஆசீர்வதிப்பார் என்ற ஐதீகம் உள்ளது.
- தர்ப்பாரணியேஸ்வரரை ஸ்தாபித்து தன் சொரூப பிம்பத்தினடியில் தன் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் சனி பகவான்.
- இந்த எட்டு தலங்களில் நவக்கிரகங்கள் தூலமாகவும் மூர்த்திகளாகவும் வீற்றிருக்கின்றனர்.
சனீஸ்வரர் -திருநள்ளாறு:தர்ப்பாரணியேஸ்வரர்
திருநள்ளாற்றில் தர்ப்பாரணியேஸ்வரரை ஸ்தாபித்து தன் சொரூப பிம்பத்தினடியில் தன் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் சனி பகவான்.
ராகுகேது: காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர்
இவ்விரு கிரகங்களுக்கு தன் இஷ்ட தெய்வமாகிய வாயு லிங்கத்தை ஸ்தாபித்து அதன் காலடியில் தங்கள் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த எட்டு தலங்களில் நவக்கிரகங்கள் தூலமாகவும் மூர்த்திகளாகவும் வீற்றிருக்கின்றனர்.
இந்த மகிமை அநேக சதுர்யுகங்களுக்கும் மகாபிரளய காலம் வரை நீடிக்கும் என்று திருமூலர் அருளியிருக்கும் நாடி கிரந்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
- திருச்செந்தூரில் ஸ்ரீபாலசுப்பிரமணியமாய் தம்மைத்தாமே ஸ்தாபித்துக்கொண்டிருக்கிறார்.
- சுற்றிலும் நீர் நிலையாக உள்ள ஸ்ரீரங்கத்தை தன் பிரதிஷ்டா ஸ்தலமாக சுக்கிரன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
புதன்: மதுரை சுந்தரேஸ்வரர்.
சொக்கநாதரையும் மகாமாரியையும் ஸ்தாபித்து சுந்தரேஸ்sவரர் பாதத்தில் புதன் தன்னை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.
குரு:திருச்செந்தூர் முருகன்.
திருச்செந்தூரில் ஸ்ரீபாலசுப்பிரமணியமாய் தம்மைத்தாமே ஸ்தாபித்துக்கொண்டிருக்கிறார்.
சுக்கிரன்:ஸ்ரீரங்கம் ரங்கநாதன்.
நான்கு ராஜாக்களில் ஒருவரான ஸ்ரீரங்கநாதரை (தியாகராஜா, ரங்கராஜா, நடராஜா, கோவிந்தராஜா) காவேரி அரங்கத்தில் எழுந்தருள செய்து அவர் காலடியில் தன்யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.
சில நாடிக்கிரந்தங்களில் சுக்கிரனை நீர் என்று குறிப்பிட்டிருக்கிறது.
சுற்றிலும் நீர் நிலையாக உள்ள ஸ்ரீரங்கத்தை தன் பிரதிஷ்டா ஸ்தலமாக சுக்கிரன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
- சுதர்சன சுக்ராதிபதியான வேங்கடேசப்பெருமானின் காலடியில் தன் காயத்ரீயை ஸ்தாபித்துக்கொண்டிருக்கிறார் சந்திரன்.
சூரியன்: சூரியனார் கோவில், சூரிய நாராயணார்
மூர்த்தியின் பெயர் சிவ நாராயண சுவாமி.
இங்கு சிவசொரூபியான சூரியன் தன் இஷ்ட தெய்வமாகிய பிரணவ சொரூபியாயும், பிரும்ம விஷ்ணு ருத்ர ரூபியாயும் இருக்கிற லிங்கத்தை ஸ்தாபித்துக்கொண்டு தமது திருக்கோலத்தையும் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.
சந்திரன், திருமலை, திருப்பதி, வேங்கடாஜலபதி,
சேஷாசலம் என்கிற திருவேங்கட சேத்திரத்தில் சுதர்சன சுக்ராதிபதியான வேங்கடேசப்பெருமானின் காலடியில் தன் காயத்ரீயை ஸ்தாபித்துக்கொண்டிருக்கிறார் சந்திரன்.
செவ்வாய்: பழனி தண்டாயுதபாணி.
வடக்கில் பிரகதீஸ்வரரும், தெற்கில் காளியும் சுற்றிலும் ஆறு சேத்திரங்களையுடைய தண்டாயுதபாணியை ஸ்தாபித்து அவர் காலடியில் தன் காயத்ரீயை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் அங்காரகன்.
- ராமப்பிரியா ராகத்தில் ராகு கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
- சண்முகப் பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
ராகு
ராகு பகவானுக்கு ஏதாவது ஒரு கிழமைகளில் அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம், கோமேதக மணி நீலமந்தாரை, இலுப்பைபூ ஆகியவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஜெபித்து, அருகம்புல்லால் யாக்தீயை எழுப்பி உளுந்து தானியம், உளுத்தம் பருப்பு பொடி, அன்னம் ஆகியவற்றால் ஆகுதி செய்து தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, ராமப்பிரியா ராகத்தில் ராகு கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
இப்படி செய்தால் ராகு கிரகதோஷம் நீங்கும்.
ராகு-திருநாகேஸ்வரம்
கும்பகோணத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ராகு பகவானுக்கு ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்து பூஜை செய்யப்படுகிறது.
கேது
கேது பகவானுக்கு ஏதாவது ஒரு கிழமைகளில் அபிஷேகம் செய்து பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லி மலர் ஆகியவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதி தருப்பையினால் யாகத்தீயை எழுப்பி கொள்ளு தானியம், கொள்ளு பொடி, அன்னம் ஆகியவற்றைல் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேந்தியம் கொடுக்க சண்முகப் பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
இப்படி செய்தால் கேது கிரக தோஷம் நீங்கும்.
குறிப்பு: நவக்கிரக கீர்த்தனைகளை முத்துசாமி தீட்சரும் முத்தையா பாகவதரும் இயற்றி இருக்கிறார்கள்.
- பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிராத்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
- யதுகுலகாம் போதி ராகத்தில் சனிபகவானை கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
சுக்கிரன்
சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்திரம், வைரக்கல், வெண் தாமரை மலர் போன்றவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி அத்திச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பி மொச்சைப் பொடியன்னம் தயிரன்னம் ஆகியவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிராத்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
இப்படி செய்தால் சுக்கிரக் கிரக தோஷம் நீங்கும்.
சனி
சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் அபிஷேகம் செய்து கருப்பு வஸ்திரம், நீலக்கல், நீலோற்பலம் (கருங்குவளை) ஆகியவைகளால் அலங்காரம் செய்து சனிபகவானின் மந்திரங்களை ஓதி வன்னிச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பி எள்ளுத்தானியம், எள்ளுப்பொடி, அன்னம் ஆகியவைகளால் பூஜை செய்து தீபாராதனை செய்து நல்லெண்ணை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து, தூப தீப நைவேத்தியம் கொடுத்து, யதுகுலகாம் போதி ராகத்தில் சனிபகவானை கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
இப்படி செய்தால் சனிக்கிரக தோஷம் நீங்கும்.
- நாட்டக் குறிஞ்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்துகொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
- அடாணா ராகத்தில் குரு கீர்த்ததனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
புதன்
புதன் பகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகதமணி வெண்தாமரை போன்றவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி நாயுருவி சமித்தால் யாகத் தீயை எழுப்பிப் பாசிப் பயத்தம் பருப்பு பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, நாட்டக் குறிஞ்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்துகொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
இப்படிச் செய்தால் புதன் கிரகதோஷம் நீங்கும்.
குரு
குரு பகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம், புஷ்பராகமணி, வெண் முல்லை போன்றவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி அரசஞ்சமித்தினால் யாகத்தீயை எழுப்பிக் கடலைப் பொடி அன்னம் எலுமிச்சம்பழ அன்னம் ஆகியவற்றால் ஆகுதி பண்ணித் தீபாரதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, அடாணா ராகத்தில் குரு கீர்த்ததனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.
- வைத்தீஸ்வரன் கோவில் தலம் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருபெரும் அருளாளர்களால் பாடல் பெற்ற தலமாகும்.
- அங்காரகன் சடாயு, ரிக்வேதம், அம்பிகை, முருகன், சூரியன் ஆகியோர் வழிபட்ட தலம்.
வைத்தீஸ்வரன் கோவில் தலம் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருபெரும் அருளாளர்களால் பாடல் பெற்ற தலமாகும்.
அங்காரகன் சடாயு, ரிக்வேதம், அம்பிகை, முருகன், சூரியன் ஆகியோர் வழிபட்ட தலம்.
சூரபத்மனின் மார்பை பிளக்க முருகப் பெருமான் வேல் வாங்கிய தலம்.
காமதேனு இறைவன் மீது பாலைப்பொழிந்து அபிஷேகம் செய்த தலம்.
சித்தர்கள் இறைவனது திருமுடியில் அமிர்தத்தால் அபிஷேகம் செய்த தலம்.
செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் அங்காரகனால் துன்பம் வரும் எனக்கருதுபவர்கள் திருஞான சம்பந்தப்பெருமான் அருளிய இரண்டாம் தமிழ்வேதப் பதிகத்தைப் பாராயணம் செய்து வருதல் வேண்டும்.
முடிவில் இத்தலத்திற்கு சென்று சிவலிங்கத்திருமேனியை வழிபாடு செய்து வருதல் வேண்டும்.
இம்மூர்த்தியை வழிபட்டே அங்காரகன் தனது தோஷத்தை போக்கிக் கொண்டான்.
- செவ்வாய் தோஷ பரிகாரங்கள் பல வகைகளில் செய்யப்படுகின்றன.
- செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும்.
செவ்வாய் தோஷம் காரணமாக சிலருக்கு திருமணம் நடைபெறக் காலதாமதம் ஏற்படக்கூடும். அதற்கு பரிகாரம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
செவ்வாய் தோஷ பரிகாரங்கள் பல வகைகளில் செய்யப்படுகின்றன.
செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும்.
41 செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். விரதநாள் அன்று அதிகாலை எழுந்து நீராடி சிவந்த ஆடை உடுத்தி, செவ்வாய் கிரகத்திற்கு செண்பகப்பூ, சிவப்பு அலரி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
விரதம் பூர்த்தி செய்யும் நாள் ஐந்து பேருக்கு விருந்து அளிக்க வேண்டும்.
அவர்களுக்கு சிவப்பு நிறத்தில் ஆடைகள், செம்பு சொம்பு, தம்ளர் மற்றும் தாம்பூலத்துடன் தட்சணையும் அளித்து அவர்களை வணங்கி ஆசிபெற வேண்டும்.
செவ்வாய் தோஷமுள்ள பெண்ணுக்கு திருமணம் தடங்கலாகிக் கொண்டே வந்தால் வளர்பிறையில் வரும் செவ்வாய்க்கிழமையில் பரிகாரம் செய்ய வேண்டும்.
அந்த பரிகாரத்தை நாமே நம் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நீராடி சிவந்த ஆடை உடுத்தி மாங்கல்யத்தை தெய்வத்தின் முன் மஞ்சள் சரட்டில் கோர்த்து வைத்து வணங்கி எடுத்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.
செவ்வாய்க்கிழமை முழுவதும் மாங்கல்யத்தை அவிழ்க்க கூடாது.
மறுநாள் காலை நீராடி நெற்றியில் குங்குமமிட்டு தெய்வத்தை வணங்கி மாங்கல்யத்தை அவிழ்த்து ஏதாவது ஓர் ஆலயத்தின் உண்டியலில் சிறிது காணிக்கை சேர்த்து சமர்ப்பித்து விட வேண்டும்.
சிவந்த ஆடையை யாருக்காவது தானம் செய்துவிட வேண்டும்.
இவ்விதம் செய்தால் திருமணம் தடையின்றி விரைவாக நடைபெற்று விடும்.






